பெனாசிர் பூட்டோ மறைந்தார்.. ஜனநாயகம் இருண்டது...

>> Friday, December 28, 2007


வியாழக்கிழமை அன்று பெனாசிர் பூட்டோ ரவால்பிண்டியில் பொதுத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவிட்டு தமது காரில் ஏறும்பொழுது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்திருக்கிறார். அவ்வேளை அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபரால் கழுத்தில் சுடப்பட்டார். சுட்டதும் அந்த மர்ம நபர் உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுடப்பட்ட பெனாசீரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைப் பலனளிக்காமல் மாலை மணி 6.16க்கு (பாகிஸ்தான் நேரப்படி) உயிர் நீத்தார். மருத்துவ அறிக்கையில் பெனாசிரின் உயிர் பிரிந்த காரணம் தலையில் சுடப்பட்டதனால்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.இவரின் உயிர்ப் பிரிவுக்கு உலக நாடுகள் அனுதாபமும் கண்டனமும் தெரிவித்துள்ளன. நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சி பூத்துக் குலுங்க வேண்டும் என அரும்பாடுபட்டவர்களில் பெனாசிர் பூட்டோவும் அடங்குவார். இவரை இரும்புப் பெண்மணி என அவருடைய ஆதரவாளர்கள் அழைப்பர். இவருடைய தந்தை முன்னால் பாகிஸ்தான் பிரதமர் சூல்பிகார் அலி பூட்டோ ஆவார். இவர் இங்கிலாந்து 'OXFORD' பல்கலைக்கழகத்திலும் அமெரிக்கா 'HARVARD' பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து பின்பு நாடுகடத்தப்பட்டு அண்மையில்தான் பாகிஸ்தான் திரும்பினார். இவருடைய உயிரிழப்பு பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் இழப்பாகும். இனியும் ஜனநாயகம் என்ற பேச்சுக்கு அங்கு இடம் இருக்கிறதா? முடிவு மக்கள் கையில்...

இன்னும் சில நாட்களில் உள்நாட்டுக் கலகம் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பல இயக்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. அதிபர் முஷாராப் மீண்டும் அதிபர் பதவியில் அமர்ந்து இராணுவ ஆட்சி செலுத்தி வருகிறார். இத்தகு ஆட்சி பாகிஸ்தான் மக்களுக்கு பல வகையில் கெடுதிகளைக் கொண்டு வருவதோடு, பல பொதுமக்களின் உயிர்கள் இன்னும் எத்தனை பலியாகவுள்ளதோ எனும் அச்சம் நிலவி வருகின்றது. இப்படுகொலைக்கு அல்-கயிடா பொறுப்பு என சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன, மறுபுறம் அதிபர் முஷாராபின் கையாட்கள் இப்படுகொலையைப் புரிந்திருக்கக் கூடும் என சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன... ஐக்கிய நாட்டுச் சபை இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமானத் தீர்வை எடுக்க வேண்டியது அதன் கடமையாகும்.

அல்-ஜஸீரா செய்திகள்

Benazir Bhutto assassinationAAJ TV coverage in the BBC’s translation on the assassination of Benazir Bhutto. (This was the moment before she was shot in the car.)
Location : Rawalpindi, Pakistan
Target(s) : Benazir Bhutto
Date : December 27, 2007
Attack type : Suicide attack, Gun shooting, Bombing
Deaths : 21 - 22 (No official number released yet)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP