கருத்துச் சுதந்திரத்தையும், மானத்தையும் விற்றது RTM
>> Monday, December 3, 2007
இந்து உரிமைப் பணிப்படைக்கு இன்று ஒரு கடிதம் ஈப்போவிலிருந்து கிடைத்துள்ளது.
இந்தக் கடிதம் சாமிநாத பத்தர் & சன் கோல்ட் ஸ்மித் நகைக்கடை உரிமையாளர் அலகேசனிடமிருந்து கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி மலேசிய வானொலி & தொலைக்காட்சி நிறுவனமான RTM நிருபர்கள் அலகேசனிடம் பேட்டி எடுப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்நிருபர்கள் இந்து உரிமைப் பணிப்படையினருக்கு எதிராகப் பேட்டிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அந்நிருபர்கள் கூறுவதைப்போல் அலகேசன் கூறவேண்டும் எனக் கூறி, இவ்வாறு மலாய் மொழியில் பேசச் சொல்லியிருக்கின்றனர்...
" Kami disini berniaga selama 60 tahun dan saya dapati tiada gangguan daripada kerajaan. Perniagaan saya disini sangat baik dan berterima kasih kepada kerajaan kerana menjaga kepentingan kaum India. Seperti memberi peluang perniagaan kepada kaum india di negara ini, saya rasa dakwaan pihak tertentu yang mengatakan kerajaan Malaysia mengamalkan penghapusan ethnic kaum India adalah tidak benar dan mengelirukan "
அலகேசனிடமிருந்து வந்தக் கடிதம்
அரசாங்கத்தின் பிடியில் இருக்கும் RTM நிறுவனம் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது, நாட்டில் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி சுதந்திரம் அற்றுப்போய் உள்ளதைக் காட்டுகிறது.
தன் சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு விற்றுவிட்ட இவர்களை "விபச்சாரிகள்" எனக் கூறுவதில் தவறில்லை. காரணம் தகவல் சாதனங்களின் பிரதான சுதந்திரமே கருத்துச் சுதந்திரம்தான். அதனை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டவர்கள் தங்கள் மானத்தை பறிகொடுத்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.
இந்தக் கடிதத்தில் அலகேசன் தன்னுடைய கருத்து எந்த தகவல் ஊடகத்திலும் ஒளியேறக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தத் தன்மானத் தமிழனுக்கு நமது சிறந்தாழ்ந்த பணிவான வணக்கங்கள். இந்தச் செய்தியை உடனடியாக இந்து உரிமைப் பணிபடையினருக்கு தெரிவித்தமைக்கு அவருக்கு ஓலைச்சுவடியின் சார்பாக நன்றிகள்.
முக்கியக் குறிப்பு : இதற்கிடையில் இந்து உரிமை பணிப்படையினருக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்த சில மின்னல் FM அறிவிப்பாளர்கள், அதிலும் முக்கியமாக பிரபல அறிவிப்பாளர்களான K.மீனா குமாரி, K.சில்லாலி போன்றோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 5 மின்னல் FM வானொலி ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மின்னல் FM வானொலியின் தலைவர் திரு. இராஜசேகரன் இதுத் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment