கெராக்கான் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் காலமானார்!

>> Monday, November 3, 2008


கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் இன்று காலையில் தனது மருந்தகத்தின் வெளியே இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவருக்கு வயது 58 ஆகும். தற்போது அன்னாரின் நல்லுடல் சிரம்பான் மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே கெராக்கானின் மூத்தத் தலைவர்கள் ஒன்றுகூடி இருப்பதாகவும் அறியப்படுகிறது.

திரு.விசயரத்தினம் அவர்களின் இறப்பிற்குக் காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், இதுத் தொடர்பாக காவல்த்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர். திரு.விசயரத்தினம் சிரம்பானில் ஒரு மருத்துவராக சொந்த மருந்தகத்தை நடத்தி வருகிறார். சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் கெராக்கான் கட்சியிலேயே சீனரல்லாத உயர்ப்பதவி வகிக்கும் ஒரு தலைவராக திரு.விசயரத்தினம் விளங்கினார்.

கடந்த மாதம் நடைப்பெற்ற கட்சி தேர்தலில் திரு.விசயரத்தினம் கட்சியின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரின் இறப்புச் செய்தி அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போமாக...

பி.ப 3.15 :

திரு.விசயரத்தினம் மாரடைப்பால் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிவிக்கின்றன. அன்னாருக்கு அனுசியா தருமரத்தினம் என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில் கெராக்கான் கட்சித் தலைவர் திரு.கோ சூ கூன் அன்னாரின் மறைவையோட்டி தமது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். சிறந்தவொரு தலைவரை எங்கள் கட்சி இழந்து விட்டது என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Selva November 3, 2008 at 5:40 PM  

May his soul rest in peace.. :(

@ Selva

Anonymous November 5, 2008 at 1:14 AM  

avaru viduthalaipuli

சுந்தரம் November 5, 2008 at 2:16 AM  

/avaru viduthalaipuli/

இப்படி பொய் பின்னூடங்களை விடவேண்டாம். தமிழர்களின் எதிரிகள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். மலேசிய மக்களின் துயரம் இவர்களுக்கு முக்கியமில்லை.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP