தசை மறுத்துப் போகும் நோய் / Muscular Dystrophy
>> Tuesday, December 4, 2007
உலகத்தில் இன்று பல நோய்களுக்கு மும்முரமாக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், Muscular dystrophy எனும் நோய்க்கு உட்பட்டவர்கள் மட்டும் இன்னும் கண்டுபிடிப்புகளின் நன்மைகளைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோயானது எளிதில் குணமாகக் கூடிய நோயல்ல. குறிப்பாகச் சொல்லப்போனால், இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறலாம். உடம்பில் உள்ள தசைகள் செயலற்றுப்போகும் இந்நோயானது மனிதனுக்கு ஆயுளைக் முன்கூட்டியே குறித்து வைத்திருக்கும். படிப்படியாக ஒரு மனிதனை மரண வாயிலுக்கு இட்டுச் செல்லும் தன்மையுடையது இந்நோய்.
ஆனால், தற்போதைய நிலவரத்தின்படி பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் இந்நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதனின் உயிரணுக்களில் உள்ள GENE எனப்படும் ஒருவகையான மரபணுக் கூறு நல்லப்படியாக இருந்தாலே இந்த நோயைக்கட்டுப்படுத்த முடியும் என ஒரு நியதி இருக்க, வேரொருவரின் உடம்பிலிருந்து நல்ல GENE மரபணுக்களை எடுத்து நோய் கண்டிருப்பவரின் உடலில் செலுத்த இந்நோய் தன் வீரியத்தை இழக்கின்றது என அண்மையில் கண்டுபிடித்துள்ளார்கள்.
இருப்பினும் இந்த Muscular Dystrophy நோய் கண்டிருப்பவரின் செல்களில் அனைத்திலும் இந்த GENEஐ தனித்தனியாக செலுத்துவது என்பது முடியாதக் காரியம். எனவே இரத்தம் மூலமாக ஒரு எலியின் உடலில் GENE-களை செலுத்தி ஆய்வு செய்தபோது இந்நோய் மிக விரைவில் தன் வீரியத்தை இழந்துள்ளது தெரிய வருகிறது. பின்பு, இதேச் சோதனை Muscular Dystrophy நோய்க் கண்ட ஆன்ட்ரூ எனும் சிறுவனின் மீது நடத்தப்பட்ட பின் இன்நோயானது மெதுவாக தன் வீரியத்தை இழந்து வருகிறது என மருத்துவர்கள் பெருமைபடக் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியானது பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது மருத்துவத்துறையின் இன்னொரு சாதனை எனக் கூறலாம்.
Muscular Dystrophy நோய்த் தொடர்பான படக்காட்சி
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment