இண்ட்ராஃப் குரல் 24/10/2008
>> Friday, October 24, 2008
ஊடக அறிக்கை 24/10/2008
கரு : சாயிட் அமீட் ஓர் இனவாதி, வெறியன் மற்றும் பொய்யன்.
இண்ட்ராஃப் இயக்கத்தின் தடையை ஆதரித்து சாயிட் அமீட் அல்பார் வெளியிட்டுள்ள அறிக்கையையொட்டி இவ்வறிக்கை அமைகிறது.
இண்ட்ராஃப் இயக்கம் ஒரு வெறித்தனமான இயக்கம் எனவும், இவ்வியக்கம் மலாய் இனத்தவரையும் முசுலீம் மதத்தவரையும் தங்களுடைய எதிரிகளாகப் பாவிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வதாகவும் சயீட் அமீட் அல்பார் கூறியிருப்பது ஓர் அப்பட்டமானப் பொய்யாகும்.
இத்தகு பிரச்சாரங்களை இண்ட்ராஃப் மேற்கொண்டதற்கான ஆதாரங்களை சாயிட் அமீட் அல்பார் முன்வைக்குமாறு நாங்கள் சவால் விடுக்கிறோம். நிச்சயம் அவரால் ஆதரங்கள் எதனையும் முன்வைக்கமுடியாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் தொடர்ந்து பொய்யுரைகளை வெளியிட்டு அம்னோவில் தனது அரசியல் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள சாயிட் அமீட் முனைவார். ஒவ்வொரு தடவையும் அம்னோ கட்சிக்குள் பூசல் என்று வரும்பொழுது இன, மதக் கலவரங்களைத் தூண்டி விடுவதென்பது அதன் வழக்கமாகிவிட்டது. மலேசிய வராலாற்றில் நாம் கடந்த 50 ஆண்டுகளாகக் கண்டுவிட்ட உண்மையிது!
இண்ட்ராஃப்பின் ஒவ்வொரு கருத்தரங்கு நிகழ்வுகளும் பொதுக்கூட்ட நிகழ்வுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஊடகங்கள் தன்கைவசம் இருப்பதால் இண்ட்ராஃப் இயக்கத்தை மக்கள் மத்தியில் ஒரு தீவிரவாத இயக்கமாக எடுத்துக் காட்டவும் அதற்கு கெட்டப்பெயர் வாங்கிக் கொடுப்பதற்கும் அம்னோ அரசாங்கம் எந்நேரமும் தயாராக இருந்துவருவது நாங்கள் அறிந்த ஒன்றே.
அண்மைய காலமாகவே, அம்னோவின் அதிகாரத்தில் செயல்பட்டுவரும் சில மலாய் பத்திரிகைகளும் டி.வி 3 தொலைக்காட்சி நிறுவனமும் இண்ட்ராஃப் இயக்கத்தை தவறாகச் சித்தரித்து வருவதையும் நாங்கள் எதிர்ப்பார்த்தோம், இனியும் இதவிட மோசமான ஊடகப் பிரச்சாரங்களையும் நாங்கள் எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். எங்கள் உரிமைக்காகவும் சனநாயகத்திற்காகவும் தொடங்கப்பட்ட போராட்டம் என்றுமே ஓயாது.
சாயிட் அமீட் அல்பார் ஒரு இனவாதி, வெறியன், பொய்யன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவரைப் பதவி துறக்கச் சொல்வதில் எந்த ஒரு அவசியமும் இல்லை, காரணம் இவருக்கு பண்பும் மரியாதையும் இல்லை. தொடர்ந்து நீதியைக் காப்பதாகக் கூறி பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டிருப்பார்.
இண்ட்ராஃப் என்றுமே சமயம் சார்ந்த ஓர் இயக்கம் கிடையாது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையமும் வழங்கியிருக்கும் உரிமைகளின் அடிப்படையில், இண்ட்ராஃப் இயக்கம் மலேசிய வாழ் இந்துக்களின், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளையும் அமைதியான முறையில் தங்களுடைய சமயத்தைப் பின்பற்றுவதற்குமான சூழ்நிலையையும் கோரி வரும்.
இன்றுவரையில் மலாய் இனத்தவரிடையேயும் முசுலீம் மதத்தவரிடையேயும் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியையும் இண்ட்ராஃப் இயக்கம் காட்டியதில்லை, ஆனால் இனவாதத்தினையும், ஒடுக்கும் நடவடிக்கைகளையும், பிரித்தாளும் கொள்கையினையும் கடைப்பிடிக்கும் அம்னோவின் மீது இண்ட்ராஃப் என்றுமே தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
இண்ட்ராஃப் தலைவர்
பொ.வேதமூர்த்தி
இலண்டன்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment