குழந்தை வைஷ்ணவி கைது!!!
>> Thursday, October 23, 2008
அன்பர்களே ஒரு வருத்தமான விடயம்!!
இண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியையும்(6 வயது) 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்களையும் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். வைஷ்ணவியின் தாயார் திருமதி சாந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். தீபாவளி பெருநாளுக்கு முன்பாக இண்ட்ராஃப் தலைவர்களையும், ராசா பெட்ரா மற்றும் பிற இ.சா கைதிகளையும் விடுதலைச் செய்யக் கோரி வைஷ்ணவியின் தலைமையில் பிரதமரிடம் மனு ஒன்றினை ஒப்படைக்க புத்ரா செயா சென்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வைஷ்ணவி பிரதமருக்கு வழங்கவிருந்த தீபாவளி வாழ்த்து அட்டையில் "இவ்வருட தீபாவளி ஐந்து இண்ட்ராஃப் தலைவர்கள் இல்லாமலும், ராசா பெட்ரா மற்றும் பிற இ.சா கைதிகள் இல்லாமலும் அர்த்தமற்றதாகிவிடும். எனவே, அவர்களை தயைக்கூர்ந்து தாங்கள் விடுவிக்க வேண்டும். அதோடு, இவ்வருடம் என் வீட்டின் திறந்த இல்ல உபசரிப்பிற்குத் தங்களை அன்போடு அழைப்பதில் மகிழ்வுக் கொள்கிறேன். மலர்களுடனும் அனிச்சத்துடனும் தங்களுடைய வருகையை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். என்றும் தங்களுடைய அன்பு மகள் வைஷ்ணவி" என்று வைஷ்ணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தது.
கோலாலம்பூர் காவல்த்துறையின் தலைமை அதிகாரி முகமது சப்துவைத் தொடர்புக் கொண்டு கேட்டதற்கு, வைஷ்ணவியை தாங்கள் கைது செய்யவில்லையென்றும், அவருடைய தாயாரின் அரவணைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 3 பெண்களும் சங்கங்கள் சட்டத்தின் கீழ் விசாரணைச் செய்யப்படுவர் என அவர் கூறினார்.
தற்போது இவர்களனைவரும் புத்ரா செயா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து மலேசிய இந்தியர்களனைவரும் இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அறியப்படுத்துங்கள். இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து புத்ரா செயா காவல் நிலையத்திற்கு அலைப்பெசியில அழைத்து அவர்களை விரைவில் விடுதலைச் செய்ய வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முடிந்தால் இப்பொழுது புத்ரா செயா காவல் நிலையத்தின் முன் கூடி இக்கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அவர்களை விடுதலைச் செய்வதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புத்ரா செயா காவல் நிலையம் : 03-88862222
கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகம் : 03-21460522
குழந்தை என்றும் பாராமல் வைஷ்ணவியைத் தடுத்து வைத்த அம்னோ அரசாங்கத்திற்கு மூளையும் இல்லை, மனித உரிமையின் மீது மதிப்பும் இல்லை.
இவர்களுக்கு கடந்த மார்ச்சு மாதம் கற்றுக் கொடுத்தப் பாடம் போதவில்லை போலும்..!
தமிழர்களே விழித்தெழுங்கள்..! காவல்த்துறையின் அரசாகத்தை தட்டிக் கேட்கப் புறப்படுங்கள்!!
கைது செய்யப்பட்டவர்கள் : வேதநாயகி (42), செயதாசு (54), தர்மராசு (54), கேப்டன் பாலா (63), கண்ணன் ராமசாமி (36), ரவி (36), ராசசேகரன் (31), லூர்து மேரி (45), சிவகுமார் (41), பூபாலன் (26), சாந்தி (44)
3 கருத்து ஓலை(கள்):
யானை கொழுத்துப் போனால் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுமாம்!
இந்த நாட்டின் அம்முனோ கட்சிக்கும் கொழுத்த யானைக்கும் வேற்பாடே கிடையாது.
சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்ற வக்கும் திராணியும் இல்லாத இந்தக் காவல்துறை காலாடித் தனமாகச் செயல்படுகிறது.
மரமண்டைகளையும் மதவெறியர்களையும் இனத் தீவிரவாதிகளையும் ஆட்சியில், அதிகாரத்தில் உட்கார வைத்தால் இப்படித்தான் காண்டுமிராண்டிகள் போல் செயல்படுவார்கள்!
இந்தக் காட்டுமிராண்டிகளை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தால்தான் இந்த நாடும் உருப்படும் - நாட்டு மக்களும் உருப்படுவார்கள்!
சரியாகக் கூறினீர்கள் இனமானத் தமிழரே.
வெளிப்படையாகவே மலேசிய இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டிவரும் அம்னோ அரசாங்கத்தை நேருக்கு நேர் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது, இனி எக்காலத்திலும் அம்னோ மீண்டும் அரசியலில் தலைத்தூக்காமல் இருப்பதற்கு மலேசிய இந்தியர்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைத்திடாது செய்திட வேண்டும்!
ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-
மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.
இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க
தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!
நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்
இக்கண்,
சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்
( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)
*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்
Post a Comment