என் கண்களைக் கலங்க வைத்த வரிகள்...
>> Sunday, February 10, 2008
வீதியில் ஒரு சேதி!
அத்தை! சாப்பிடவாங்க....
நேரமாச்சு......
பாட்டி! பாட்டி!
இன்னொரு கதை சொல்லு!
அம்மா! இந்தாம்மா!
கைசெலவுக்கு வச்சுக்க இத...
பாதசாரிகளே!!
வேண்டாம்....
எழுப்பாதீர்கள் அவளை!
கலைக்காதீர்கள் அவள் கனவை!
----------------------------------------------------------------------------------
சிறுமை மடமை இளமை வெறுமை
வறுமை முதுமை தனிமை கொடுமை
மறுமை புதுமை அருமை வளமை
பொறுமை பெருமை எளிமை இனிமை
சிறுமையும் மடமையும் கொண்டு வெறுமையாய் இருக்கும் இளமை; அதனால் தாய்க்கு நேர்ந்தது வறுமையுடன் முதுமையும், தனிமையாம் கொடுமையும். அதையே மறுபுறத்தில் புதுமையான அருமையான வளமையாய் ஆக்கியது, தாயின் பெருமை கொள்ளும் பொறுமை. அதனால் நேர்ந்தது இனிமையான எளிமை!
பயில்கலை மகளவள் புடைவை யுடுத்தி
ஒயிலாய்க் கரத்தைத் தலையணை யாக்கி
வெயிலில் கருத்தும் உள்ளம் வெளுத்தும்
துயிலது சாய்ந்ததும் நொடியில் கொள்தாயே!
நியாயமாய் வாழ்க்கையில் நடந்து தொலைந்தாயோ?
வியாபாரப் பிள்ளைக்குத் தந்தெலாங் கெட்டாயோ?
தியாகத்தின் எல்லையைத் தொட்டு விட்டாயோ?
மயானத்தின் எல்லையைத் தொட மறந்தாயோ?
மனத்தினி லுறுதியும் நெஞ்சினி லீரமும்
சினத்தினைச் சுட்டிடுங் குறைவிலா அன்பும்
இனத்தினைக் காத்திடு் முடிவிலா அருளும்
தனமெனத் தந்திடுந் தெய்வங் கண்டேன்.
இழக்கவும் இனியேது மிலாத அன்னையே
முழக்கமாய் செய்கையால் பாருக் குரைப்பது
பழக்கமாய் உழைக்கு மெளிமை வாழ்க்கையில்
புழக்கடைத் தரையும் மெத்தைச் சுகமெனவே!
இணையத்திலிருந்து கண்டெடுத்தவை...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment