நன்றி ஐயா நன்றி - மோகனன் பெருமாள்
>> Wednesday, February 6, 2008
அரசாங்கத்திற்கே உரித்தான நன்றிகள்
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை
கேட்டுத் தவித்த நாட்கள் போய்
தாங்களாக தந்தார்கள் விடுமுறை
நன்றி ஐயா நன்றி
தீபாவளி தினத்திலே
(அம்னோ) மாநாடு நடத்தியது போய்
பொங்கலுக்கு வீதிக்கு வந்தார்களே
நன்றி ஐயா நன்றி
இனி ஊர் தோறும் கோயில் உடைய
கேட்கப் போன பொண்ணுப் பிள்ளைகள்
மண்டை உடைய - மனம் உடைய
நன்றி ஐயா நன்றி
உணர்வுகளை மதிக்க நாதி இல்லையே
மனம் வாடி கிடந்த போது
மன்னிப்பு கேட்டாறே
நன்றி ஐயா நன்றி
ஒரு தமிழ்ப் பள்ளி கட்ட
நூறு முறை நடந்தோம்
ஒரே நாளில் 34 தமிழ்ப் பள்ளிகள்
நன்றி ஐயா நன்றி
அடையாள அட்டை கேட்டால்
பாரம் தர மறுத்தார்கள்
மந்திரி புசாரே வந்து பாரம் கொடுக்கிறாரே
நன்றி ஐயா நன்றி
இதெல்லாம் சலுகை அல்ல
உங்கள் உரிமை என
உணர வைத்தீர்களே
நன்றி ஐயா நன்றி
வீரச் சிங்கங்களுக்கு உரித்தான நன்றிகள்
நசிந்த மக்கள் நிமிரக் கண்டீரே
உன் மனைவி மக்கள் காணாமல்
'இசா'வில் கிடக்கிறீரே
நன்றி ஐயா நன்றி
செல்லறித்த சில்லரை சலுகைக்கும்
பல்லிளிக்கும் சமூகமா?
சிந்திக்க வைத்தீரே?
நன்றி ஐயா நன்றி
முதுகெலும்புத் தேய்ந்த
சமூகம் நிமிர்ந்த வேளையிலே
மனதை உரசிப் பார்க்க
ஒரு வாய்ப்புத் தந்தீரே
நன்றி ஐயா நன்றி
நன்றி ஐயா நன்றி
நன்றி : மோகனன் பெருமாள், லண்டன்
எதையும் காலங்கடந்து செயல்படுத்தும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கையும் சுயநலத்தையும் நாசூக்காக கண்டித்திருக்கின்றன இக்கவிதையின் வரிகள்..
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
Intha kavithaigalin varigalai padittu muditta pin, 5 thalaivargalukkum "nandrigal" solla vaarthaigal tedinen kidaika villai..eppadi sonnaalum eedu katta mudiyaathu ivargalin thiyagam..namakku kidaikum ella urimaigalum ivargalin uthiram...naam ivargalukku seiyum kaimaaru NAM INA OTRUMAI...sinthipom..purapaduvom..nam inatthai vaalavaipom...
Post a Comment