சுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை!
>> Saturday, October 18, 2008
நேற்றிரவு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் போராளி செங் லீ வீ இன்று விடுதலை செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் 19 மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டப்பின் அவர் மாலை 6.04 மணியளவில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1-ல் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆசராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியம் இரண்டு மணியளவில் சில காவல்த்துறை அதிகாரிகள், ஆதாரங்களைத் திரட்டுவதற்காக செங்கின் வீட்டிற்குச் சென்று அவருடைய மடிக்கணினியையும் விரலியையும் பறிமுதல் செய்துக் கொண்டுள்ளனர்.
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் காவல்த்துறையினர் செங்கை நான்கு நாட்கள் தடுத்து வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக சுவாராம் இயக்கத்தின் சொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஞாம் கூறினார்.
19 மணிநேர தடுப்புக் காவலில் காவல்த்துறையினரின் விசாரணைக்கு செங் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
தாம் ஒரு தப்பும் செய்யவில்லை என்றும், காவல்த்துறையின் இணையத்தளத்தில் பிளேந்தோங் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைப்பு தொடர்பாக புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தம்மை காவல்த்துறையினர் கைது செய்ததாக செங் லீ வீ கூறினார்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment