லண்டனில் நடைப்பெற்ற அமைதி மறியல்..
>> Saturday, February 2, 2008
திட்டமிட்டப்படியே இந்து உரிமைப் பணிப்படையின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தியின் தலைமையில் 10,டவுனிங் சாலை, லண்டன் எனுமிடத்தில் தங்களுடைய அமைதி மறியலை நடத்தி வெற்றிக் கண்டார்கள். 100க்கும் மேற்பட்ட லண்டன் வாழ் மலேசிய இந்தியர்கள் இவ்வமைதி மறியலில் கலந்துக் கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.
மதியம் 2 மணியளவில், போலிசாரின் அனுமதிப் பத்திரத்துடன் திரு.வேதமூர்த்தி மற்றும் 4 ஆதரவாளர்கள் சேர்ந்து பிரிட்டிஷ் பிரதமரின் பிரதிநிதியைச் சந்தித்து அவரிடம் மகஜர் வழங்க அனுமதியளிக்கப்பட்டது. அம்மகஜரில், மலாயாவிற்கு இந்தியர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு வரவழைக்கப்படக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், மலேசியாவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இனவாதக் கொள்கைகளையும், இனத் துடைத்தொழிப்பு நடவடிக்கைகளையும் மலேசிய அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்கு ஆவண செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மதியம் 3 மணியளவில் அனைத்து ஆதரவாளர்களும் லண்டன் இந்திய தூதரகத்தின் முன் கூடினர். அங்கு திரு.வேதமூர்த்தியுடன் 4 ஆதரவாளர்கள் பிரிட்டனுக்கான இந்தியத் தூதரைச் சந்தித்து மகஜரைச் சமர்ப்பித்தனர். இந்திய தூதர் அம்மகஜரை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது. அதன் பின்னர் அனைவரும் ஹைகேட் முருகன் ஆலயத்திற்குச் சென்று 5 தலைவர்களுக்காக நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துக் கொண்டனர். அந்நிகழ்வுடன் அமைதி மறியல் இனிதே முடிவடைந்தது..
அமைதி மறியல் தொடர்பான படங்கள்..
நன்றி :-
படங்கள், ஒளிப்படக்காட்சிகள் : ஜோன் சில்வா, பாரதிராஜா
தகவல் : kamal-talks
போராட்டம் தொடரும்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment