குற்றமற்றவர்களின் மீது கொலைக்குற்றமா?
>> Saturday, December 8, 2007
இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்டவர்களில் 31 இந்திய சகோதரர்கள் வியாழக்கிழமையன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெஞ்சம் குமுறுகிறது இவர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தால்...
உண்மையில் கொலை முயற்சிக்காக கலகத் தடுப்புக்காரர்கள்தான் சிறையில் இருக்க வேண்டும். பொது மக்கள் மீது வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளை மிக அருகாமையில் வீசி பலருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள் இந்தக் கலகத் தடுப்புக்காரர்கள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்குக் கூட சில விதிமுறைகள் உள்ளன.
விதிமுறைகளை மீறி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்த இவர்களுக்கு அரசாங்கம் என்ன தண்டனைக் கொடுத்தது??!!
போராட்டம் தொடரும்...
2 கருத்து ஓலை(கள்):
நண்பரே நமது மொழி வலைதளம் என்ன ஆனது??? இப்பொழுதெல்லாம் கிடைக்கவில்லையே? http://www.mozhi.net/ இதுதானே முகவரி? விவரம் தெரிந்தால் தயவு செய்து விளக்கம் தரவும்...
எனக்கும் தெரியவில்லை சகோதரரே... சில நாட்களாகவே மொழி வலைத்தளத்தை திறக்க முடிவதில்லை.. ஆனால் இதுபோன்று ஏற்கனவே ஒரு தடவை நிகழ்ந்திருக்கின்றது.. இன்னும் சில காலம் பொறுத்திருந்து பார்ப்போம்..
Post a Comment