உதயாவிற்காக ஒரு கவிதை எழுதுங்கள்...
>> Thursday, November 6, 2008
தொழிற்சங்க போராட்டவாதி கணபதியின் மறு அவதாரமாக இண்ட்ராஃப் எனும் இயக்கத்தின்வழி மலேசியத் தமிழர்களிடையே போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திய வழக்கறிஞர் திரு.உதயகுமார் அவர்களுக்கு நாளைப் பிறந்த நாள்.
மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காக உரிமைக் குரல் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்று சிறையில் வாடுகிறார்.
அவரின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் மலேசியத் தமிழர்கள் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அவர் நமக்காகச் செய்த தியாகங்களுக்கு நன்றியறிதல் உடைய சமுதாயமாக நாம் இருக்க வேண்டும். சுகமான வாழ்க்கை, பாசமிக்கக் குடும்பம், தொழில் என அனைத்தையும் சில காலங்கள் துறந்து சிறை வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் அவரும், இயக்கம் தடைச் செய்யப்பட்டக் கவலையில் மக்களும் இருந்தாலும் உணர்வுகள் இன்னும் தடைப்பட்டு போகவில்லை! அந்த மகத்தான சோதியை உள்ளத்தில் அணைய விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
திரு.உதயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்கள் கவிதைகளோ, உரைவீச்சோ அல்லது கட்டுரையோ படைத்து நீங்கள் விரும்பும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாமே. உதயாவின் பிறந்தநாளையொட்டி ஓலைச்சுவடிக்கு ஏதெனும் படைப்புகள் அனுப்ப எண்ணினால் olaichuvadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
இது நாம் அவர்மீது காட்டும் நன்றியறிதலை வெளிப்படுத்தும் ஒரு சிறு முயற்சிதான்..
3 கருத்து ஓலை(கள்):
உண்மைத் தமிழனாக உதயமானவன்
உரிமைக் குரலாக உதயமானவன்
உயிருக்கு அஞ்சாமல் உதயமானவன்
ஓயாமல் போராட உதயமானவன்
தளரா மனத்தோடு உதயமானவன்
தமிழர் நலன்காக்க உதயமானவன்
தன்னி னம்வாழ உதயமானவன்
தரணி போற்ற உதயமானவன்
கவிதைக்கு மிக்க நன்றி ஐயா.
உதய சூரியன் அவன்
இதய வெளிச்சம் அவன்
குமரன் திருமுருகன் அவம்
உதயகுமார் என பெயர் பெற்றவன்
Post a Comment