சுவடுகள் மூன்றாம் பாகம்
>> Wednesday, December 5, 2007
பிழைப்பு தேடி ஆங்கிலேயர்கள் பின்னால் 'உழைப்பாளிக் கூட்டமாக' மலாயாவுக்குச் சென்ற தமிழர் முதன் முதலில் எப்படி சென்றனர்?
இந்நிலையில் எந்த முறையில் சென்றனர்?
ஆங்கிலேயர்களால் கப்பல் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
உழைப்பாளித் தமிழர்கள் மலாயாவில் பட்ட அவதிகள் எத்தனை எத்தனேயோ?
வறுமையும், சமூக சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுக் கொடுமையும், தமிழர்களை கடல் கடந்து பிழைப்பு தேடும் கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.
இன்று முற்போக்கு சிந்தனையும் தொழில் நுட்பத்திறனும் வானளவு உயர்ந்து நிற்கும் தமிழகத்தில், அந்நாளில் நிலவிய கொடுமைகள் பற்றி, பிரிட்டிஷ் மலாயா சக்திமோகன், தனது 'கடல் கடந்த தமிழன்' என்ற நூலில் கண் கலங்க விவரித்துள்ளர். இந்நூல் தொடர் கட்டுரைகளாக 'சுவடுகள்' பகுதியில் விரைவில் இடம் பெறும்.
தமிழனின் பச்சைக் குருதி ரப்பர் செம்பனை மரங்களுக்கு எருவாகியிருக்கிறது;
சாலையில் இடப்பட்ட கப்பி கற்களுக்குக் கலவையாக அமைந்திருக்கிறது;
உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிந்தும், மலாயாவை வளப்படுத்த உழைப்பாளித் தமிழர்கள் வந்துகொண்டுதான் இருந்தனர். தொழில் முன்னேற்றத்துக்கும் வருவாய் பெருக்கத்துக்கும் நன்கு பயன்படுத்திக் கொண்டது வெள்ளை ஏகாதிபத்தியம். காடு கழனியாகிற்று. நாடு நகரமாயிற்று.
உழைத்து வாழ வந்தோம் - பிறர் உழைப்பில் சோம்பிக்கிடக்க அல்ல
பிழைப்பைத் தேடி வந்தோம் - பிறர் சோற்றில் மண்ணைப் போடுவதற்கு அல்ல
நாம் உழைக்கப் பிறந்த உழைப்பாளித் தமிழர்கள் வெட்கப்படாதீர்கள்- பெருமைப்படுங்கள்.
http://www.tamilwriters.net/suvadugal.html
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment