'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்
>> Thursday, October 9, 2008
பினாங்கு வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு! 'ஓப்பராசி லாலாங்கின்' 21-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு 'சுவாராம்' ஏற்பாட்டில் டேவான் சிறீ பினாங்கு மண்டபதிற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் கடந்த இருவாரங்களாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வு தொடர்ந்து இருவாரங்களுக்கு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, அமைதி மறியல் நடைப்பெரும் நாளன்று ஓர் அட்டையில் நாம் விருப்பப்படும் இ.சா கைதிகளுக்காக கடிதம் எழுதி 'சுவாராம்' அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் சேகரித்த அத்தனை கடிதங்களையும் 'சுவாராம்' பிரதிநிதியின்வழி கமுந்திங் தடுப்புக் காவலுக்கு எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைப்பார்கள்.
இந்நிகழ்வு 'சுவாராம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தாலும், இண்ட்ராஃப் உறுப்பினர்களின் பங்கேற்பை அவர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவே, இண்ட்ராஃப் உறுப்பினர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு, நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்காக கடிதம் எழுதி அனுப்புங்கள். இ.சாவை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு வாருங்கள். மற்ற மனித உரிமை இயக்கங்களோடு நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
நாளை (10-10-2008),மற்றும் 17-10-2008 ஆகிய தினங்களில் நடைப்பெறவுள்ள இவ்வமைதி மறியலில் கண்டிப்பாகக் கலந்துக் கொண்டு ஆதரவைத் தெரிவியுங்கள்.
மனித உரிமைக்கு மனிதர்களாகப் போராடுங்கள்..
பி.கு : நிகழ்வில் கலந்துக் கொள்ளும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
போராட்டம் தொடரும்...
2 கருத்து ஓலை(கள்):
வணக்கம்.
கடந்த சனிக்கிழமையன்று மின்னல் எப்.எம் இல் இவ்வார பிரமுகர் நிகழ்ச்சியை வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கேட்டேன். நல்ல நிகழ்ச்சி. பிரமுகராக கவிஞர் முனைவர் ருக்குமணி கலந்துக்கொண்ட்ருந்தார். ஆனால் அதன் ஒளிப்பரப்பு தரம் அவ்வளவு நன்றாக இல்லை. மற்ற வானொலி அலைவரிசைகளின் ஒளிப்பரப்பு தரத்தைப் போல் மின்னல் எப்.எம் இன் ஒளிப்பரப்பு தரம் இல்லை. ஒருவேளை மின்னல் எப்.எம் இன் அலைவரிசையின் சக்தி குறைவாக இருக்குமோ? வானொலியிலும்கூட நாம் பிற்படுத்தப்பட்டுவிட்டோமோ? விவரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும். நன்றி வணக்கம்.
வணக்கம் அன்பரே, நீங்கள் யோசித்தது போலவே நானும் யோசித்தது உண்டு. ஓர் உதரணத்திற்கு வைத்துக் கொள்வோம். மின்னல் அலைவரிசை 98.9 என்று வைத்துக் கொள்வோம். இதில் கடைசி இலக்கத்தில் ஒன்றைக் கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ அலவரிசை இரைச்சலுக்குள்ளாகி விடுகிறது. ஆனால் இதுவே மலாய், ஆங்கில, சீன ஒலியலைகள் மூன்று நான்கு இலக்கம் கூட்டியோ குறைத்தோ கேட்டுப் பார்த்தால் இரைச்சல் இல்லாமல் நன்றாகவே கேட்கிறது.
குறைந்த வானொலி இரசிகர்கள் இருப்பதனாலோ என்னவோ ஒலியலையை நீட்டிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை நிலவரம் எனக்குத் தெரியவில்லை.
டி.எச்.ஆர் ஒலியலைகள் கூட்டிக் குறைத்தும் இரைச்சலில்லாமல் கேட்க முடிகிறது, காரணம் அது தனியார் ஒலியலைவரிசை.
அரசாங்கத்தின் மானியத்தோடு இயங்கும் வானொலியின் அலைவரிசையைக் கூட்ட வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.
Post a Comment