'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை!'
>> Wednesday, October 29, 2008
'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை!'
இந்த வாசகத்தில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன..! யாரோ ஒருவர் நமக்காகப் போராட வேண்டும். நாம் வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் பலரின் எண்ணங்களிலும் கடந்த 51 ஆண்டுகளாக விதைக்கப்பட்டுவிட்டச் சிந்தனைகள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் சுதந்திரத்திற்காக அனைவரும் போராடவில்லை, ஒரு சிலரின் தியாகத்தின்வழி கிடைத்த சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்கிறோம். இதுதான் உண்மை, ஆனால் இவ்வுண்மையில்தான் எவ்வளவு முரண்பாடு!
போராட்டம் என்பது ஏன் கடினமாகிறது? ஒரு சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் பங்கெடுத்தால் போராட்டம் என்பது அவல் திண்பது போன்றது என்கிறார் பிரபல எழுத்தாளரும் தன்முனைப்பாளருமான திரு.சீவ் கேரா.
ஆனால் உண்மையில் அப்படி நிகழாதிருப்பது நிதர்சனத்தின் அவல நிலை!
வாய்ச்சொல்லில் வீரர்கள் ஒருபுறம், பட்டம், பதவிகளுக்கென்று ஒருக்கூட்டம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு ஒருபுறம் என உரிமைப் போராட்டத்தை நாற்றமெடுத்த சாக்கடையாக்கிக் கொண்டிருக்க, அவற்றிலிருந்து மீண்டு வர அப்பாவி மக்களுக்கே போதும் போதும் என்று ஆகி விடுகிறது. இதில் உரிமையை எங்கு மீட்டெடுப்பது?!
இதுதான் பலரின் பொதுவான கருத்து!
ஆனால் அடுத்த 50 ஆண்டுகள் கடந்த 50 ஆண்டுகளைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இல்லையென்றால் நீங்கள் விரும்பும் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..?
சீவ் கேரா பதில் கூறுகிறார்..
”வெற்றியாளர்கள் என்றுமே முற்றிலும் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை! ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் !” -சீவ் கேரா-
3 கருத்து ஓலை(கள்):
தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துகள் அன்பரே.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையிலும் உண்மை. பலர் எதையும் வேறு யாராவது செய்யவேண்டும், ஆனால் அதன் பலனை மட்டும் தானும் அனுபவிக்கவேண்டுமென்றுக் கருதுகிறார்கள். தன் குடும்பம், தம் பெண்டிர், தம் மக்கள் என்ற குறுகிய உள்ளத்துடனே இவர்கள் வாழ்க்கிறார்கள்.அனைவரின் தியாகத்தின் மூலமே விரைவில் ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். நேரடியாக போராட இயலாதவர்கள் குறைந்தப்பட்சம் ஆதரவு வழங்குவதன்மூலமோ, கொள்கைகளைப் பரப்புவதன்மூலமோ அல்லது வேறு வகைகளில் கண்டிப்பாக ஒரு போராட்டத்தில் பங்கேற்கமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. சிந்திப்போம் செயல்படுவோம்; ஒன்றிணைந்து போராடுவோம்.
//”வெற்றியாளர்கள் என்றுமே முற்றிலும் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை! ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் !”//
என் நெஞ்சில் கல்வெட்டாக இறங்கிய சொல்வெட்டு!!
"எவனாவது கொள்ளிவைப்பான் நான் போய் குளிர்காய்வேன்" என்ற மனப்போக்கு நமது தமிழர்க்கு பிறவிக் குணமாகவே ஆகிவிட்டது.
பல நூற்றாண்டுகால அடிமைப்படுத்தங்களுக்கு ஆளான தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் மெல்ல மெல்ல எழுச்சி பெற்று வருகின்றனர். இந்த எழுச்சி தொடரும்.. விரைவிலேயே தமிழினம் தலைநிமிரும் என்ற நம்பிக்கை இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
மிகப்பெரிய தேருக்கு ஆதாரமே சிறு அச்சாணிதான் என்பதுபோல, உலகத் தமிழரின் விடியலை காட்டப்போகும் விடிவெள்ளித் தமிழ் மறவர்கள் ஒருசிலர்தாம்!
அந்த ஒருசிலரை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பின்னால் தமிழினமே அணிதிரண்டு நிற்க வேண்டும்.
அருமைமிகு இடுகையை வழங்கிய நண்பர் சதீசுக்குப் பாராட்டுகள் உரித்தாகட்டும்.
தங்கள் இருவரின் கருத்துகளுக்கும் நன்றி..
Post a Comment