தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......

>> Tuesday, December 4, 2007


தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.



முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.

2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.



2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.

தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.

நன்றி : தமிழியல் ஆய்வுக் களம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' August 3, 2008 at 1:22 AM  

வணக்கம்.

ஓலைச் சுவடிகள் தளம், தொடக்கத்திலேயே தமிழ் முரசு கொட்டுகிறது.

தமிழ் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் பதிவுசெய்யும் போது, பழைய வரலாற்றாளர்கள் தொட்டுச் செல்லாதவற்றையும் தட்டிக் கழித்தவற்றையும் ஆழத்தெரிந்து அவற்றினால் புதைந்துபோன வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரச் செய்யும் தளமாக "ஓலைசுவடிகள்" அமைந்திருக்க வேண்டும் என்பது எனது அவா.

இத்தள நிருவாகிகளுக்கு எனது வாழ்த்துகள்.

சுவடிகளையும் பழந்தமிழ்க் கலை நூல்களையும் ஆராய்ந்தவன் எனும் முறையில் இக்கருத்தினை ஈங்கு பதிவு செய்கின்றேன்.

காண்க : www.thamizhkkuil.net

இவண்

முனைவர் இர.வாசுதேவன்

Sathis Kumar August 3, 2008 at 9:31 PM  

வணக்கம், உங்களின் கருத்துகள் ஓலைச்சுவடிக்குக் கிடைத்த மற்றுமொரு ஊட்டச் சத்து மருந்துகளாக நான் கருதுகிறேன். தங்களுடைய தமிழ்ப் பணியைக் கண்டு வியக்கிறேன். வருங்காலங்களில் ஓலைச்சுவடியில் தமிழின் சிறப்பினை வெளிக்கொணரும் பதிவுகளை இடுவேன்.

நன்றி.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP