ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?
>> Wednesday, November 5, 2008
அடுத்து நீங்கள் படிக்கவிருக்கும் விடயம் நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.
எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரசியமான மடலை தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சிலர் இவ்விடயம் குறித்து ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..
ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!
ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.
இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.
இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.
இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.
ஆச்சரியமாக இருக்கிறதா...?
லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.
கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.
இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விரு அதிபர்களைக் கொலைச் செய்த கொலையாளிகளின் பெயரும் சான்சன்.
லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.
கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.
லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.
கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.
இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.
இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.
(John Wilkes Booth , Lee Harvey Oswald)
என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?
லிங்கன் - 'ஃபோர்டு' என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.
கென்னடி - 'ஃபோர்டு' நிறுவனம் தயாரித்த 'லிங்கன்' எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.
திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.
கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.
இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.
இங்குதான் சுவாரசியமே உள்ளது... மேலும் தொடர்ந்து படியுங்கள்..
லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.
கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.
தகவல்களனைத்தும் எப்படி இருந்தன? ஆச்சரியமாக உள்ளதா...?
இதனையடுத்து மற்றொரு சுவாரசியமான விடயமும் கைவசம் இருக்கிறது! அதனை அடுத்தப் பதிவில் காணலாம்.. :)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment