இன்றைய முக்கிய அறிவிப்புகள்..
>> Wednesday, February 20, 2008
தேர்தல் ஊழல்கள் ; லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவனம் கண்காணிக்கிறது.
பொதுத் தேர்தல் காலத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் 1954 ஆம் தேர்தல் சட்டத்தை முழுமையாக அனுசரிக்க வேண்டும் என்று லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவனம் நேற்று அறிவுறுத்தியது. தேர்தல் விதிமுறைகளை மீறுவது என்பது 1954-ஆம் பொதுத் தேர்தல் குற்றங்கள் சட்டம் மற்றும் 1997 ஆம் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படும் என்று அது மேலும் தெரிவித்தது. 1954 ஆம் பொதுத் தேர்தல் குற்றச்செயல்கள் சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவனம் தேர்தல் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும். மேல் விவரங்கள் பெற நினைக்கிறவர்களும், தகவல் கொடுக்க விரும்புவோரும், புத்ரா ஜெயா லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவன தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவன நடவடிக்கை அறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 03-88867686 , 03-88867012
தொலைநகல்:- 03-88889489
மின் அஞ்சல் :- aduan@bpr.gov.my
மாநில லஞ்ச ஊழல் ஒழிப்பு நிறுவன நடவடிக்கை அறைகள்
ஜொகூர் பாரு
தொலைபேசி எண்கள் :- 07-22411982 , 07-2241984
தொலைநகல்:- 07-2236646
மின் அஞ்சல் :- ppmjoh@bpr.gov.my
பத்து பகாட்
தொலைபேசி எண்கள் :- 07-4321982 , 07-4320344
தொலைநகல்:- 07-4328630
குளுவாங்
தொலைபேசி எண் :- 07-7761984
தொலைநகல்:- 07-7767986
சிகாமட்
தொலைபேசி எண்கள் :- 07-9317982 , 07-9317980
தொலைநகல்:- 07-9317981
மலாக்கா
தொலைபேசி எண்கள் :- 06-2828211 , 06-2822668
தொலைநகல்:- 06-2834314
மின் அஞ்சல் :- ppmmel@bpr.gov.my
சிரம்பான்
தொலைபேசி எண்கள் :- 06-7625446 , 06-7620207
தொலைநகல்:- 06-7620522
மின் அஞ்சல் :- ppmns@bpr.gov.my
போர்ட்டிக்சன்
தொலைபேசி எண்கள் :- 06-6461184 , 06-6461185
தொலைநகல்:- 06-6461186
ஷா ஆலாம்
தொலைபேசி எண் :- 03-551927370
தொலைநகல்:- 03-55197369
மின் அஞ்சல் :- ppmsel@bpr.gov.my
கிள்ளான்
தொலைபேசி எண்கள் :- 03-33715080
தொலைநகல்:- 03-33715090
பகாங்
தொலைபேசி எண்கள் :- 09-5121450 , 09-5121470
தொலைநகல்:- 09-5159130
மின் அஞ்சல் :- ppmphg@bpr.gov.my
---------------------------------------------------------------------------------
அம்பாங் தாசேக் பெர்மாய் சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
இந்து உரிமைப் பணிப்படைக் குழுவின் பொறுபாளர்கள் திரு.உதயகுமார், திரு.கணபதிராவ், திரு.கங்காதரன், திரு.மனோகரன் மலையாளம் மற்றும் திரு.வசந்தகுமார் ஆகியோர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நமது ஐந்து வீரர்களும் விரைவில் விடுதலைப் பெற வேண்டி வரும் 22.02.2008 இரவு 7.30 மணியளவில் அம்பாங் தாசேக் பெர்மாய் சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைப்பெறவுள்ளது. இப்பூஜையில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு பொதுமக்களை அம்பாங் சக்தி தொண்டர்கள் அழைக்கின்றனர்.
----------------------------------------------------------------------------------
தமிழைக் காக்க வாரீர்..
கிள்ளான் செம்பருத்தி குழுவினரின் ஏற்பாட்டில் தமிழைக் காக்க வாரீர் என்னுமொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு எதிராகவும், தமிழை அழிக்கவும் பல்வேறு முயற்சிகளை பல தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட தமிழ்மொழி இலக்கணச் சிப்பம் என்னும் நூலினை நெகிரி தமிழ்மொழிப் பணிப்படையினர் வெளியிட்டுள்ளனர். இத்தகையோரின் இழிச்செயலை வீழ்த்துவதற்கு கலந்துரையாடல் ஒன்றினை கிள்ளான் செம்பருத்தி நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்களும் பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு நற்கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தங்களின் வருகையும் ஒத்துழைப்பும் நிகழ்வினை மெருகூட்டுமென நம்புகிறோம்.
திகதி : 20.02.2008
நேரம் : இரவு 8.01 மணி தொடக்கம்
இடம் : கே.பி.எஸ் பயண நிறுவனம், முதல் மாடி (துங்கு கிளானா சாலை பின்புறமுள்ளது)
தொடர்புக்கு : மு.கோவிந்தராசு 012-3359904, மு.தாமோதிரன் 016-3264257 ,
இ.சு. மெய்யழகன் 016-2576737
----------------------------------------------------------------------------------
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் தாய் மொழி நாள்..
நாளை பிப்ரவரி 21ஆம் திகதி, தாய்மொழி நாள்!
யுனேஸ்கோ பிரகடனப்படுத்தியுள்ள இந்நாளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருவிழாவாக கொண்டாடவிருக்கிறது.
மாண்புமிகு டத்தோ சுப்ரா தலைமையில் நடைப்பெறும் இவ்விழாவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்ர் முனைவர் சி.சுப்பிரமணியம், தமிழகத்தின் பழனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்வேந்தன் ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர்.
பட்டிமன்றம் , சிறப்பு நாடகம் என பல சிறப்பு அங்கங்களும் உண்டு. அனைவரும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.
நாள் : 21.02.2008 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : டான்சிறீ கே.ஆர்.சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன்
---------------------------------------------------------------------------------
ஈப்போ தமிழர் திருநாள் 2008
( கோலம், பல்லாங்குழி, தாயம், சோழி, பொங்கல் போட்டி )
50க்கும் மேற்பட்ட சங்க, மன்றங்களின் ஏற்பாட்டில் ஈப்போ மாநகரில் ஈப்போ தமிழர் திருநாள் 2008 விழா வருகின்ற மார்ச் திங்கள் 1ஆம் நாள் சனிக்கிழமை ஈப்போ மாநகர் மண்டபத்தில் நடைப்பெறும்.
கலை, மொழி, பண்பாடு, கல்வி, பொருளாதாரம் என ஐம்பெரும் நோக்கங்களை முன்வைத்து தமிழ் வாழவும் வளரவும், தமிழர் உயரவும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவாக நடைப்பெறவிருக்கிறது.
இவ்விழாவினை முன்னிட்டு கோலம், தாயம், பல்லாங்குழி, சோழி, பொங்கல் ஆகிய போட்டிகள் வரும் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஈப்போ, கல்லுமலை அருள்மிகு சிறீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைப்பெறும்.
போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும், வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும். போட்டிகளில் பங்குப்பெற விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை பிப்ரவரி 22-ஆம் நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் நுழைவுப் பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தலைவர் : தமிழ்த்திரு பி.கே குமார் 012-5555517,
துணைத் தலைவர் தமிழ்த்திரு நாச்சிமுத்து 012-5051959,
பொறுப்பாளர் திருவாட்டி பேபிராணி 012-5236500
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment