உதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்
>> Wednesday, November 5, 2008
லண்டன்வாழ் மலேசியத் தமிழர்களுக்கு ஓர் அறிவிப்பு!
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத, மலேசிய சுயநல அரசியல்வாதிகளின் ஆயுதமாக விளங்கும் கொடுங்கோல் சட்டமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கும், இண்ட்ராஃபின் சட்ட ஆலோசகர் திரு.உதயகுமாரின் பிறந்தநாளை நினைவுக் கொள்ளும் வகையிலும் லண்டனில் அமைதி மறியல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமையை முன்னெடுக்கும் இவ்வமைதி மறியலில் கலந்துக் கொள்ளுமாறு இலண்டன்வாழ் மலேசியத் தமிழர்களுக்கும், பிற புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இடம் : திரஃபால்கார் சதுக்கம், லண்டன்
(TRAFALGAR SQUARE, LONDON)
திகதி / நாள் : 8 நவம்பர் 2008
நேரம் : காலை 10.45
(TRAFALGAR SQUARE, LONDON)
திகதி / நாள் : 8 நவம்பர் 2008
நேரம் : காலை 10.45
கீழ்காணும் நடவடிக்கைகளின்வழி மலேசிய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது.
- அரி ராயா பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வருகையும் பிரதமருக்கு அரி ராயா வாழ்த்து அட்டையை சமர்ப்பித்ததும் இசுலாம் மதத்தை இழிவுபடுத்தியதோடு, தேச பாதுகாப்பிற்கு ஒரு மருட்டலாக அமைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
- இண்ட்ராஃபின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு பிரதமரை வருகைத்தர அழைப்பு விடுத்தச் செயல் தேசிய பாதுகாப்பிற்கு மருட்டல் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
- கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட மலேசியத் தமிழர்களின் உரிமைக் குரலாய் விளங்கிவந்த இண்ட்ராஃப் இயக்கத்தை மலேசிய அரசாங்கம் தடைச் செய்தது.
- தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அழைப்பு அட்டையை பிரதமருக்குச் சமர்ப்பிக்கும்வகையில் அவரின் அலுவலகத்தின் முன் திரண்டிருந்த 6 வயதுக் குழந்தையும் 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் கைதாகினர்.
- உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்த இண்ட்ராஃப் வழக்கறிஞர்களை முறையான நீதி விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
- ராசா பெத்ரா உண்மையைப் பேசியதால் முறையான நீதி விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
- 60 கைதிகள் காலவரையறையற்ற காவலிலும் சிலர் 7 வருடங்களுக்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- மலேசியா நீதி பரிபாலனத்தில் பின்னடைவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.
- வேதமூர்த்தி, இலண்டன் -
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
நல்ல விடயம் அங்கு உள்ள புலம்பெயர்ந்து வாழும் அமைப்பக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால் உங்கள் நிகழ்வு மேலும் பலம் பெறும் என நினைக்கிறேன். உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Post a Comment