Friendster, My Space போன்ற வலையகம்..
>> Saturday, December 1, 2007
வணக்கம் சகோதரர்களே, கூடிய விரைவில் பிரண்ட்ஸ்தர் போன்று ஒரு வலையகம் உருவாக உள்ளது. இந்து உரிமை பணிப்படையின் முயற்சிகளுக்கு கைக்கொடுக்கும் வகையில் இவ்வலையகம் செயல்படும். தற்போது அவ்வலையகம் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் இந்தியர்களுக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இங்கு பதிவு செய்ய ஆவணம் கொண்டுள்ளோம். இளைஞர்கள் கண்டிப்பாக இந்த வலையகத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். மனித உரிமைகள் மற்றும் சட்டம் தொடர்பாக நாம் அதிகம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இக்காலக்கட்டத்தில் நமக்கு நேர்ந்துள்ளது. எனவே தைரியமாக நம்முடைய பிரச்சனைகளை இங்கு பகிர்ந்துக் கொண்டு சமுதாயத்திற்கு விழிப்புணர்வைக் கொண்டு வருவோம்..
http://hindrafsupporters.ning.com/
போராட்டம் தொடரும்....
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment