உதயாவிற்காக சிறப்புப் பிராத்தனைகள்...

>> Thursday, November 6, 2008


அறிவிப்புகள் :

திரு.சத்தி கிருட்டிணன்,

நாளை வழக்கறிஞர் திரு.உதயகுமாரின் 47-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈப்போ மக்கள் சக்தி இயக்கம், அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தில் சிறப்புப் பிராத்தனை நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

திகதி / நாள் : 07 நவம்பர் 2008 (வெள்ளிக்கிழமை)

இடம்
: அருள்மிகு நாகம்மாள் ஆலயம், எண்.19,
எங் சோங் தேக் சாலை,
தாமான் ரிசா, ஈப்போ

நேரம்
: மாலை 6.45

திரு
.உதயகுமார் நலமுடனும் இருக்க வேண்டும் எனவும் அனைத்து .சா கைதிகளும் விரைவில் விடுதலையடைய வேண்டும் என்றும் இறைவனை வேண்டி பிராத்தனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சுற்றுவட்டார மக்கள் இப்பிரார்த்தனையில் கலந்துக்கொண்டு ஒற்றுமையையும் ஆதரவையும் புலப்படுத்துமாறு ஈப்போ மக்கள் சக்தி இயக்கத்தினர் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

****

திரு.செயதாசு,

நாளை பத்துமலையில் திரு.உதயகுமாரின் பிறந்த நாளையும் அவரின் போராட்டத்தையும் நினைவுக் கூறும் வகையில் சிறப்புப் பிராத்தனை நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 47 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

திகதி / நாள் : 07 நவம்பர் 2008 (வெள்ளிக்கிழமை)

இடம் : பத்துமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம்

நேரம் : இரவு 7.30

சுற்றுவட்டார மக்களனைவரும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறு திரு.செயதாசு அழைப்பு விடுக்கிறார்.

மற்ற ஆலயங்களில் நடக்கும் சிறப்புப் பிராத்தனைகள் பின்வருமாறு (07-11-08):

பூச்சோங் 12-வது மைல் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், சிலாங்கூர்
இரவு 7.30

உபயம் ‘அன்பு இல்லம் குழந்தைகள் & பக்தர்கள்'

பட்டவேர்த் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், பினாங்கு
இரவு 7.30

ஜாசின் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், மலாக்கா
இரவு 7.30

புக்கிட் காதோங் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், மலாக்கா
இரவு 7.30

பெம்பான் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், மலாக்கா
இரவு 7.30

மந்தின் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், சிரம்பான்
இரவு 7.30

ரின்சிங் சிறீ மகா மாரியம்மன் ஆலயம், காஜாங்
இரவு 7.30

சா'ஆ சிறீ மகா மாரியம்மன் ஆலயம் , சொகூர்
இரவு 7.30

குளுவாங் மாரியம்மன் ஆலயம், சொகூர்
இரவு 7.30

கெர்லிங் சிறீ முருகன் ஆலயம், சிலாங்கூர்
இரவு 7.30

சுங்கை பட்டாணி, பாக்கார் ஆராங் அருள்மிகு சிறீ மகா மாரியம்மன் ஆலயம்
இரவு 7.30

பாயா பெசார் சிறீ கருமாரியம்மன் ஆலயம்
இரவு 7.30


நாளை (08-11-08) நடைப்பெறவுள்ள ஆலயப் பிராத்தனைகள் பின்வருமாறு :

ஈப்போ, கந்தான் கல்லுமலை ஆலயம்

சனிக்கிழமை மாலை 6 மணி தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிவரை மகா மிருத்தியுஞ்சாய ஜப யாகம் மற்றும் சிறப்பு சங்கல்பம் நடைப்பெறவுள்ளது. சுற்றுவட்டார மக்களனைவரும் பாரம்பரிய உடைகளில் வந்து இந்நிகழ்வைச் சிறப்பிக்கும்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.


வாழ்க மக்கள் சக்தி!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

இனியவள் புனிதா November 7, 2008 at 7:54 AM  

சீக்கிரமே அவர் விடுதலைப் பெற வேண்டி பிராத்தித்துக் கொள்கிறேன்!!!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP