சிங்கங்களுக்கு விடுதலை நீட்டு - மோகனன் பெருமாள்

>> Tuesday, February 5, 2008சிங்கங்களுக்கு விடுதலை நீட்டு
மன்னிப்புக்கு மகுடம் சூட்டு

ஆலய உடைப்பு
அவலத்திற்கு அரசு
சார்பில் நஜீப்பின்
மனம் திறந்த மன்னிப்பு

இதயம் இருக்கிறது
இந்த அரசுக்கு

ஏற்க துடிக்குது
உள் மனம்

இடறி தடுக்குது
ஒரு கனம்

அவலத்தை அம்பலப்படுத்திய
இவரை 'இசா' வில்
இறுக்கி விட்டு

எங்கள் இதயத்தை
இருட்டில் தவிக்க விட்டு

மன்னிப்பு கேட்டால்
மனம் ஏற்குமா
மந்திரியே!

நாளைய
பிரதம மந்திரியே

தந்தை வழியில்
தர்மம் போற்று

ஒரு சமூகத்தின்
தலையெழுத்தை
மாற்ற வந்த

எங்கள் சிங்கங்களுக்கு
விடுதலை நீட்டு

உன் மன்னிப்புக்கு
ஒரு மகுடம் சூட்டு..

நன்றி : திரு.மோகனன் பெருமாள், லண்டன்அரசாங்கத்தின் போக்கையும் மக்களின் மனப்போக்கையும் நயம்பட உரைத்திருக்கிறது இந்தக் கவிதை..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous February 7, 2008 at 9:20 PM  

Mannikum manapaanmai konda nam naattu thalaivargal...nam 5 thiagigalai viduvipaargala?....
naam vaala avargal sirai vaasam paduvatha?....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP