செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின் வாக்குமூலம்!
>> Friday, November 14, 2008
13//11/08, செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகம்
புகார் எண் : செந்துல்/13812/08
திரு.செயதாசு, ஆர்.எசு.தனேந்திரன் வாக்குமூலம்
நாங்கள் சட்டப்பிரிவு 111-ன் கீழ் அழைக்கப்பட்டு சங்கங்கள் சட்டம் 48(1)-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்.
காவல்த்துறையினர் எங்களிருவரிடமும் கேட்டக் கேள்விகள் :-
- 22/10/08 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் எந்த பகுதியில் இருந்தீர்கள்?
- எதற்காக நாடாளுமன்றம் வந்தீர்கள்?
- அங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நிகழ்ந்ததா?
- அங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெறவிருப்பது உங்களுக்கு எப்படிதெரியும்?
- அந்த நிருபர் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யார்?
- நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் என்னென்ன பேசப்பட்டது?
- நீங்கள் ஏதாவதொரு இயக்கத்தைச் சார்ந்தவரா?
- எந்தெந்த ஊடகங்களின் நிருபர்கள் அச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்?
- அவ்வியக்கத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
- அவ்வியக்கத்தின் நோக்கம் என்ன?
- அவ்வியக்கம் முறையாக ஆணையம்வழி பதிவு செய்யப்பட்டுள்ளதா?
- எவ்வளவு நேரம் அந்நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது?
- அக்கூட்டத்தில் எத்தனை ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்?
- மொத்தம் எத்தனைப் பேர் அந்நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்?
- அச்சந்திப்புக் கூட்டத்தில் கேள்வி-பதில் அங்கம் இருந்ததா?
- நீங்கள் ஏதாவது அறிக்கைகளை விநியோகம் செய்தீர்களா?
- அவ்வறிக்கையின் சாரம் என்ன?
- நிருபர் சந்திப்புக் கூட்டத்தின் நிலைமை எப்படி இருந்தது?
- இண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
- இண்ட்ராஃப் இயக்கத்தின் நோக்கம் என்ன?
- நாடாளுமன்றத்திற்கு எப்படி வந்தீர்கள்?
- நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நீங்கள் யாரிடமாவது பண உதவி பெற்றீர்களா?
- நீங்கள் எந்தவொரு இயக்கத்தினையாவது பிரதிநிதிக்கிறீர்களா?
- உங்கள் ஆதரவாளர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா?
- இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?
கேட்கப்பட்ட இக்கேள்விகளில் முதற்கேள்விக்கு மட்டுமே பதில் கூறினோம். சட்டப்பிரிவு 111(2) வழிவகுக்கும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற கேள்விகளுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தோம்.
எங்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளும் காவல்த்துறையினரின் நடவடிக்கையானது அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவும் எங்களின் உரிமைகளை நாங்கள் செயல்படுத்துவதற்கு எதிரான அடக்குமுறைச் செயலாகவும் நாங்கள் கருதுகிறோம்.
ஒரு மலேசியக் குடிமகன் என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு எங்களுக்கு சட்டப்பூர்வமான முழு உரிமையும் உண்டு. உள்த்துறை அமைச்சரின் பொய்க்கூற்றுகளை நாடாளுமன்றத்தில் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துவதில் எந்தவொரு தவறும் இருக்க முடியாது. தொடர்ந்து இந்நாட்டின் சட்டத்துறையையும் காவல்த்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு அம்னோ அரசாங்கம் சனநாயகத்தைக் கொன்று வருகிறது!
நாட்டு குடிமக்களை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அனுமதிக்காதச் செயலானது அம்னோவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு வெட்கக் கேடாகும்!
திரு.செயதாசு
காவல்த்துறை கண்காணிப்பு & மனித உரிமை செயற்குழு
வாழ்க மக்கள் சக்தி!
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment