கைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்!
>> Monday, November 24, 2008
உள்நாட்டில் நடைப்பெறும் சம்பவங்களைச் சுடச் சுட அறிந்துக் கொள்ள வேண்டுமா? ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளின்வழி மலேசியா கினி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் 'மொபைல் கினி' மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள்!
இச்சேவையின்வழி தமிழ் மொழியிலும் செய்திகளைக் கைப்பேசியின்வழி பெறலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். நாடறிந்த தமிழறிஞர் முனைவர் திரு.முரசு நெடுமாறன் அவர்களின் மகன் திரு.முத்து நெடுமாறனின் கைவண்ண்த்தில் உருப்பெற்ற இக்கைப்பேசி செயலியானது இப்பிராந்தியத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். முரசு தொடர்புத்துறை நிறுவனத்தின் தோற்றுநரும் தொழிநுட்ப வரைகலைஞருமான திரு.முத்து நெடுமாறன் கூறுகையில், மலேசியா கினியுடன் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து பணியாற்றுவதில் தாம் மிக்க மகிழ்வதாகவும், மொழி மேலாண்மை, செயல்த்திறன், அதிவேகத் தகவல் வழங்குதல் போன்ற கூறுகளில் இச்செயலியானது நிச்சயம் ஒரு வெற்றிப் பெற்ற சேவைதான் என்றார் அவர்.
மலேசியா கினி செய்திகள் கைப்பேசிகளின்வழி மக்களைச் சென்றடையவிருப்பது தமக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இணையச் சேவையின் தரத்திற்கொப்ப இச்செயலி செயல்படும் என்று மலேசியா கினியின் தலைமை நிர்வாகி திரு.பிரேமேசு சந்திரன் கூறினார்.
முதல் 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இச்சேவையில் மலேசியா கினியின் சுடச் சுடச் செய்திகளை முழுமையாகப் படிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கழித்து சந்தாதாரர்களுக்கு மட்டுமே முழு செய்திகளும் வழங்கப்படும். சந்தாதாரர் அல்லாதவர்கள் செய்திகளின் சுருக்கத்தினைப் படித்து அறிந்துக் கொள்ளலாம். அதோடு சுருக்கச் செய்திகளை பிற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் சேவையும் இதில் அடங்கியுள்ளது. இச்சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் பின்னூட்டம் இடுதல், கருத்து கணிப்புகளுக்கு வாக்களித்தல் போன்ற வசதிகள் வரவிருக்கின்றன.
இச்சேவையை ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளில் மட்டுமே பெற முடியும். இச்சேவையை இலவசமாக நிருவ உங்கள் கைப்பேசியில் குறுந்தகவல் சேவைக்குச் சென்று "mk" என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 32577 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
இவ்வசதியை தமிழிலும் ஏற்படுத்திக் கொடுத்த முரசு நிறுவனத்திற்கும் மலேசியா கினி ஊடகத்திற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்!
மலேசியா கினி நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள். மலேசியா கினி காணொளி தளத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்றிருந்தது. தற்போது மூன்று மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, தமிழ்ப் பிரிவு விடுபட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்விடயம் குறித்து மலேசியாகினியிடம் பலரும் மின்னஞ்சல்வழி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 கருத்து ஓலை(கள்):
அப்ப நல்லதுதான்.
முரசு அஞ்சலை அறிமுகப்படுத்தும் நோக்கில் மலேசியாவில் தமிழ் இணைய மாநாட்டுக்கு முனைப்பாக நின்றவர், 2004 இக்குப் பிறகு இணைய மாநாடு பற்றிய கவனம் இல்லாமல் இருந்தவர். இனி தனனுடைய மென்பொருள் விற்கவும் விளம்பரப்படுத்தவும் இன்னொரு தமிழ் இணைய மாநாட்டுக்கு மலேசியாவில் ஏற்பாடு செய்வார்.
அப்படியே முரசு அஞ்சல் இற்கு எப்ப vista support தரப்போறார் ?
Post a Comment