தமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் சீமான்..!
>> Friday, October 24, 2008
தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..! அவனை அடித்தால் கேட்பதற்கென்று நாதியில்லை! ஆனால் தமிழனுக்கென்று தன்மானம் உண்டு, அந்தத் தன்மானம் உலகின் 13 கோடித் தமிழர்களுக்கும் உண்டென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவது தமிழீழ விடுதலைப் போராட்டம். தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் தற்போது தமிழக மக்களும் அணிதிரண்டு இலங்கை அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சிறீ லங்கா அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் கடந்த 19-ஆம் திகதி அத்தோபர் மாதம் இராமேசுவரத்தில் கண்டனக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலையலையாகத் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இயக்குநரும் நடிகருமான திரு.சீமான் சிறப்பாக உரையாற்றி வந்திருந்தோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதோ அவரின் உணர்ச்சிகரமான உரை...
உணர்ச்சிப்பொங்க உரையாற்றிய தன்மானத் தமிழன் சீமானையும் இயக்குநர் அமீரையும் இன்று மாலை தமிழக காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாக அறியப்படுகிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய பிறகு பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் இருவரும் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்...!! தன்மானத் தமிழனுக்கு எங்குதான் எதிரிகள் இல்லை..!
****
கவனிக்கவும் !
வலைஞர் திரு சத்தீசு எமக்கு அனுப்பிய முக்கிய அறிக்கை :
ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-
மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.
இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க
தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!
நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவெர்த்து.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்
இக்கண்,
சத்தீசு முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்
( மேல் விவரங்களுக்கு : சத்தீசு 016-4384767 / குணாளன் 013-4853128)
*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment