'மக்கள் சக்தி'யின் கூட்டுப் பிரார்த்தனை

>> Wednesday, February 6, 2008

தெலுக் இந்தானில் 'மக்கள் சக்தி'யின் ஏற்பாட்டில் கூட்டுப் பிரார்த்தனை நடைப்பெறவுள்ளது...

நாளை 7-ஆம் திகதி பிப்ரவரியன்று தாமான் டேசா ஆமான், பத்து 6, தெலுக் இந்தான் சாலை, சிம்பாங் அம்பாட், தெலுக் இந்தான் எனும் முகவரியில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களின் விடுதலைக்கும் அவர்களின் குடும்பத்தினர் நலமுடன் இருக்கவும் மக்கள் சக்தி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டுப் பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இக்கூட்டுப் பிரார்த்தனையில், நமக்காக இன்று தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சிறைவாசம் புரியும் 5 தலைவர்களும் விரைவில் விடுதலைப் பெற வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உரிமைக்காகப் போராடுவோம், மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும்!

நிகழ்வுத் தொடர்பாக மி்ன்மடல் அனுப்பியவர் : சுப்ரா, சித்தியவான் பேராக்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP