தாயும் சேயும் விடுதலை!
>> Friday, October 24, 2008
நேற்று கைதான 12 இண்ட்ராஃப் ஆதரவாளர்களில் திருமதி சாந்தி மற்றும் அவரின் 6 வயது மகள் வைசுணவியும் அடங்குவர். புத்ரா செயா மாவட்டக் காவல்த்துறை தலைமையகத்தில் ஓரிரவு தடுத்து வைக்கப்பட்டப் பின்னர் திருமதி.சாந்தியும் குழந்தை வைஷ்ணவியும் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.
எஞ்சியிருக்கும் 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இன்று காலை காஜாங் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இவர்களின்மீது மேலும் விசாரணை மேற்கொள்வதற்கு தடுப்புக் காவலை நீட்டிக்கக் கோரி காவல்த்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளனர்.
நேற்று புத்ரா செயாவிலுள்ள பிரதமரின் அலுவலக கட்டடத்தின் முன்புறம் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு பிரதமரச் சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிப்பதற்காக முயன்றிருக்கின்றனர். ஆனால், கட்டடத்தினுள் நுழையாதபடி அங்குள்ள காவலாளிகள் இவர்களைத் தடுத்ததோடு மட்டுமல்லாது 'நீங்கள் இண்ட்ராஃபினர்!' எனக் காரணம் கூறியதாகவும், "இல்லை, நாங்கள் முற்போக்குச் சிந்தனை கொண்ட மலேசியக் குடிமக்கள்!, நாங்கள் வைசுணவிக்குத் துணையாக வந்திருக்கிறோம்" என்று மறுபதில் கூறியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இறுதியில் 12 பேரை காவல்த்துறையினர் கைது செய்து புத்ரா செயா மாவட்டக் காவல்த்துறை தலைமையகத்திற்குக் கொண்டுச் சென்றனர்.
இவ்விடயம் காட்டுத் தீப்போல் பரவ பலர் இக்காவல் நிலையத்திற்கு அலைப்பேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்ததோடு, பலர் காவல் நிலையத்திற்குச் சென்று காவல்த்துறையினரின் அராசகத்தைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பினர். அலைப்பேசியின்வழி புத்ரா செயா காவல் நிலையத்தைத் தொடர்புக் கொண்டு பேசிய பொழுது, அங்குள்ள காவல்த்துறை அதிகாரிகள் பொறுப்பற்று பேசியதாகவும் அறியப்படுகிறது.
அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகச் செயல்படும் காவல்த்துறையினர் வெளிப்படையாகவே மனித உரிமை மீறலைப் புரிகின்றனர். இது மக்கள் அரசாங்கமா அல்லது மாக்கள் அரசாங்கமா?!!
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment