ஒரு கையில் விலங்கு, ஒரு கையில் மருந்து - ஜோன் சில்வா
>> Monday, February 4, 2008
ஒரு கையில் விலங்கு
ஒரு கையில் மருந்து
இந்த சமூகத்தின்
அடிமை விலங்கை
உடைக்க வந்த
உதயகுமாரின்
ஒரு கையில் விலங்கு
ஒரு கையில் மருந்து
உன் தியாகத்தை
மருந்துக்கும் மறக்காது
என் சமூகம்
உதயாவின் உதயத்தில்
ஒரு சமூகம் விடிந்தது
வரலாறு சொல்லும் நாளை
உன் மூச்சுக் காற்று
படும் தூரத்தில்தான்
இந்த சமூகம்
சிறைக் காவல்
நம் பரிசம் தடுக்கலாம்
பாசம் தடுக்குமா?
வாழும்வரைப் போராடு..
பனிவிழும் தேசத்திலிருந்து
பாசத்துடன்
சில்வா
லண்டன்
கவிதை மிக அருமை...
நன்றி : திரு.ஜோன் சில்வா, லண்டன்
silvallbhons@yahoo.co.uk
1 கருத்து ஓலை(கள்):
காந்தி போராடினார்,
அகிம்சைவாதி என்றனர்!!
சுதந்திரம் தன்னை தந்தனர்!!
உதயா அண்ணனும் போராடினார்,
தீவிரவாதி என்றனர்!!
சிறைவாசம்தனைத் தந்தனர்!!
ஏனிந்த பாகுபாடு??
குழப்பத்தில் சூடேறுகிறது என் மண்டையோடு!!
புரிந்து விட்டது,காரணம் தெரிந்து விட்டது,
தமிழ்பட வசனம் ஒன்றுதான் நெஞ்சில் பட்டது!!
காந்தி போராடியது வெள்ளைக்காரனிடத்தில்,
உதயா அண்ணன் போராடுவது கொள்ளைக்காரனிடத்தில்!!
-சதீஸ்-
ஒழிக இனவாத தேமு அரசு!!
வாழ்க மக்கள் சக்தி,
ஒங்குக மக்கள் குரல்!!
மக்கள் சக்தி வெல்லும்!!
Post a Comment