மர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ?
>> Thursday, December 6, 2007
அன்றாடம் வாழ்வில் நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு அவஸ்தைதான் இந்த மர்பி லா.
நீங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது உங்கள் வரிசை முன்னுக்கு நகராது போல் தோன்றும்.பக்கத்து வரிசை வேகமாய் நகரும்.
நெடுஞ்சாலையில் உங்கள் கார் போகும் லேன் எப்போதுமே அடுத்த லேனை விட மெதுவாகவே நகரும்.
குடை வைத்திருந்தால் மழை பெய்யாது.மழை பெய்யும் போது குடையிருக்காது.(நா உப்பு விக்கப்போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது பாட்டு நினைவுக்கு வருகிறது.)
அவசரமாய் பிரிண்ட் அவுட் எடுக்க வந்தால் அப்போதுதான் பேப்பர் ஜாம் ஆகும்.
வீட்டில் சாதம் இல்லாத போது ரொம்ப பசிக்கும்.சாப்பாடு ரெடி என்றால் பசிக்காது.
தண்ணீர் கைக்கு எட்ட இல்லையென்றால் ரொம்ப தாகம்
எடுக்கும்.
Restroom அருகில் எங்கும் இல்லாத போது தான் அது வரும்.
இப்படியாக பலப் பல.
கெட்ட குடியே கெடும்,கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துகொண்டு கொடுக்கும்.அது கூரையை சரிபண்ணவே சரியாய் போய்விடும்.இதெல்லாம் மர்பி விதியின் சாரம் கொண்டவையே.இப்படி "Anything that can go wrong, will, and at the worst possible moment" போன்ற விதிளெல்லாம் Edward A. Murphy-யின் பெயரில் "மர்பி லா" எனப்படுகிறன.
இனிமேல் இந்த அவஸ்தைகளின் போது மர்பிலாவை நினைத்துக்கொள்ளுங்கள்.
"மர்பி லா" தமிழில் பதிவிறக்கம்.
நன்றி : பிரியமுடன் கேபி
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment