வழக்கறிஞர்கள் - குடும்பத்தினர் சந்திப்பு
>> Saturday, December 15, 2007
வழக்கறிஞர்களின் கைது தொடர்பாக, அவர்கள் கைது செய்யப்பட நாளன்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புக்கிட் அமானில் சந்தித்தனர். அங்குள்ள அதிகாரிகள் ஒரு அறையில் இரு மேசைகளை வைத்து ஒவ்வொரு சந்திப்புக்கு இரு வழக்கறிஞர்களை உள்ளே அனுமதித்து, ஒவ்வொருவருக்கும் 6 குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதன் முதலாக திரு மனோகரன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அறையினுள் சென்றார்கள். வெளியே வந்த அவர்கள், வழக்கறிஞர் நல்ல உடல் நிலையோடு உள்ளதாகக் கூறினர். அதனையடுத்து வழக்கறிஞர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வழக்கறிஞர் சுரேந்திரன் அவர்கள் திரு உதயகுமார் மற்றும் திரு கணபதி ராவ் குடும்ப உறுப்பினர்களோடு அறைக்குள் சென்று வழக்கறிஞர்களை சந்தித்தார். திரு சுரேந்திரன் அவர்களை தொடர்புக் கொண்ட போது, வழக்கறிஞர்கள் அனைவரும் சற்றும் உற்சாகம் குன்றாதவர்களாகக் காணப்பட்டனர் எனத் தெரிவித்தார்.
சந்திப்புக் கூட்டத்திற்கு அடுத்து 5 வழக்கறிஞர்களையும் கமுந்திங் தைப்பிங் சிறைக்கு கொண்டுச் செல்ல நள்ளிரவு ஆகிவிட்டது எனவும், அவ்வேளையில் அனைவரும் உடல் நல ரீதியில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் சிறைக்கு வந்துச் சேரும் வேளையில், சிறையின் வெளியே பொதுமக்கள் நிறையப் பேர் காத்துக் கொண்டிருந்தாக தெரிய வருகிறது. வழக்கறிஞர்கள் கைதுத் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2 மாதக் காலங்கள் யாரும் வழக்கறிஞர்களை சந்திக்க இயலாது. 60 நாட்கள் கழித்தே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
தமிழ் நாட்டின் பிரபல நாளேடுகளில் ஒன்றான குமுதம் இதழில் வெளிவந்துள்ள கேலிச் சித்திரம்
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
1. முதல் வாக்கியத்தின் ஒரு பகுதி `குடும்ப உறுப்பினர்கள் புக்கிட் அமானில் சந்தித்தனர்' என்று திருத்தப்பட வேண்டும். 2. deacon pat என்பவரின் பதிவை நீக்குங்கள். அது வேற்று மதப் பிரசாரம்.
Post a Comment