வெற்றித் தமிழன்...

>> Sunday, February 10, 2008இன்று 10/02/2007 தமிழ் வலைப்பதிவர் திரு.விக்னேஷ்வரன் அவர்களின் கணினி மையம் ஈப்போவில் திறப்பு விழா கண்டது..

இவர் தமிழ் உலகில் பல வலைத்தளங்களில் தனக்கே உரித்தான அழகிய தமிழில் பல கட்டுரைகளை பதிவிட்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் அவருடைய 'வாழ்க்கை பயணம்' எனும் வலைத்தளம். தமிழர் சரித்திரம் மற்றும் புதினங்கள் தொடர்பான விஷயங்களில் அவருக்கு பரந்த அறிவு உள்ளது எனக் கூறலாம்.தமிழ் இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் இவர், ஈப்போ சிலிபின் (காயத்திரி மாளிகையின் வரிசையில்) கணினி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவருடைய தமிழார்வத்தை அவருடைய கணினி மையத்தின் பெயர்ப்பலகையில் காணலாம். ஈப்போ மாநகராட்சியினர் தமிழில் பெயர்ப்பலகை அமைக்க மறுப்புத் தெரிவித்தபொழுதும், அவர் போராடி தமிழை இடம்பெறச் செய்துள்ளார். இன்று தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதில் கூச்சப்படுபவர்கள் மத்தியில், திரு.விக்னேஷ்வரன் அவர்கள் பெயர்ப்பலகையில் தமிழுக்கு ஒரு இடம் கொடுத்து தனது தமிழார்வத்தை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டுதற்குரியது.அக்கணினி மையத்தில், திரு.விக்னேஷ்வரன் கணினி பாட வகுப்புகள், கணினி விற்பனை, கணினி உபரிப்பாகங்கள் விற்பனை, கணினி பழுது பார்த்தல், இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், வலையமைப்பாக்கம் போன்ற சேவைகளை வழங்கி வருகிறார்.

எனவே, ஈப்போ சுற்றுவட்டார மக்கள் கணினித் தொடர்பான சேவைகளுக்கு திரு.விக்னேஷ்வரன் அவர்களை அணுகலாம்.

இவரைத் தொடர்புக் கொள்ள :

கைப்பேசி எண் : 012-5575479

கணினி மைய முகவரி : எண் 12A , மேடான் சிலிபின் கட்டிடம் ஒன்றாவது மேல்தளம், சிலிபின் சாலை, 30100 ஈப்போ பேராக். (காயத்திரி மாளிகை அமைந்துள்ள வரிசையில்)

இவர் மென்மேலும் தன் வாழ்க்கைப் பயணத்தில் பல சாதனைகள் புரிந்திட ஓலைச்சுவடியின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

viknesh February 13, 2008 at 3:55 PM  

ha ha ha... sir konjam migai paduthi eluthi irukingale....

TBCD February 13, 2008 at 4:02 PM  

மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள் விக்னேசுவரன்

சதீஷ் குமார் February 13, 2008 at 6:39 PM  

மிகைப்படுத்திக் கூறிவிட்டேனா? அது தங்களுடைய தன்னடக்கத்தையே காட்டுகிறது...

Anonymous February 13, 2008 at 10:55 PM  

@விக்னேஸ்:வாழ்த்துக்கள் தோழா :)
@சதிஷ்:நல்லவே ஊக்கம் கொடுக்குறீங்க.அதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள் :)

Anonymous February 14, 2008 at 10:42 PM  

Vaaltukkal...viraivil unggal kanini nilayatukku varugai puriven..naan uyar kalvi katra athe UUM paditha neenggal angge padittha padikum anaivarukkum perumai sertu vitteergal..vaalthukkal...

நாமக்கல் சிபி February 15, 2008 at 9:59 PM  

Vaazthukkal Viknesh!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP