31 இந்தியர்கள் விடுதலை..!!
>> Tuesday, December 18, 2007
பத்துமலை சுப்பிரமணியர் ஆலய திருத்தலத்தின் முன் கூடி போலீசாரை கொலை செய்ய முற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 31 இந்தியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நேற்று அரசு தரப்பு வாபஸ் பெற்றுக் கொண்டதால் அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இரு வாரங்களாக சுங்கை பூலோ மற்றும் காஜாங் சிறைச்சாலையில் இருந்து வந்த அவர்கள் அனைவரும் நேற்று விடுதலையான தீர்ப்பைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நீதிமன்றத்தில் குழுமி இருந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த விடுதலையில் 6 கல்லூரி மாணவர்கள் முழு விடுதலையும் மற்ற 25 பேர்களுக்கு டிசம்பர் 27-இல் மீண்டும் விசாரணை நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவர்களான எஸ்.முகிலன் (வயது 20), கே.தினகரன் (வயது 23), எல்.தியாகராஜன் (வயது 31), ஏ.வசந்தராவ் (வயது 19), எஸ்.ரமேஸ்குமார் (வயது 22) மற்றும் ஜி.சுமன் (வயது 20) ஆகியோருக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளும் மீட்டுக் கொள்ளப்பட்டன. இதனால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று 25 இந்தியர்களை தலா ரி.ம 500 வெள்ளி செலுத்தி ஜாமீனில் மீட்டார் கிள்ளான் சமூக சேவையாளர் கே.பி சாமி. அவர் தமக்குச் சொந்தமான 4 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி நிலப் பட்டாவை நீதிமன்றத்தில் அடமானம் வைத்தார்.
இவரின் இந்த உயரிய சேவைக்கு இவரை 'தன்மானத் தமிழன்' என வாழ்த்தி நன்றிகள் பலக் கூறிக்கொள்வோமாக...
மற்றுமொரு நிலவரத்தில் மலேசிய அரசாங்கம் இந்து உரிமைப் பணிப்படையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனைத்துலக போலீஸ் (INTERPOL) உதவியை நாடியுள்ளது. அதோடு தற்போது லண்டனில் இருக்கும் திரு.வேதமூர்த்தியின் நடவடிக்கைகள INTERPOL கண்காணிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
யார் நம்மைக் கண்காணித்தாலும் நமக்குக் கவலை இல்லை, ஏன், நம்மை தீவிரவாதிகள் எனக் கூறினாலும் கவலை இல்லை. நாங்கள் காந்தீயவாதிகள் என இந்த குருட்டு அரசாங்கத்திற்குத் தெரியும் வரை எங்களது.....
போராட்டம் தொடரும்...
3 கருத்து ஓலை(கள்):
அங்கு தமிழக திரைக்கலைஞர்களின் நட்சத்திர இரவுக்கு எதிர்ப்பு
உள்ளதா. இருந்தால் அது பற்றிய செய்திகள் தாருங்கள். இங்கு பிரசுரிக்கிறோம்.
குமார்
மாலைமுரசு சென்னை
செல்பேசி 9444056541
தற்போது, மலேசியாவில் பல தமிழ்ர் அமைப்புகள் தமிழ் சினிமா நட்சத்திர கலை நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக வெளிவரும் நாளேடுகளில் கண்டனம் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. மலேசிய இந்தியர்கள் சினிமா மோகத்தில் இருந்து வெளிப்பட்டு நாட்டில் நடக்கும் சில முக்கிய உரிமைகளுக்காக போராட வேண்டுமென்பது எங்களுடைய ஆசை. அதற்கான மாற்றத்தை சிறிது சிறிதாக மலேசிய மக்கள் அடைந்து வருகிறார்கள்.
திரு குமார் அவர்களே, உங்களுடைய மின்னஞல் முகவரி எனக்குக் கிடைத்தால், உங்களுக்கு நட்சத்திர கலை இரவின் கண்டனக் குரல்கள் தொடர்பாக இங்குள்ள நாளேடுகளில் வெளியான செய்திகளை உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.
Post a Comment