100 நாட்களுக்கு இண்ட்ராஃப் நிகழ்வுகள் இல்லை!

>> Friday, April 10, 2009



இண்ட்ராஃப் ஊடக அறிக்கை 10/04/09

மலேசியாவின் ஆறாவது பிரதமராக பதவியேற்றிருக்கும் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக்கிற்கும், இவரின் ஆட்சியின்கீழ் மீதமுள்ள தவணைகாலத்திற்கு பணிபுரியவிருக்கும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். கடந்தகால ஆட்சியானது, மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்காக உண்மையாக குரலெழுப்பிய இண்ட்ராஃப் இயக்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வெறுக்கத்தக்க ஓர் ஆட்சியாக மக்கள் மனதில் திகழ்ந்தது.

இண்ட்ராஃப் கேட்டுக்கொள்வதெல்லாம், கடந்தகாலங்களைப்போல் அல்லாது, இப்புதிய ஆட்சியானது திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுவந்த மலேசிய இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாண, புதிய மாற்றத்தை ஏற்படுத்த எங்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக வேண்டும் என்பதே.

புதிய ஆட்சியின் மீது நாங்கள் கொண்ட எதிர்ப்பார்ப்பினை புலப்படுத்தும் வகையில், நஜீப் பதவியேற்று 100 நாட்கள்வரை 'இண்ட்ராஃப்' சாலை மறியல், மகசர் வழங்கும் நிகழ்வு எதனையும் ஏற்று நடத்தாது. இப்புதிய ஆட்சியின்வழி மலேசிய மக்களுக்கு நியாயமான பாராபட்சமற்ற ஓர் அரசாங்கம் அமையும் என இண்ட்ராஃப் எதிர்பார்க்கிறது.

வேதமூர்த்தி பொன்னுசாமி
இண்ட்ராஃப் தலைவர்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

Anonymous April 11, 2009 at 12:50 PM  

சில நேரங்களில் நமது கோரிக்கையை அமைதியான உண்மையான உணர்வுடன் வெளிப்படுத்துவது கூட சிலரக்கு கிண்டலாக இருக்கிறது.

உதாரணதிற்கு இங்கு குறிப்பிட்ட வலைப்பகத்தை பாருங்கள் :http://pilihan-anda.blogspot.com/2009/04/hindraf-letak-kpi-untuk-pm-najib.html

நாடாளமன்றத்தினால் தடை செய்யப்பட்ட மற்றும் தகாத வார்த்தைகளாலும் ஓர் இனத்தை வசைப்பாடிய இந்த வலைப்பதிவாளர்கள் மேல் ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எங்கே போனார்கள் நமது சமூக மற்றும் அரசியல் காவலர்கள். யாருக்காவது கூஜா தூக்கும் சந்தோசத்தில் இதை கவனியாமல் விட்டு விட்டார்களா?

கிருஷ்ணா April 11, 2009 at 11:40 PM  

//உதாரணதிற்கு இங்கு குறிப்பிட்ட வலைப்பகத்தை பாருங்கள் :http://pilihan-anda.blogspot.com/2009/04/hindraf-letak-kpi-untuk-pm-najib.html //

இதுபோன்ற வலைப்பதிவர்களை எல்லாம் உருவாக்குவது அரசாங்கமே. அதனால், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு சிறு துரும்பு கூட அவர்கள் மேல் படாது. அதிலும், இவர்கள்தான் UMNO-வின் இளைய தலைமுறையினர். இவர்களுக்கு சமயம் என்று ஒன்று உண்டா? காசுக்கும் பதவிக்கும் பெற்ற தாயைக்கூட சோரம் போக விடக்கூடியவர்கள் இவர்கள். இது போன்ற பதிவுகளையெல்லாம் சட்டை செய்ய வேண்டாம் நண்பர்களே.

தொடர்க ஹிண்ட்ராஃப் பணி..

Sathis Kumar April 12, 2009 at 12:09 AM  

அன்பர் கிருஷ்ணாவின் கருத்துகளை நான் வழிமொழிகிறேன்.

Anonymous April 12, 2009 at 7:26 PM  

இதை போலிசில் புகார் செய்ய முடியுமா..? நடவடிக்கை இருக்குமா...?
- கபிலன்,
ஈப்போ

Sathis Kumar April 12, 2009 at 11:37 PM  

//இதை போலிசில் புகார் செய்ய முடியுமா..? நடவடிக்கை இருக்குமா...?
- கபிலன்,
ஈப்போ//

காவல்த்துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால், நடவடிக்கையேதும் எடுக்கப்படமாட்டாது என்பது நாம் அறிந்த ஒன்றே..!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP