லாலாங் நடவடிக்கை - கண்காட்சி நிகழ்வு

>> Saturday, October 18, 2008


படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்.

அத்தோபர் 27,1987 ஆம் ஆண்டு மலேசியா எனும் ஒரு சனநாயக நாடு வெட்கப்படக் கூடிய ஓர் அரசியல் தந்திர நாடகத்தைக் காண நேர்ந்தது. அம்னோவின் இனவாதக் கொள்கைகளால் திளைத்துப்போன நாட்டின் முன்னால் பிரதமர் மகாதீர் ஆட்சியில் மொத்தம் 106 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டச் சம்பவம் இன்னும் பலரின் மனங்களில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சமூகப் போராட்டவாதிகளும் அடங்குவர்.

இச்சம்பவம் நடைப்பெற்று 21 ஆண்டுகள் நிறைவையொட்டி வருகின்ற அத்தோபர் 19-ஆம் திகதியன்று, பினாங்கு 'பிராங்கின் மால்'-இல் ‘இசாவைத் துடைத்தொழிப்போம்' எனும் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி நடைப்பெறவுள்ளது.

நண்பகல் மணி 12 தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கும் இக்கண்காட்சியில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு ‘லாலாங் நடவடிக்கையைப்' பற்றி மேலும் அறிந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வில் ‘லாலாங் நடவடிக்கை' குறித்த ஆவணப் படங்கள் திரையிடப்படுவதுடன் உள்ளூர் கலைஞர்களின் இசை விருந்தும் நடைப்பெறும்.

எனவே மறவாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு நன்மையடையுங்கள்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP