9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு?
>> Wednesday, November 5, 2008
ஒரு 20 அமெரிக்க டாலரில் மறைந்துள்ளது அமெரிக்காவை உலுக்கிய 9/11 பயங்கரவாதத் தாக்குதல். இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்றுத் தெரியவில்லை. மின்னஞ்சலில் வந்திருந்தது. அதனைத் தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்..
உங்களிடம் 20 அமெரிக்க டாலர் ஒற்றை நோட்டு உள்ளதா? கீழ்காணும் செய்முறையைப் பின்பற்றிப் பாருங்கள்..
1) படத்தைக் கவனமாகப் பார்த்து, அதேப்போல் அந்நோட்டை மடக்கிக் கொள்ளவும்.
2)கீழ்காணும் படத்தைப் பின்பற்றி மீண்டும் அந்நோட்டை தகுந்தவாறு மடக்கிக் கொள்ளவும்.
3) நோட்டின் மற்றொரு பாகத்தையும் கீழ்கண்டவாறு மடக்கிக் கொள்ளவும். அதன்பின் சிவப்பு வட்டக்குறியை உற்று நோக்கவும். அமெரிக்க தற்காப்பு அமைச்சின் கட்டிடம் (பெண்டகான்)நெருப்புப் பற்றி எரிவதுபோல் தெரிகிறதா?
4) இப்பொழுது அந்நோட்டை அப்படியே பின்னால் திருப்பிப் பார்க்கவும்.
என்ன ஆச்சரியம்! நியூ யார்க் உலக வாணிப மைய இரட்டைக் கோபுரங்கள் நெருப்புப் பற்றி எரிவது தெரிகிறது அல்லவா? இது தற்செயலாக இருக்குமா?
உலகை உலுக்கிய செப்தம்பர் 11 நிகழ்வு ஒரு 20 அமெரிக்க டாலரில் இருக்கிறதே!
இது போதவில்லையா, மேலும் படியுங்கள்...
முதலில் பெண்டகான் கட்டிடம்..
இரண்டாவது இரட்டைக் கோபுரங்கள்..
இப்பொழுது கீழே கவனியுங்கள்...
என்னா ஒரு வில்லத்தனம்..!
அட...
(9 + 11) கூட்டினால் 20.
என்னக் கொடுமை இது..!
6 கருத்து ஓலை(கள்):
மடித்து விளையாட இந்த நோட்டு என்னிடம் இல்லை...
ஒரு பத்து பதினைஞ்சு அனுப்ப முடியுமா ( சரியா வெளையாடத்தெரியாம பிஞ்சிருச்சின்னா ? அதுக்குத்தான் பத்து பதினைஞ்சு)
//ஒரு பத்து பதினைஞ்சு அனுப்ப முடியுமா//
ஆஹா.. கெளம்பிட்டாய்ங்கையா... :)
எனக்கு ஐம்பது,அறுபது தேவைப்படலாம்.
//எனக்கு ஐம்பது,அறுபது தேவைப்படலாம்.//
கண்டிப்பா வால்பையன், மலேசியாவிலேர்ந்து ஒரு ஆட்டோல அனுப்பி வைக்கிறேன்.. :)
//கண்டிப்பா வால்பையன், மலேசியாவிலேர்ந்து ஒரு ஆட்டோல அனுப்பி வைக்கிறேன்.. :)//
அப்போ ஒரு ஐம்பது ஆட்டோ அனுப்பி வையுங்க, இங்க புதுசா தொழில் பண்ணலாம்
இவ்வளோ பற்றியல்(விடயம்) இருக்கா? நானும் அந்த மாறி மடிச்சி பார்க்குறேன் எனக்கு ஒரு வானுந்து நிறை டாலர் நோட்டுகள் அனுப்பி வைக்கவும்...
Post a Comment