இண்ட்ராஃப் இயக்கத்திற்குத் தடை..!!!
>> Wednesday, October 15, 2008
இந்து உரிமைப் பணிப்படை இயக்கம் சட்டப்பூர்வமாக தடைச் செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் இன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இத்தடை இன்று தொடங்கி நடப்புக்கு வருகிறது என்றும் பொதுமக்கள் இவ்வியக்கத்தின் செயல்பாடுகளுக்குத் துணைப் போக வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இண்ட்ராஃப் ஓர் இயக்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கடந்த வருடம் அக்தோபர் மாதம் 16-ஆம் திகதியன்று விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பம் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே இண்ட்ராஃப் நாடுதழுவிய நிலையில் பலவிதமான நிகழ்வுகளையும் மறியல்களையும் நடத்தி மலாய் இனத்தவருக்கிடையேயும் மலேசிய இந்தியர்களுக்கிடையேயும் உள்ள ஒற்றுமையை சீர்க்குலைத்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வெளிநாடுகளின் உதவிகளை நாடியதன் வழி மலேசியாவின் நன்மதிப்பையும் இண்ட்ராஃப் குழைத்துள்ளதாக தெரிவித்தார்.
இவ்வியக்கம் ஓர் இயக்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்து சரியாக ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளையில், சட்டப்பூர்வத் தடையை இவ்வியக்கம் எதிர்நோக்கியுள்ளது.
நாட்டில் இனக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இண்ட்ராஃப் பாழ்படுத்துகிறது என ஆய்வின் வழியும் விசாரணைகளின் வழியும் தெரிய வருவதால் சட்டப்பிரிவு 5(1) மற்றும் சங்கங்கள் விதி 1966 (விதி 335)வழி இண்ட்ராஃப் இயக்கம் சட்டபூர்வமாக தடைச் செய்யப்படுகிறது என சாயிட் அமீர் அல்பார் பிரகடனப்படுத்தியுள்ளார்.
***
அரசாங்கம் இதுபோன்ற இழி நடவடிக்கையில் ஒருநாள் இறங்கும் என்று ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதால் இத்தடை குறித்து இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடையவில்லை. ஊழல், இனவாதம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சாக்கடை அரசியலில் ஊறிப்போன அம்னோ அரசாங்கமானது இதைவிட வேறென்ன சிறப்பாகச் செய்துவிட முடியும்.
இயக்கம் என்றொன்றிருந்தால்தான் மக்களை ஒன்றுபடுத்தி வழிநடத்த முடியும் என்று அர்த்தமில்லை. போராட்ட உணர்வும், உரிமை குறித்த விழிப்புணர்வும் மலேசிய இந்தியர்களுக்கு இருக்கும்வரையில் இக்கட்டமைப்பை உடைப்பது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல. அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் சுயநலங்களுக்கு பாதகம் விளையாதிருக்க சட்டத்தின் கதவினை தட்டியிருக்கின்றனர்.
'மண்டோர்'களை விட்டு அடக்கப்பார்த்தனர், புல்லுருவிகளைவிட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்த்தனர், காவத்துறையைக் கொண்டு மிரட்டிப் பார்த்தனர் எதுவும் எடுபடாது என்கிற நிலையில் அம்னோ துரைகள் சட்டத்துறையைக் கையிலெடுத்து நம் வளர்ச்சியைத் தடை செய்யப்பார்க்கின்றனர்.
மலேசிய இந்திய மக்கள் என்றோ விழித்துக் கொண்டனர், ஆனால் அம்னோ தன் நெடிய உறக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை. நிதர்சனத்தைவிட கனவுதான் நிசமானது என்ற அறியாமையில் சுகங்கண்டு வருகிறது.
மக்களின் சுதந்திரத்தையும் அவர்களின் சுயமரியாதையையும் மதிக்கத் தெரியாத சட்டங்களால் என்ன லாபம்??
இன்று அச்சட்டங்களைக் கொண்டு நம்மை அச்சுறுத்தினால் நாம் பயந்துவிடுவோமா என்ன!
இவ்வேளையில் அண்ணல் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் நினைவுக்கு வருகின்றன.
"நீ என்னை தடுக்கலாம், துன்புறுத்தலாம், கொல்லலாம், என் சவத்தை எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் என் சுயமரியாதையை நீ அடிமையாக்க முடியாது..!!"
அம்னோ அரசாங்கத்திற்கு இண்ட்ராஃபின் பதில் இதுதான்..!!
போராட்டம் தொடரும்...
2 கருத்து ஓலை(கள்):
dei koolai umno puchandigale, enna puchandi kaanbikirirgala, unarchi ulla engalathu poorattam todarum, een innum vegamaga seyalpadum. Poruttirunthu paarungada umno naaigale....
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே......வாழ்க நம் இந்திய சமுதாயம்.....தொடர்ந்து வெற்றி நடைப் போடுவோம்....
Post a Comment