சிறப்பு வழிபாடுகள் இனிதே நடந்தேறின.
>> Sunday, December 2, 2007
இன்று காலை (டிசம்பர் 25) காலை 9:00 மணியளவில் பேரணியில் தாக்கப்பட்ட மலேசியத் தமிழர்கள் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு மலேசியத் தமிழர்களின் தலைமைச் செயலகமான பத்துமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.
2000த்திற்கும் மேற்பட்ட கோலாம்பூர் தமிழ் மக்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். இந்து உரிமை பணிப்படையின் சட்ட ஆலோசகர் பி. உதயமூர்த்தி, வழக்கறிஞர் ம.மனோகரன், மக்கள் நீதி கட்சி பொறுப்பாளர் மாணிக்கவாசகம், உட்பட சமூக அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.வழிபாட்டுக்குப் பிறகு வழக்கறிஞர் உதயக்குமார் தொடர் நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
இனி தமிழ் மக்கள் தொடர வேண்டிய செயல்பாடுகள் பற்றி ம. மனோகரன் பேசினார்.
கூட்டம் பிற்பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது.
பத்துமலை வளாகத்தில் திரண்ட மக்கள் படக்காட்சி
மூலம் : மொழி நெட் (நன்றி)
இதற்கிடையில் கலகத்தடுப்புக்காரர்கள் கண்ணிர்ப் புகை குண்டுகளை பொதுமக்களின் மீது மிக அருகாமையில் இருந்து வீசியிருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனோடு இந்து உரிமை பணிப்படை தன்னுடைய 18 கோரிக்கைகள் தொடர்பாக அம்னோ தலைவர் அப்துல்லா அகமது படாவியிடம் தனிச் சந்திப்பு நடத்தக் கோரி அவரிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைவர் எனும் முறையில் இந்த அழைப்பை அவர் ஏற்பாரா?
மலேசியாக்கினி படக்காட்சி
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment