சாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன் அமைதி மறியல்!
>> Monday, November 10, 2008
இந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :
எதிர்வரும் 13 நவம்பர் 2008 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் சாணக்கிய புரி, புது தில்லியில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தின் முன்புறம் இந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கத்தினர் அமைதி மறியலில் ஈடுபடவுள்ளனர். மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் இயக்கத்தினை மலேசிய அரசாங்கம் தடைச்செய்ததை கண்டிக்கும் வகையில் இவ்வமைதி மறியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சம உரிமைகள் மலேசிய இந்தியர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும், முறையான நீதிவிசாரணைகளுக்கு மதிப்பளிக்காத கொடுங்கோல் சட்டமான மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுதலைச் செய்யுமாறும் இவ்வியக்கம் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
இவ்வமைதி மறியலில் கலந்துக் கொள்பவர்கள் மதியம் 2.30 மணியளவில் 'தீன் மூர்த்தி பவன்' எனுமிடத்தில் ஒன்றுகூடி பின் மலேசியத் தூதரகத்தை நோக்கி பேரணியாகச் செல்வர்.
பல்வேறு இந்திய மனித உரிமை இயக்கங்களின் பிரதிநிகள் அன்றைய தினம் மலேசிய உயர் தூதரக அதிகாரியிடம் தத்தம் மகசர்களை ஒப்படைப்பர்.
எனவே, இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கு உங்கள் நாட்டின் நிருபர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இக்கண்,
ராசேசு கோக்னா
(நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்)
இந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கம்
தொலைப்பேசி எண் : +9911222251
1 கருத்து ஓலை(கள்):
தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்களும் நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனை பிரதிக்கின்றோம். மனித உரிமையை பற்றி மிகுந்த ஆவலுடன் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது என்னை கவர்ந்துள்ளது.
Post a Comment