பதவி விலக மாட்டேன்! அடம் பிடிக்கிறார் சாமிவேலு...
>> Friday, December 21, 2007
இப்போதைய சூழ்நிலையில் பதவி விலக மாட்டேன், இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் நிறைய உள்ளன. எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னரே பதவி விலகுவேன் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ சிறீ ச.சாமிவேலு அறிவித்தார். புதன்கிழமை ஆர்.டி.எம் 1-இல் அமைச்சருடன் 60 நிமிடங்கள்' எனும் நேர்க்காணல் நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார். எல்லா விவகாரங்களையும் நிறைவேற்றிய பின்னரே ( சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிய பிறகே ) பதவியில் இருந்து விலகுவேன். அதன்பின்னரே தகுதியான ஒருவர் என் பதவிக்கு வருவார் என்றார் அவர். நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட அந்தப் பேட்டியில் ம்.இ.கா தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி விட்டீர்களா? என்று தொலைக்காட்சி நிருபர் சபாருடின் அகமட் சப்ரி கேட்ட போது, ம.இ.கா தலைவராக 30 ஆண்டுகளாக (யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல்) இருந்து வருகிறேன். பதவி விலகும் முன் எனது 30 ஆண்டு கால அர்ப்பணிப்பை ( ஊழலை, அராஜகத்தை) கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நேரம் வரும்போதே (மண்டையைப் போடும் போது) பதவி விலகுவேன் என்றார் அவர். மலேசிய இந்தியர்கள் தேசிய முன்னனி சின்னத்திற்குத்தான் வாக்களிக்கின்றனர். ம.இ.கா சின்னத்திற்கு அல்ல என்று சாமிவேலு கூறினார்.(இனியும் அதுபோன்ற தவறு நடக்காது, கவலை வேண்டாம்.) பிரச்சனைகள் தலையெடுக்கும்போது ஓரிரு மாதங்கள் சஞ்சலத்தில் இருப்பர். பின்னர் மறந்துவிடுவர் என்று அவர் சொன்னார். (இதிலிருந்து தெரிகிறது, இவர் எப்படி இந்தப் பதவியில் பல ஊழல்களையும் அராஜகங்களையும் செய்தப் பின்னரும் இன்னும் பதவியில் நீடித்திருக்கிரார் என்று. இந்திய மக்களின் மனோபாவத்தை படித்து வைத்திருக்கிறார். ஆனால் வரும் காலங்களில், இந்தியர்களின் மனோபாவமே வேறு மாதிரி இருக்கப் போகிறது. இது நிச்சயம்...!! இனியும் ஏமாற்றுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்கள் மலேசிய இந்திய மக்கள்...
போராட்டம் தொடரும்...
3 கருத்து ஓலை(கள்):
//இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் நிறைய உள்ளன. எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னரே பதவி விலகுவேன்///
30 வருசமா என்னத்த ****கிட்டு இருந்தாறாம்... இப்பதான் பிரச்சனைய தீர்க்கனுமாம்... அதவிடுங்க... மைக்க ஹோல்டிங்ஸ் பற்றி கேட்ட போது தனக்கும் அதற்கும் சம்மதம் இல்லைனு சொல்லிடாரு... இப்ப கோவில் பராமரிப்பு நிதியை கேர்கும் போது மா.இ.காவிடம் யார் அந்த பணத்தை கொடுத்தது... தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லைனு சொல்கிறார். இது பொருப்பான பதிலா?? இவர்தான் பிரச்சனைகளை தீர்க்க போகிறாரா?? இப்படி பேசும் மனுசன் என்ன @#$%%^க்கு அமைச்சராக இருக்கனும்...
அமைச்சராக இருந்துக் கொண்டே மண்டையைப் போட வேண்டும் எனும் நப்பாசை போலும்...
பதவியைவிட்டால் கம்பி எண்ணும் நிலை எற்படலாம் இல்லையா... அந்த பயம் போலும்...
Post a Comment