நவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்!
>> Thursday, November 13, 2008
அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்களின் வெறிநாய்க் கோலமும் , சென்னைக் காவல்த்துறையினரின் கையாளாகாதத் தனமும் இக்காணொளியில் பட்டவர்த்தனமாக தெரிகிறது!
பகுதி 1
பகுதி 2
இவர்கள்தான் இன்றைய நவீன கல்விமுறையும், சினிமா, அரசியல் தாக்கங்களும் ஒன்றுசேர உருவாக்கப்பட்ட நாளையத் தலைவர்கள்! மனம் வலிக்கிறது!
சட்டக்கல்லூரியில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த சாதிக் கலவரத்தில் இருவர் மாட்டிக் கொள்ள அவர்களை எப்படி போட்டு அடிக்கிறார்கள் என்றுப் பாருங்கள்! மரக்கடைகளாலும் கூரிய ஆயுதங்களினாலும் அவனுக்கு விழும் அடி ஒவ்வொன்றும் மனித உரிமைக்கு அடிக்கும் சாவு மணிபோல் இருக்கிறது.
இக்காட்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னைக் காவல்த்துறையினர் குறைந்த பட்சம் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி மூர்ச்சை அடைந்தவனையும் கால்கள் இரண்டும் செயலிழந்து நிற்க கதியில்லாமல் மரக்கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம், ஆனால் அதற்குக்கூட துப்பில்லை இவர்களுக்கு!
இதே அவர்களின் சொந்தப் பிள்ளைகள் இப்படி மிருகத் தனமாக அடிக்கப்படும்பொழுது இவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்களைப் பெற்றவர்களும் வடிக்கும் கண்ணீருக்கு என்னதான் பதில்?!
கண்துடைப்புக்காக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்த்துறையினரை பதவி நீக்கம், இட மாற்றம்! கொலைவெறியோடு சண்டையில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களின் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த பல்வேறு குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!
ஒன்று நடந்து முடிந்தப் பிறகுதான் நடவடிக்கை எடுப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள்!! காவல்த்துறையினர் நினைத்திருந்தால் இச்சண்டையைத் தடுத்திருக்கலாம்! அடி வாங்கியவர்கள் இறந்திருந்தால்!? நல்ல வேளை பிழைத்துக் கொண்டார்கள்!! சட்டக் கல்லூரி மாணவர்கள்கூட யாரும் இச்சண்டையைத் தடுக்கவில்லை என்று நினைக்கும்பொழுது மனவேதனையாக இருக்கிறது. மனிதத்தன்மையைவிட சாதிதான் பெரிதாகப் போய்விட்டது இவர்களுக்கு! அரசியல்வாதிகளும் பாமர மக்களும்தான் சாதியைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்றால் கல்வி கற்கும் இளைஞர்களுமா இப்படி?! மாணவர் சமுதாயத்திற்கே இச்சம்பவம் ஒரு வெட்கக் கேடு!
மேலும் தகவல்களுக்கு : சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
4 கருத்து ஓலை(கள்):
இந்தக் காவற்றுறையினர் வீட்டில் மனைவி;பிள்ளைகள்;உறவினர் முகத்தில் எப்படி?? விழிக்கிறார்கள்.
இவர்களை வீட்டில் மதிப்பார்களா???ஏதும் புரியவில்லை.
நின்று இவர்களும் ஏன் வேடிக்கை பார்த்தார்கள்...
இவ்வளவு கொடுமையை என் வாழ்வில் காணவில்லை...
இந்த சா(தீ) தமிழகத்தில் மட்டுமல்ல நம் நாட்டிலும் நீரில் பூத்தப் நெருப்பாய் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது!! :-(
நல்லா இருக்கே ...வருங்கால வக்கீல்கள்....நாடு என்னாவது
//"நவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்!"//
மிக பொருத்தமான தலைப்பு.
Post a Comment