மீண்டு வாருங்கள்.... தமிழர் வாழ்வை மீட்டுத் தாருங்கள்..!

>> Thursday, February 14, 2008மீண்டு வாருங்கள்.... தமிழர் வாழ்வை மீட்டுத் தாருங்கள்..!

நீங்கள் எங்கே பிறந்தீர்கள்..!
எங்கே வளர்ந்தீர்கள்..!
என்னவாய் இருந்தீர்கள்..!
எதுவுமே தெரியாது எங்களுக்கு
ஆனால்.... இன்று...
மானமிக்க ஒவ்வொரு தமிழச்சியும்
உங்களைத் தன் கருவில் சுமந்ததாகவே நினைக்கிறாள்.
வீரமிக்க ஒவ்வொரு தமிழனும்
உங்களைத் தன் உதிரமாகவே காண்கிறான்.

நீங்கள் என்ன....
உரசினால் பற்றிக்கொள்ளும் தீக்குச்சிகளா?
உங்கள் பெயர் சொல்லும் ஒவ்வொரு உதடும்
அக்கினி மழை பொழிகிறதே..?

உண்மையைச் சொன்னால்..
இப்போதெல்லாம்..
கடைத்தெருவிலும்
ரோட்டோரங்களிலும்
வீட்டோரங்களிலும்
கல்யாணங்களிலும்
காது குத்துகளிலும்
ஏன்.....
கருமாதிகளிலுங்கூட
உங்களைத் தவிர
வேறெதுவும் பேசப்படுவதில்லை.எதிர்காலத்தில்
எங்கள் வயிற்றுக் குழந்தைகள்
பஞ்சு மெத்தையில் படுத்துறங்க
இப்போது நீங்கள்
கட்டாந்தரையில் கிடக்கிறீர்களா?
எதிர்காலத்தில்
எங்கள் வாரிசுகள் வயிறாற சாப்பிட
இப்போது நீங்கள் பட்டினி கிடக்கிறீர்களா?
எதிர்காலத்தில்
தமிழனின் அடிமை விலங்கு உடைபட
இன்று உங்களுக்கு கைவிலங்கா?ஒவ்வொரு நாளும்
உணவுக் கவளம்
வாயருகே செல்லும்போதெல்லாம்
உப்பு போட்டு உண்ணும்
ஒவ்வொரு தமிழனின் மனசும்..
நீங்கள் பசித்திருப்பீர்களா....! படுத்திருப்பீர்களா....!
என்றுதான் நினைத்து துடிக்கிறது.

எங்கள் ஊரில் நீங்கள் நிகழ்த்திய உரையை
எங்கள் ஊரைச் சேர்ந்தவனே
பதிவு செய்து கொடுத்தானாம்
அதனால்தான்
உங்களுக்கு இன்று சிறைவாசமாம்....
கேள்விப்படுகிறோம்..!
பற்றி எரிகிறது அடி வயிறு....
இன்னுமா எட்டப்பப் பரம்பரை இருக்கிறது
மானமிக்க மனிதர்கள் இருக்கும் எங்கள் ஊரில்..?
இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமோ..
இந்தப் பாவத்தைக் கழுவித் தீர்க்க..


எங்கள் உயிர் நாடியில் எல்லாம்
உரிமைக்குரலாய் ஒலிக்கும்
எங்கள் வீர வேங்கைகளே......!
மீண்டு வாருங்கள்
தமிழர் வாழ்வை
மீட்டுத் தாருங்கள்

அதுவரை..
உங்களுக்காக..
ஊர்கள் தோறும் அமைதிப் பிரார்த்தனை நடத்துவோம்..
வீடுகள் தோறும் வேண்டுதல் விளக்கு ஏற்றுவோம்..
சந்திக்கும் தமிழரிடம் எல்லாம் உங்களைப் பற்றி பேசுவோம்..
எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் உங்கள் பெயர் சொல்லி வைப்போம்

அதற்கும் மேலாய்..

எங்கள் நெஞ்சக்கருவரையில்
உங்கள் நினைவுகளை
கருவாய் சுமந்திருப்போம்.

இப்படிக்கு
- மனசு முழுசும் பாசம் சுமந்து,
உங்கள் வரவுக்காக காத்திருக்கும் -
பத்தாங் பெர்சுந்தை தமிழர்கள்நன்றி : திலா, பத்தாங் பெர்சுந்தை.

வாசகரின் உணர்ச்சிப் பிரவாகம், கல்லாய் சமைந்திருக்கும் மூடனையும் தட்டியெழுப்பக் கூடிய சக்தி படைத்திருக்கிறது... அழகிய நடை, அழகிய தமிழ்.. மேலும் மெருகேற்றப்பட்டிருக்கின்றன என் உணர்வுகள்.. வாசகர்களே உங்களுக்கு எப்படி?

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous February 17, 2008 at 12:52 PM  

MAKKAL SAKTHI VAALGA !! alagiaya yenggal 5 algiya tamil magane neegal yen yendremdum vallga vaalgave. arul malai polinthidave yendrum ninggal 5 varum valga valgave. himaya malaipol yelenthu nadanthai indru serai vasagam amaithu kidanthai. unngal paathanggalai nanggal poojai seiya valimel vili vaithu kathu kondirikirom...vanakam 4rm DHESIHA THIRUNAUKARASU.Makkal sakthi vaalga vaalga.

usha February 25, 2008 at 11:06 PM  

sir, unggal anumathiyoudu intha kavithaiyai print eduthu terinthavargalukku kodukkalama?

Anonymous February 29, 2008 at 11:38 AM  

To,
Usha.....

Sagothari,
unggal nalla manasai paratugiren.

Intha kavithaiyai ovvoru thamilanum payan paduthikkolla anumathi tharugirean.

Unggalaal tharappadum
ovvoru padiyum (Photostat)
ovvoru thee kuchiyaaga maari
nam thamilar vaalvil olivisattum

Anbudan
Thila
Batang Berjuntai

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP