Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts

எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்

>> Thursday, April 7, 2011



எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே  எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிபதையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது.
இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிபதுக்கு சற்றும் 
குறைவில்லாதது..

எதியோபிய நாகரிக மன்னர்  பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில்  சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.

தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந் நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர்  உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள்  சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா.  தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500 ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண் டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால்  தமிழும் தமிழர் நாகரிகமும்   9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.

இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். அதில் முதலாமவர் O r i or aram 4530-4470BC - தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம்.  கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.

Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் >  காரி அக்கன்  என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun  வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது.

Eylouka 3836 - 3932 BC (QUEEN) -  தமிழில் அரசி எயில் அக்கா > எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல்.  பண்டைத் தமிழகத்தில்  பெண் அரசுப்  பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam 2713 - 2635 BC - தமிழில் காம் > காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல.இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.
Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு  பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர்Yelu Abaoji 907 -926 AD - தமிழில் எல்லு அப்பய்ய தி > எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி -- சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர > மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்கா வில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல்.  வாலமீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிபது மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர். காட்டாக, Ramesses I 1295-1294 BC -  தமிழில் இராமி சே > இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் எனறும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.
Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன > வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது.  உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்னs > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை,  வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.

Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது.ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.

Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன்  அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன்  அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி  முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில்  வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.

Lakndun Nowarari  . தமிழில் இள கந்தன்  நவ்வர்  அரி என்பது செப்பமான வடிவம்.  இள  - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் -  சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.

Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி  முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.
Aktis Sanis 1531 BC - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை - சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.

Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.

Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.

இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC .
Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய >  திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம்.  திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD.அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன.   சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC. சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.

Sanuka 1231 - 1226 BC  - தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC   என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC.  சீன நாகரிகத்தில் Shang  ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.

Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம் . சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது.

சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.

Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.

Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு.  விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.

Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின்  கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர்   Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.

Sera I (Tomai) 956 - 930 BC -  தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல்  காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன்.  சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில்.  இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று.
Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.

Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD  - தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன்  கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

Gasiyo Eskikatir  - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC  - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் -  ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன்  சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.

Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர்.
Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC - தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.

Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம்.  ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள்.  இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர்.
Kolas 295 - 285 BC - தமிழில் காள> காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.

Stiyo 269 - 255 BC -  தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.
Sanay 99 BC தமிழில் சாணை என செப்பமான வடிவம் பெற்றுள்ளது. ஐகார ஈறு பெற்றுள்ளது. சாணன் --  காண்க www.yatumayinan.com.

Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி  எனப்பட்டனர்.
Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம்.  பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன்  என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன்.
Azegan Malbagad  200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் -- கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.

கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion -   திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின.
தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன.  அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும்.
மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது  இடைப்பட்ட சிந்து நாகரிகமும்  தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர்  சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.

மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம்.
 இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.
சேசாத்திரி. sseshadri69@gmail.com

இதனையும் காண்க : 

சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்

Read more...

சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்

>> Wednesday, April 6, 2011


சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. நான் 3 1/2 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் அவ் எழுத்துகளை படிக்கக் கற்றுக் கொண்டேன். ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே.

மெஹர்கார் சிந்து நாகரிகம் 9,000 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் புழங்கி உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர் பெயர்களை ஒப்பாய்வு செய்ய Google ல் அந்நாகரிக மன்னர் பெயர் பட்டியலை தேடி சொடுக்கினேன். நான் எதிர் பார்த்தவாரே wikipedia free encyclopedia வில் மன்னர் பெயர் பட்டியல் கிட்டியது.

வியக்கும்படியாக இந்நாகரிக மன்னர் பெயர்கள் சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்திருக்கக் கண்டேன். எனவே ஊக்கமுற்று கிழக்கு நாகரிகங்களான சீனம், கொரியா, சப்பான் நாகரிக மன்னர் பெயர்களையும் ஒப்பிட்டேன். அவற்றுள் பல தமிழ் வடிவில் இருக்கக் கண்டேன்.

இப் பெயர் ஒப்புமை ஆய்வு தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும், இப் பண்டை நாகரிகங்களை தோற்றுவித்த தமிழர் ஒரு பொதுவான மூல இடத்தை விட்டகன்று இவ் இடங்களில் குடியேறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது, அதோடு தமிழ் மொழி 10,000 ஆண்டுகள் மேலான பழமை மிக்கது என்பதும் தெளிவான்து. இந்த ஒப்புமை ஆய்வு பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை படித்த முறை சரி என்று மெய்ப்பிக்கப் போதுமானது.

கிறித்தவ, இசுலாமிய மதப் பரவலால் மேற்கின் பண்டை நாகரிக தமிழ் பெயர்கள் அவ் இடங்களில் மறைந்தாலும் கிழக்கு நாகரிக இடங்களில் இன்றும் வழங்குவதை உணர முடிகிறது. சப்பான் நாகரிகம் இதற்கு ஒரு சிறந்த சான்று.
நம் ஒப்புமை ஆய்வுக்கு தெளிவாக உள்ள சில சப்பானிய பிரதமர் பெயர்களையும் மன்னர் பெயர்களையும் எடுத்துக் கொள்வோம்.

வங்காளி, இந்தோனேசிய மொழிகள் போல சப்பானிய மொழியிலும் 'அ' கரம் 'ஒ' கரமாகியுள்ளது. அதோடு 'க'கரம் 'ஹ' கரமாகவும், 'வ'கரம் 'ப' கரமாகவும், 'த' கரம் ச, ஜ. ஷ வாக திரிந்து உள்ளது. இத் திரிபுகளின் மூல ஒலி கொண்டு படித்தால் தமிழ்ப் பெயர்கள் விளங்கத் தோன்றும்.

பதவி ஏற்பு வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் kuroda kiyotaka1888-89 எனபவர். தமிழில் குறு ஆத கய்ய தக்க > குறு ஆதன் கய்யன் தக்கன் என செம்மையாக படிக்கலாம். குறு - இளமைப் பொருள், ஆதன் - சேரர் பெயர், கய்யன் - பண்டை மேற்கு நாகரிகங்களில் இடம் பெறுகிறது. தக்கன் - 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது. காண்க எனது www.yatumayinan.com ல்.

பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900 எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் - சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி - அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் -- பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது.

பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan I 840-832 BC இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என சப்பானில் வழங்குகிறது.

பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo 1921-22 தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி -- கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி.

பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் - சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும். அண்மையில் வடலூர் அருகே மருங்கூர் என்ற இடத்தில் 'அதியகன்' என பெயர் பொறித்த பிராமி எழுத்து பானைஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும்.

பதவி ஏற்பு வரிசையில் 25 & 28 இடங்களை பிடிப்பவர் பிரதமர் Wakatsuki Reijiro 1926-27-31 இதில் வக்க என்ற தமிழ்ப் பெயர் உள்ளது. தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் வக்கன் என்ற பெயர் பயின்றுள்ளது. வ கரம் ப கரமாகி இப்பெயர் எகிபதின் 24 ஆம் ஆள்குடியில் ஒரு மன்னனுககு Bakenranef 720-715 BC வக்கன் அரணி என வழங்குகிறது.

பதவி ஏற்பு வரிசையில் 32 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Hiroata Koki 1936-37 தமிழில் கீர அத்த காக்கை > கீரன் அத்தன் காக்கை என செம்மையாக படிக்கலாம். கீரன் ஹகர திரிபு பெற்று எதியோபியாவிலும்,எகிபதிலும் வழங்குகிறது. நக்கீரன், கீரனூர் ஆகியன இதன் தமிழ் மரபிற்கு சானறு. அத்தன் தேவாரத்தில் பயில்கிறது. காக்கை - ஈழமன்னன் பண்டார வன்னியனை ஆங்கிலர்க்கு காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன். எகிபதின் 5ஆம் ஆள்குடி மன்னன் பெயர் Neferirkare Kakai 2477-2467BC.

பதவி ஏற்பு வரிசையில் 34 & 38 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Konoe Fumimaro 1937-39 & 1940-41 தமிழில் கானை உமி மாற > கானை உமி மாறன் என செம்மையாக படிக்கலாம். கானை - சி.வெ. முத்திரையில் அரிதாக வழங்கும் பெயர் இது கான், கானன் என சிந்து முத்திரையில் பரவலாக வழங்குகிறது. உமி - உமன் என தமிழக பானைஓட்டு சிந்து எழுத்துகளில் பயில்கிறது; உமி>வுமி>புமி>Fumi என திரியும். உமன் மேற்கு நாகரிகங்களில் உமர்(Omar) எனவழங்குகிறது இன்றும். மாறன் பாண்டியர்குரிய பெயர்.

பதவி ஏற்பில் 41 ஆம்இடத்தை பிடிப்பவர் பிரதமர் koiso Kuniaki 1944-45 தமிழில் காய் த குன்னி அக்கி > காயன் த குன்னி அக்கி என செம்மையாக படிக்கலாம். காயன் - ஆதாம் ஏவாள் மகன் Cain, மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காயன்குளம் கேரளத்தின் ஓர் ஊர். குன்னி - அன் ஈறு பெறாமல் குன் எனவும், அன் ஈறு பெற்று குன்னன் எனவும் சி.வெ. முத்திரைகளில் பயில்கிறது. இன்றும் குன்னிராமன் என்ற பெயருள்ளோர் உண்டு. அக்கி - அக்கன், அக்கல், அக், அக்கம் என பலநாகரிகங்களில் வழங்குகிறது. பல்லங்கி என்ற இடத்தில் அமைந்த மாயன் நாகரிக மன்னர் பெயர் Ahkal Mo Nahb II 565 -570 AD அக்கல் மா நக்கவன்.

பதவி ஏற்பில் 46 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Katayama Tetsu 1947-48 தமிழில் கத்த யாம திட்டு > கத்தன் யாமன் திட்டு என செம்மையாக படிக்கலாம். திட்டன் எனபதே திட்டு என வழங்குகிறது. திட்டன்குடி > திட்டக்குடி.

பதவி ஏற்பில் 61 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Satu Eisaku 1964-72 தமிழில் சாத்து இசக்கு > சாத்தன் இயசக்கன் என செம்மையாக படிக்கலாம். சாத்தன் - சி.வெ. முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயிலும் பெயர். சாத்தய்யா, சாத்தப்பன் இற்றை வழக்கு. இசக்கு இசக்கிமுத்து என இக்கால் நெல்லையில் வழங்குகிறது. இந்த இசக்கு மேற்கு நாகரிகங்களிலும் வழங்குகிறது.

பதவி ஏற்பு வரிசையில் 64 ஆம் இடத்தை பிடிப்பவர் Tanaka kakuei 1972-74 தமிழில் தன் அக்க கா குய்யி > தன்னன் அக்கன் கா குய்யி என செம்மையாக படிக்கலாம். தன்னன் - அன் ஈறு பெறாமல் தன் என்றும், அன் ஈறு பெற்று தன்னன் எனறும் சி.வெ. முத்திரைகளில் வழங்குகிறது. தன்னவன் இதன் மற்றொரு வடிவம். கா - சி.வெ. ல் ஒற்றை எழுத்தாகவே பயில்கிறது. ஆங்கில U எழுத்தின் இரு மேல் ஓரங்களிலும் இரு கோடுகள் பெற்று ஏராளமாக காணப்படுகிறது. இக் கா 'திரு' என்பதைப் போல் மதிப்புரவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல்லங்கி மாயன், எகிபது, போன்ற நாகரிகங்களிலும் ஒற்றை எழுத்தாகவே வழங்குகிறது. எகிபதில் ஒரு பொதுமகன் பெயர் கா அப்பர் என்பது. குய்யி - சி..வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் குய் எனறும் அன் ஈறு பெற்று குய்யன் என்றும் வழங்குகிறது. அசுடெக் மாயன் நாகரிக மன்னர்கள் பெயர் Cui tal huac 1520AD குய் தள் குய் அக் & Cua uhtec mac 1520-1525 AD குய்ய உக் திக் மாக் என்பது.

பதவி வரிசையில் 67ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda Takeo 1976-78 பக்குட தக் ஈய > பக் உடை தக்கன் ஈயன் பதவி வரிசையில் 91 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda yasuo 2007-2008 . தமிழில் பக் எனறால் பை என பொருள் பக் உடை என்றால் பை போன்ற உடை எனப் பொருள். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிவக மதத் தலைவர் பெயர் பக்குடை நன் கணியார் என்பது.

இப்போது பதவியில் உள்ள பிரதமர் பெயர் Kan Naoto 2010 முதல் தமிழில் கான் நவ் அத்த > கானன் நவ்வன் அத்தன் என செம்மையாக படிக்கலாம். கானன் - அன் ஈறு பெறாமல் கான் என்றும், அன் ஈறு பெற்று கானன் என்றும் சி.வெ. பயில்கிறது. கானவன் இதன் மற்றொரு வழக்கு. கானவன் தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் இடம்பெறுகிறது. அத்தன் -அத்தர், அத்தி என பிற நாகரிகங்களில் வழங்கும்.

சென்னை சப்பானிய துணைத் தூதரக தலைவர் பெயர் Takayuki Kitagawa தமிழில் தக்கை உக்கி கித்த கவ்வ > தக்கை உக்கி கித்தன் கவ்வன் இதன் செம்மை வடிவு. தக்கை- தக்கன், தக்கி, தக்கு எனவும் வழங்கலாம். உக்கி - தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் உக்கன் பயின்று வந்துள்ளது. கித்தன் - ஈரானின் தென்மேற்கே அமைந்த ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Hita I 2270 BC க > ஹ திரிபு. மற்றொரு மன்னன் பெயர் Attar Kittah 1370 BC கித்தன் ஈலத்தில் பயின்றாலும் சி.வெ. இப்பெயர் இல்லை. கவ்வன் - சி.வெ.முத்திரையில் மட்டும் காணப்படுகிறது.

இனி சப்பான், கொரியா, சீனம் ஆகிய நாகரிகங்களில் மன்னர்களுக்கு இறந்தபின்பு பெயர் (PosthumusNames) வைப்பது ஒரு வழக்கம். அவற்றுள் அடங்கும் சப்பானிய வேந்தர் பெயர்களை ஒப்பாய்வோம்.

Annie 549-476 BC அன்னி சங்க இலக்கியங்களில் பயிலும் ஒரு மன்னன் பெயர்.
Koan 392-291 BC காயன் ஏற்கென்வே ஆயப்பட்டது.
Korei 290-215 BC காரி
Anko 453-456 AD அங்க > அங்கன்,அங்கு, அங்கி என எதியோபியா, சி. வெ. நாகரிகங்களில் வழங்குகிறது.
Ankan 531-535AD அங்கன்- அன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அங்கு சாமி, அங்கப்பன், அங்கய்யன் வழங்குகின்றன. சி.வெ. ல் அங்கு, அங்கன் பயில்கிறது. எதியோபிய மன்னன் ஒருவனுக்கு Angabo I 4142 BC என பெயர்.
Kobun 692 AD காப்பன் சி.வெ. ல் வழங்கும் பெயர். பெரு இன்கா நாகரிக 12-16 நூற்றாண்டு மன்னர் பலர் Capac காப்அக் > காப்பன் அக்கன் என பட்டப் கொண்டனர்.
Koken 749-758 AD காக்கன் இவருக்கு இயற்பெயர் Abe அவ்வி என்பது. புலிமான் கொம்பு பிராமி கல்வெட்டில் பேடு திய்யன் அவ்வன் என்ற பெயர் குறிக்கப்பட்டு உள்ளது. அவ்வன் சி.வெ.ல் இயல்பாக பயில்கின்றது. அவ்வன் அவ்வி என்றும் ஆகும்.எதியோபிய மன்னனுக்கு Awseyo sera II 841 BC அவ்வன் சேயன் சேரன் என பெயர்.
Uda 887-897 AD சி.வெ.ல் அன் ஈறு பெறாமல் உத் எனறும், அன் ஈறு பெற்று உத்தன் என்றும் வழங்குகிறது.

நாகரிகங்களிடையேயான பெயர் ஒப்புமை ஆய்வில் இது முதல் முயற்சி. பண்டு பெயர்கள் ஆண் பால், பெண் பால் பாகுபாடின்றி வழங்கின. அதில் தெளிவு வேண்டி அன் ஈறை ஆண் பாலுக்கு ஒதுக்கினர். இது சற்றொப்ப 5,500 ஆண்டுகளுக்கு முன் தமிழில் ஏற்படுத்தப்பட்டது ஆனாலும் பல காலம்அறிஞர்கள் அளவில் மட்டும் இருந்தது. ஒரு மூல இடத்தில் இருந்து பரவிய தமிழர்கள் தமிழில் அன் ஈறு ஏற்படும் முன்பே இந் நாகரி க இ டங்களுக்கு பெயர்ந்து விட்டதால் அப்பெயர்களில் அன் ஈறு இடம் பெறாமல் போய்விட்டது.

எதியோபிய நாகரிகம் காலத்தால் 9,500 ஆண்டுகள் பழமை உடையது எனப்படுவதால். தாய் நாகரிகமான தமிழர் நாகரிகம் 10,000 ஆணடுகளுக்கு மேல் பழமை உடையது, தமிழும் அவ்வாறே 10,000 ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ள இப்பெயர் ஆய்வு இடம் தருகிறது. இது ஒரு இடைக்கால(Provisional) முடிவு தான்.

பேரா. இரா. மதிவாணனின் சிந்து எழுத்து படிப்பு முறையை ஏற்றால் எவரும் என் போல் சிந்து எழுத்தை படிக்கலாம். அது மிகவும் சரியானது. அவருடைய சிந்து எழுத்து வாசிப்பு பிற நாகரிகங்களின் வரலாற்றை மறுவாசிப்பு செய்ய உதவும். தமிழர் நாகரிக தொன்மை குறித்த உண்மை உலகோர்க்கு தெருய வரும்.

இன்னும் பலர் இவ் ஆய்வில் ஈடுபட வேண்டுகிறேன்.


ஆக்கம் : சேசாத்திரி sseshadri69@gmail.com

Read more...

கல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..

>> Sunday, June 7, 2009





மேற்காணும் செய்தியைப் படித்தவுடன், உடனடி நடவடிக்கையாக இன்றே கல்வி அமைச்சுக்கு மின்னஞ்சல்வழி உங்களுடைய கோரிக்கையை அனுப்பவும்.

எசு.பி.எம் தேர்வில் அதிகபட்சம் 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தமிழிலக்கிய பாடம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்! தமிழை வாழ வையுங்கள்!

Read more...

மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

>> Saturday, November 22, 2008

சமயம் என்றாலே, தான் கண்டு வாழ்ந்த இயற்கையின்பால் மனிதனுக்கு எழுந்த உணர்வுகளின் அக,புற வெளிப்பாடு என்று கூறலாம். இந்த உணர்வுகள் பண்பட்ட நெறியாக வெளிக்கொணரப்பட்டது நாகரீகங்கள் எழுச்சி பெற்ற காலத்தில்தான். உலக சரித்திரத்தில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டே மனித நாகரீகங்கள் தோற்றம் கண்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமேரியா, எகிப்து, சிந்து சமவெளி, மாயா, சீனா போன்ற ஆதிகால நாகரீகங்களில் வாழ்ந்த மக்கள், ஏதோ ஒருவகையில் இந்த இயற்கையோடு தங்களுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்த முனைந்த தடையங்கள் பல பரந்து காணக் கிடக்கின்றன. ஆனால் இந்நாகரீகங்களோடு தமிழர்களின் நாகரீகத்தை ஒரு ஒப்பீடு செய்து பார்த்தால், ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் சமய நம்பிக்கையானது புற வழிபாடுகளைவிட அக வழிப்பாட்டு தத்துவத்திற்கே அதிகம் மதிப்பு கொடுத்து வந்துள்ளது புலனாகிறது.

பாரத கண்டத்தில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் சமய இலக்கியத்தின் வளர்ச்சியைப்போல் வேறெந்த நாகரீகமும் பெற்றிருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறலாம். சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள். தமிழர்களின் சம இலக்கியங்களில் காணக் கிடக்கும் பலவகையான வழிப்பாடுகளை, தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய பல சமயப் பெரியார்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.


அந்தச் சமயப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர், ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர் ஆவார். படித்தாலும், பக்கம் நின்று கேட்டாலும், கருங்கல் மனத்தையும் கனிந்துருகச் செய்யும் திருவாசகம் என்னும் தேனை உலகிற்கு வழங்கிய பெருமை அவரையேச் சாரும். தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் இணையற்ற பாடல்கள் பலவற்றைக் கொண்டது, திருவாசகமாகும். அத்திருவாசகத்திலுள்ள இரு தேன்துளிகளே 'திருவெம்பாவை' , 'திருப்பள்ளியெழுச்சி' ஆகியனவாகும்.

திருவெம்பாவை என்றால் என்ன?

இருள் விலகுமுன்னே இளம்பெண்கள் சிலர் எழுந்து, தம் தோழியரின் இல்லந்தோறும் செல்வர்; துயின்றுகொண்டிருக்கும் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்று நீர் நிலையில் நீராடுவர்; பின்பு, மணலால் 'பாவை' போன்ற ஓர் உருவம் அமைத்து, நாடு செழிக்க வேண்டும், நல்ல கணவர் தமக்கு வாய்க்க வேண்டும் என வேண்டி அதனை வணங்குவர். இதுவே திருவெம்பாவை எனப்படும்.



இதற்குத் தத்துவ அடிப்படையில் வேறு பொருளும் கூறுவர்.

அஃதாவது, பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவன் அருள்நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாய்க் கூறுவர்.

திருவெம்பாவை என்னும் பகுதியில் அமைந்துள்ள பாடல்கள், ஒருவருடன் ஒருவர் உரையாடும் நாடகக் காட்சிகள் போல் அமைந்துள்ளன. ஓரளவு தமிழ் கற்றவரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அழகிய சந்த நடையில் அப்பாக்கள் ஆக்கப்பட்டுள்ளன.

திருவாசகத் தேனடையில் உள்ள மற்றொரு துளி, 'திருப்பள்ளியெழுச்சி' ஆகும்.

'திருப்பள்ளியெழுச்சி' என்பதற்குப் பொருள் யாது?

இறைவனைத் துயில் எழுப்புதல் என்பதாகும்.

அப்படியென்றால், இறைவன் உறங்கிக் கொண்டிருக்கின்றானா?

அன்று.

இந்த ஊன் உடம்பாகிய ஆலயத்தில், உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான். ஆனால், ஆன்மா அந்த இறைவனைப் பற்றாது, ஐம்புலன் வழிப்பட்டு உலகாசையில் அழுந்தியுள்ளது. அவ்வாறு இறைவனை மறந்த நிலையே - மறைத்துள்ள நிலையே - இறைவன் துயில்வதாய்க் குறிப்பிடப்படுகிறது. மறைத்துள்ள திரையை விலக்கி, ஆன்மாவை இறைவனோடு ஒன்றச் செய்வதற்காக - இறைவனை நெஞ்சகத்தில் நிலை நிறுத்துவதற்காக - பாடப்படும் பாடல்களே திருப்பள்ளியெழுச்சியாகும்.

இன்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அப்படியென்றால் என்னவென்று கேட்கிறார்கள் இளையோர்கள்! காலத்தால் மறக்கடிக்கப்பட்டு வரும் விரத வழிபாடுகளில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் அடங்கும். மார்கழி மாதத்தில் இவ்விரு வழிபாடுகளும் பலங்காலந்தொட்டே தமிழ்ப் பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்று தமிழகத்தில் ஆங்காங்கே ஆலயங்களில் மார்கழி மாத விரதம் இருந்து இவ்விரு பாடல்களும் பாடப்பட்டு வந்தாலும், எண்ணிக்கையளவில் குறைவாகவே மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தாய்லாந்தில் 'த்ரியம்பா' என்றப் பெயரில் சிவனுக்கு விழா எடுக்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாம் இறைவனை பொன்னூஞ்சலில் வைத்து பாடுவது போலவே, அங்குள்ளவர்களும் சிவன் சிலையை பொன்னூஞ்சலில் வைத்து பாசுரங்கள் பாடுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மலேசியத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இளைஞிகள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியை ஆலயங்களில் பாடுவது என்பது அரிதாகவே இருக்கிறது. ஓரிரு தேவாரக் குழுக்கள் மட்டும் ஆலயங்களில் இப்பாடல்களைப் பாட கேட்டிருக்கிறேன்.

விரதமேதும் மேற்கொள்ளாவிடினும் குறைந்த பட்சம் இவ்விருப் பாடல்களையும் பொருளுணர்ந்து அனைவரும் பாடி அதன் இன்பத்தை பெற வேண்டும் எனும் நோக்கில் 'திருவெம்பாவையையும்' திருப்பள்ளியெழுச்சியையும்' தொடர் பதிவாக இனிவரும் பதிவுகளில் இடவுள்ளேன். இதற்காக சில நூல்களை மேற்கோள்களாகக் கொள்ளவுள்ளேன்.

இப்பாடல்களனைத்தும் பொருளுணர்ந்து வாசிக்கப்படின் / பாடப்படின் உள்ளத்துக்கு நல்லதோர் அரிய விருந்தாக அமைவது திண்ணம் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..

Read more...

கவிதைகள் வரவேற்கப்படுகின்றன..

>> Wednesday, September 3, 2008

வாசகர்களுக்கு வணக்கம்,

இண்ட்ராஃப் மக்கள் சக்தி கூடிய விரைவில், மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களைச் சித்தரிக்கும் கவிதை நூலொன்றை வெளியிடவுள்ளது. எனவே வாசகர்களிடமிருந்து கவிதைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. தரமான கவிதைகள், ஆழமான கருத்துகள் கொண்ட கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்டு நூலில் பிரசுரிக்கப்படும்.

வாசகர்களின் படைப்புகள் மரபுக் கவிதையாகவோ, உரைவீச்சாகவோ, 'ஹைக்கூ'வடிவிலோ இருக்கலாம். முடிந்த மட்டும் கவிதைகள் சுருக்கமாகவும் அல்லாமல் நீளமாகவும் அல்லாமல் ஒருபக்கத் தாளில் இடம்பெறும்படி அமைந்திடுதல் நல்லது. வாசகர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.

கவிதைகளை கொடுக்கப்பட்ட மின்மடல் முகவரிக்கு 20-ஆம் திகதி செப்டம்பர் மாதத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் : olaichuvadi@gmail.com

நம் உரிமைப் போராட்டங்களை நினைவுக் கூறவிருக்கும் இக்கவிதை நூலுக்கு உங்களுடைய பங்கு மிக முக்கியம். எனவே, இன்றே கவிதை எழுதத் தொடங்குங்கள்...

Read more...

தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.

Read more...

வாக்கு நமது போதிமரம்

>> Thursday, August 14, 2008



சகோதரர்களே ...

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்

நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...

நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...



நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...

நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?

விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?

நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!

சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...

வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!

(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

>> Wednesday, May 21, 2008


"குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்" என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.

இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

"குழந்தைகளின் செல்லப் பெயர்கள்"

Read more...

நெல்லும் க‌ல்லும் (ப‌குதி 2)

>> Sunday, May 4, 2008

தாய்த் த‌மிழைத் தூய்மை செய்வோம்

-க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி-

வ‌ட‌மொழி - த‌மிழ்

அத‌ம்செய்த‌து யானை - அழிவுசெய்த‌து யானை
அத‌ர்ம‌ம் செய்ய‌ற்க‌! - தீமை செய்ய‌ற்க‌!
அதிச‌ய‌மாய் இருக்கிற‌து - விய‌ப்பாய் இருக்கிற‌து
அதிப‌தியானான் - பெருந்த‌லைவ‌னானான்
அதிப‌ர் வ‌ந்தார் - த‌லைவ‌ர் வ‌ந்தார்
அதிர்ஷ்ட‌மாக‌க் கிடைத்த‌து - ந‌ல்வாய்ப்பாக‌க் கிடைத்த‌து
அதிர‌ச‌ம் வேண்டுமா? - ப‌ண்ணியார‌ம் வேண்டுமா?
அதிருப்தி த‌ந்த‌து - ம‌ன‌க்குறை த‌ந்த‌து
அதோக‌தி அடைந்தான் - கீழ்நிலை அடைந்தான்
அந்த‌ர‌ங்க‌மாக‌ப் பேசினான் - ச‌முக்க‌மாக‌ப் பேசினான்
அந்த‌மில்லாத‌து அறிவு - முடிவில்லாத‌து அறிவு
அந்த‌ஸ்தைப் பார்ப்ப‌தில்லை - த‌ர‌த்தை பார்ப்ப‌தில்லை
அந்தாதிப் பாடல்க‌ள் - க‌டைமுத‌ல் பாட‌ல்க‌ள்
அந்திம‌க் கால‌ம்வ‌ரையில் - இறுதிக் கால‌ம்வ‌ரை
அந்நிய‌னாக‌ எண்ணாதே - வேற்றாளாக‌ எண்ணாதே
அநாதையாய்த் திரிகிறான் - எதிலியாய்த் திரிகிறான்
அநாம‌தேய‌ அறிக்கை - பெயர‌ற்ற‌ அறிக்கை
அநியாய‌மாக‌ப் பேசாதே! - நேர்மையின்றிப் பேசாதே!
அநீதி இழைக்காதே! - தீங்கு இழைக்காதே!
அப்பாவி ம‌க்க‌ள் - குற்ற‌ம‌ற்ற‌ ம‌க்க‌ள்
அப்பாவி அவ‌ன் - வெள்ளைம‌ன‌த்தான் அவ‌ன்
அப்பியாச‌ம் செய்தான் - ப‌யிற்சி செய்தான்
அப்பிராய‌ம் உண்டு - எண்ண‌ம் உண்டு
அப்பிராய‌ம் கூறினான் - க‌ருத்துக் கூறினான்
அப்பிராணி இவ‌ன் - அறியாத‌வ‌ன் இவ‌ன்
அப‌க‌ரிக்காதே பொருளை - ப‌றிக்காதே, பொருளை
அப‌ச்சார‌மான‌ செய‌ல் - ம‌திப்ப‌ற்ற‌ செய‌ல‌து
அப‌த்த‌மாய்ப் பேசாதே - பொய்மொழி பேசாதே
அப‌ய‌ம் அளித்தான் - த‌ஞ்ச‌ம‌ளித்தான்
அப‌ராத‌ம் க‌ட்டினான் - த‌ண்ட‌ம் க‌ட்டினான்
அப‌ரிமித‌ விளைச்ச‌ல் - அள‌வில்லா விளைச்ச‌ல்
அப‌லைப் பெண்ண‌வ‌ள் - பேதைப் பெண்ண‌வ‌ள்
அபாய‌த்திற்குரிய‌ இட‌ம் - பேரிட‌ர்க்குரிய‌ இட‌ம்
அபாய‌ம் வ‌ர‌லாம் - கேடு வ‌ர‌லாம்
அபாய‌த்திற்கு வ‌ழியாகும் - ஏத‌த்திற்கு வ‌ழியாகும்
அபாய‌ம் வ‌ருமா? - இட‌ர் வ‌ருமா?
அபார‌ வெற்றி - பெரு (நிலை) வெற்றி
அபார‌மான‌ விளையாட்டு - மிக‌ச்சிற‌ப்பான‌ விளையாட்டு
அபிந‌ய‌த்தோடு ஆடினாள் - ந‌ளிந‌ய‌த்தோடு ஆடினாள்
அபிப்பிராய‌ம் என்ன‌? - க‌ருத்து என்ன‌?
அபிப்பிராய‌ப்ப‌ட்டான் - விருப்ப‌ப்ப‌ட்டான்
அபிப்பிராய‌ம் கேட்டாயா? - க‌ருத்துக் கேட்டாயா?
அபிமான‌முண்டு உன்னிட‌ம் - ம‌திப்புண்டு உன்னிட‌ம்
அபிமான‌ம் உண்டு - ந‌ன்ம‌திப்புண்டு
அபிமானியான‌வ‌ன் - ப‌ற்றாள‌னான‌வ‌ன்
அபிவிருத்தி க‌ண்ட‌து - வ‌ள‌ர்ச்சி க‌ண்ட‌து

ஞாயிறு ந‌ண்ப‌ன் (04.05.2008)

தொட‌ரும்...

Read more...

தாய்த் த‌மிழை தூய்மை செய்வோம்..

நெல்லும்‍ க‌ல்லும் - அறிமுக‌ம்

-க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி-

முன்னுரை:

ந‌ம் த‌மிழ் மொழியில் ச‌ம‌ற்கிருத‌ம், உருது, ஆங்கில‌ம், அர‌பி, ம‌ராத்தி, பிர‌ஞ்சு, இந்தி, பிராகிருத‌ம், பார‌சீக‌ம், போர்த்துகீசிய‌ம், த‌ச்சு ஆகிய‌ பிற‌மொழிச்சொற்க‌ளும் ந‌ம் திராவிட‌மொழிக் குடும்ப‌ச் சொற்க‌ளும் மிகுதியாக‌க் க‌ல‌ந்துள்ள‌ன‌.

ந‌ம்மில் சில‌ர் அறிந்தும் ப‌ல‌ர் அறியாம‌லும் இச்சொற்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்றோம். ப‌ல்லின‌ ம‌க்க‌ள் கூடி வாழும் சூழ‌லில் மொழியில் க‌ல‌ப்பு ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு. ஏற்ப‌டும் க‌ல‌ப்பைத் த‌விர்த்து மொழியைத் தூய்மைப‌டுத்த‌ வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை. அது ந‌ம்மால் முடியும். அந்த‌க் க‌ட‌மையில் ஈடுப‌ட‌ வேண்டிய‌து ந‌ம் ஒவ்வொருவ‌ருடைய‌ பொறுப்பாகும். அத‌ற்கு இந்த‌த் தொட‌ர் சிறிதாவ‌து துணைசெய்யும் என்று ந‌ம்ப‌லாம்.

பிற‌மொழிச் சொற்க‌ளைத் த‌னித்த‌னியாக‌ப் பிரித்தெடுத்துச் சிறுசிறு தொட‌ர்க‌ளாக‌த் தொகுத்து இப்ப‌குதியில் தொட‌ர்ந்து வெளியிடப்ப‌டும்.

இத்தொகுப்பிற்கு மொழியிய‌ற்றுமை அறிஞ‌ர் ப‌ல‌ரின் ஆய்விய‌ல் நூல்க‌ளும் த‌னிக் க‌ட்டுரைக‌ளும் தொகுப்புக் க‌ட்டுரைக‌ளும் துணைக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ன‌. அவ‌ற்றில் குறிப்பாக‌ மொழிய‌றிஞ‌ர் அருளியாரின் அய‌ற்சொல் அக‌ராதி, முனைவ‌ர் இரா.ம‌திவாண‌ரின் அய‌ற்சொல் கையேடு, தி.நீலம்பிகை அம்மையாரின் 'வ‌ட‌சொற்ற‌மிழ் அக‌ர‌வ‌ரிசை' ஆகிய‌வ‌ற்றைக் குறிப்பிட‌லாம்.

இத்தொகுப்பை உருவாக்க‌க் க‌ருவியாக‌ இருந்த‌, இருக்கின்ற‌ அனைத்துப் பெரும‌க்க‌ளுக்கும் ந‌ன்றி.

க‌ல‌ப்ப‌து என்ப‌து இய‌ல்பாகும் - அதைக்
க‌ளைந்திட‌ முய‌ல்வ‌தே க‌ட‌னாகும் - இது
மொழியைக் காத்திடும் வ‌ழியாகும் - இன‌
விழிப்பைக் காட்டிடும் நெறியாகும்.


ஞாயிறு ந‌ண்ப‌ன் (20.04.2008)

நெல்லும் க‌ல்லும் (தொட‌ர் 1)

க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி

உருதுமொழி க‌ல‌ப்புத்தொட‌ர் - த‌மிழ்த்தொட‌ர்

அக்க‌ப்போராக‌ இருக்கு - வீண்வ‌ம்பாக‌ இருக்கு
அக்குதொக்கு இல்லாத‌வ‌ன் - உரிமைப‌ற்று இல்லாத‌வ‌ன்
அக‌ர்ப‌த்தி வாங்கி வா - அகில் ம‌ண‌த்தி வாங்கி வா
அக‌ஸ்மாத்தா நட‌ந்த‌து - த‌ற்செய‌லாய் ந‌ட‌ந்த‌து
அச்சா ப‌குத‌ச்சா - ந‌ன்று மிக‌ந‌ன்று
அச‌ல் கொடுத்தால் போதும் - முத‌ல் கொடுத்தால் போதும்
அண்டாவில் நீர் ஊற்று - பெருங்க‌ல‌த்தில் நீர் ஊற்று
அண்டா கொண்டு வா - பெருங்க‌ல‌ம் கொண்டு வா
அணா கொடுத்தான் - காசு கொடுத்தான்
அத்து மீறாதே - வ‌ர‌ம்பு மீறாதே
அபின் ப‌ழ‌க்க‌ம் தீது - க‌சினிப் ப‌ழ‌க்க‌ம் தீது
அம்பாரியில் அம‌ர்க‌ - மேலிருக்கையில் அம‌ர்க‌
அமுல் ப‌டுத்தினார் - ந‌டைமுறைப் ப‌டுத்தினார்
அமீனா இவ‌ர் - ந‌ய‌ன‌க‌க் க‌ட்ட‌ளைய‌ர் இவ‌ர்
அலாக்கா தூக்கினான் - த‌னியாக‌த் தூக்கினான்
அலாக்கா எடுத்தான் - அப்ப‌டியே எடுத்தான்
ஆசாமி போகிறான் - ஆள் போகிறான்
ஆஜ‌ர் என்றான் - வ‌ந்தேன் என்றான்
ஆஜ‌ரானார் அவ‌ர் - நேர்முன்வ‌ந்தார் அவ‌ர்
அனும‌தி கிடைத்த‌து - ஒப்புத‌ல் கிடைத்த‌து
அபினி தீமைத‌ருவ‌து - க‌சினி தீமைத‌ருவ‌து
அமுல் ப‌டுத்தின‌ர் - ந‌டைமுறைப் ப‌டுத்தின‌ர்
அர்த்த‌ல் ந‌ட‌ந்த‌து - க‌டைய‌டைப்பு ந‌ட‌ந்த‌து
அலாதியான‌து - த‌னித்த‌ன்மையான‌து
ஆசாமி பிடிப்ப‌ட்டான் - ஆள் பிடிப்ப‌ட்டான்
ஆஜ‌ரானார் - வ‌ருகை த‌ந்தார்
ஆஜ‌ர் என்றார் - வ‌ந்தேன் என்றார்
ஆஜ‌ர் ப‌டுத்தினார் - முன்னிலைப் ப‌டுத்தினார்
இலாக்கா இல்லாத‌வ‌ர் - துறை இல்லாத‌வ‌ர்
இலாக்கா எங்கே? - திணைக்க‌ள‌ம் எங்கே?
இனாம் கொடுத்தார் - ந‌ன்கொடை கொடுத்தார்
இஸ்திரி பெட்டியை எடு - தேய்ப்ப‌த்தை எடு
உருட்டா ப‌ண்ணாதே - க‌ப‌டி ப‌ண்ணாதே
உஷார் ப‌டுத்தினான் - எச்ச‌ரிக்கைப் ப‌டுத்தினான்
உஷாராக்கினான் - விழிப்புற‌ச் செய்தான்
உதா வ‌ண்ண‌ம‌ல‌ர் - செந்நீல‌ வ‌ண்ண‌ம‌ல‌ர்
ஐசாபைசா என்றான் - இர‌ண்டிலொன்று என்றான்
க‌ச்ச‌டா ப‌ண்ணாதே - அழுக்குப் ப‌ண்ணாதே
க‌ச்சா பொருள் - மூல‌ப்பொருள்
க‌ச்சா எண்ணெய் - தூய்மைப்ப‌டுத்தா எண்ணெய்

தொட‌ரும்..

ஞாயிறு ந‌ண்ப‌ன் (27.04.2008)


Read more...

த‌னித்த‌மிழ் இய‌க்க‌ங்க‌ண்ட‌ த‌ந்தை ம‌றைம‌லைய‌டிக‌ள்..

ம‌றைம‌லைய‌டிக‌ளைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்புகள்..

ம‌றைம‌லைய‌டிக‌ள் (1875-1950)


" சோழ‌ நாட்டிலே நாக‌ப்ப‌ட்டின‌த்துக்கு அருகிலே காட‌ம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக் க‌ல்வியொழுக்க‌ங்க‌ளில் த‌லைசிற‌ந்து, சென்னைக் கிறித்த‌வ‌க் க‌ல்லூரியில் த‌மிழாசிரிய‌ராய்த் திக‌ழ்ந்து, துற‌வு நிலையுற்று, ப‌ல்லாவ‌ர‌த்தில் பொதுநிலைக் க‌ழ‌க‌த் த‌லைவ‌ராய் வீற்றிருந்த‌ சுவாமி வேதாச‌ல‌ம் என்னும் ம‌றைம‌லைய‌டிக‌ள் த‌மிழ்நாடு செய்த‌ பெருந்த‌வ‌வுருவின‌ர்.

இவ‌ர் 'மாணிக்க‌வாச‌க‌ர் வ‌ர‌லாறும் கால‌மும்' 'திருக்குர‌ளாராய்ச்சி' முத‌லிய‌ நாற்ப‌துக்கு மேற்ப‌ட்ட‌ நூல்க‌ளை எழுதியுள்ளார்.

"முகிழ்ந்து ம‌ண‌ங்க‌ம‌ழ்ந்து அழ‌காய் ம‌ல‌ரும் ப‌ருவ‌த்தே ஓர் அரிய‌ செங்க‌ழுநீர்ப்பூ அத‌ன‌ருமைய‌றியான் ஒருவ‌னாற்கிள்ளியெறிய‌ப் ப‌ட்டு அழிந்தாற் போல‌வும், ம‌றைநிலாக் கால‌த்தே திணிந்து ப‌ர‌ந்த‌ இருளின்க‌ட் செல்லும் நெறி இதுவென‌க் காட்டுத‌ற்கு ஏற்றி வைத்த‌ பேரொளி விள‌க்கு ச‌டுதியில் வீசிய‌ சூறைக் காற்றினால் அவிந்து ம‌றைந்தாற் போல‌வும், நீண்ட‌நாள் வ‌றுமையால் வ‌ருந்திய‌ ஒருவ‌ன் புதைய‌லாய்க் க‌ண்டெடுத்த‌ பொன் நிறைந்த‌ குட‌ம் ஒன்று வ‌ன்நெஞ்ச‌க் க‌ள்வ‌னொருவ‌னாற் க‌வ‌ர்ந்து கொள்ள‌ப்ப‌ட்டாற் போல‌வும் இத்த‌மிழ் நாட்டுக்கு ஒரு க‌ல்வி ம‌ல‌ராய் ஓர் அறிவு விள‌க்காய் ஓர் அருங்குண‌ப் புதைய‌லாய்த் தோன்றிய‌ இவ்விளைஞர் த‌ம‌து 43‍ஆம் ஆண்டில் க‌துமென‌க் கூற்றுவ‌னாற் க‌வ‌ர‌ப்ப‌ட்ட‌து ஒரு பெருங்கொடுமைய‌ன்றோ?"


த‌மிழ் மொழி த‌னித்திய‌ங்கும் வ‌ல்ல‌மைய‌ற்ற‌து. அது வ‌ட‌மொழி இல‌க்கிய‌ங்க‌ளையும் இல‌க்க‌ண‌ங்க‌ளையும் க‌ட‌ன்பெற்றுத்தான் இய‌ங்குகிற‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு அறிவில்லை. அப்ப‌டி அறிவுப்பெற்றிருக்கின்றார்க‌ள் என்றால் அவ‌ர்க‌ள் ஆரிய‌வ‌ழிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌த்தான் இருக்க‌ வேண்டும் என்ற‌ க‌ருத்துக‌ள் ப‌ர‌வி இருந்த‌ கால‌ம். த‌மிழ்ப்புல‌வ‌ர்க‌ளே த‌மிழைத் தாழ்த்தி வ‌ட‌மொழியை உய‌ர்த்திக் கொண்டாடிக் கொண்டிருந்தார்க‌ள். இந்நிலையில், த‌மிழ் உண‌ர்வுமிக்க‌ அறிஞ‌பெரும‌க்க‌ள் துடித்தெழுந்து த‌மிழின் பெருமையை எடுத்துக்காட்டிப் போராடின‌ர். ஆனாலும், பிற‌மொழி க‌ல‌வாத‌ உரைந‌டை வ‌ழ‌க்கை, பேச்சு வ‌ழ‌க்கை செய‌ற்ப‌டுத்திக் காட்டா நிலையே அன்று இருந்து வ‌ந்த‌து.

இந்த‌ நிலையில் ஒரு மாற்ற‌ம், பெருமாற்ற‌ம் உருவான‌து. தித்த‌மிழ் இய‌க்க‌ம் தோற்ற‌ம் பெற்ற‌து. இது எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்ப‌து குறித்து 1937இல் வெளிவ‌ந்த‌ வ‌ட‌ச்சொற்ற‌மிழ் அக‌ர‌வ‌ரிசை என்னும் த‌ம் நூலிலே, ம‌றைம‌லைய‌டிக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளார் ம‌திப்புமிகு நீலாம்பிகைய‌ம்மையார் எடுத்துரைத்துள்ளார்.

"யான் ப‌தின்மூன்றாண்டுச் சிறுமியாய் இருந்த‌போது, 1916 ஆம் ஆண்டில் ஒருநாட் சாயுங்கால‌ம் என் த‌ந்தையாருட‌ன் தோட்ட‌த்தில் உலாவிக் கொண்டுவ‌ருகையில், த‌ந்தையார் இராம‌லிங்க‌ அடிக‌ளார் அருளிச் செய்த‌ திருவ‌ருட்பாவிலுள்ள‌, "பெற்ற‌ தாய்த‌னை ம‌க‌ம‌ற‌ந்தாலும் பிள்ளையைப்பெறுந் தாய்ம‌ற‌ந்தாலும் உற்ற‌ தேக‌த்தை உயிர் ம‌ற‌ந்தாலும்..."

என்னும் பாட்டைப் பாடினார்க‌ள். அப்பாட்டின் இர‌ண்டாம் அடியாகிய‌ உற்ற‌ தேக‌த்தை உயிர் ம‌ற‌ந்தாலும் என்ப‌த‌னைச் சொன்ன‌போது, என் த‌ந்தையார‌வ‌ர்க‌ள் என்னை நோக்கி, "அம்மா! இப்போது நான் பாடிய‌ பாட்டைத் தூய‌த‌மிழில் இராம‌லிங்க‌ அடிக‌ள் எவ்வ‌ள‌வு அழ‌காக‌ப் பாடியிருக்கிறார்க‌ள்! ஆனால், அப்பாட்டின் இர‌ண்டாம‌டியிலுள்ள‌ 'தேக‌ம்' என்னும் வ‌ட‌ச்சொல்லை நீக்கி, 'யாக்கை' என்னும் த‌னித்த‌மிழ்ச் சொல்லை அவ‌ர்க‌ள் அங்கே அமைத்துப் பாடி இருந்தால் இன்னும் எவ்வ‌ள‌வோ ந‌ன்றாயிருக்கும்.

த‌மிழில் பிற‌மொழிச்சொற்க‌ளைச் சேர்ப்ப‌தால், த‌மிழ் த‌ன் இனிமையை இழ‌ந்துபோவ‌தோடு, ப‌ல‌ த‌மிழ்ச் சொற்க‌ளும் வ‌ழ‌க்கில் இல்லாம‌ல் இற‌ந்து போகின்ற‌ன‌" என்றார்க‌ள். இது கேட்ட‌ அன்று முத‌ல் த‌னித்த‌மிழிலேயே பேச‌வும் எழுத‌வும் த‌ந்தையாரும் யானும் உறுதிகொண்டோம்." த‌னித்த‌மிழ் இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ வ‌ர‌லாறு இது.

சுவாமி வேதாச‌ல‌ம் என்னும் த‌ம் வ‌ட‌மொழிப்பெய‌ரை ம‌றைம‌லைய‌டிக‌ளார் என்று தூய‌த்த‌மிழ்ப்பெய‌ராக‌ மாற்ற‌ஞ்செய்துகொண்டார்.. 'ச‌ம‌ர‌ச‌ ச‌ன்மார்க்க‌ம்' என்னும் த‌ம் இல்ல‌த்தின் பெயரை 'பொதுநிலைக் க‌ழ‌க‌ம்' என்றும், தாம் ந‌ட‌த்திவ‌ந்த‌ 'ஞான‌சாக‌ர‌ம்' திங்க‌ளித‌ழை 'அறிவுக்க‌ட‌ல்' என்றும் மாற்றிக்கொண்ட‌தோடு தாம் முன்ன‌ம் எழுதி வெளியிட்டிருந்த‌ நூல்க‌ளில் அமைந்திருந்த‌ பிற‌மொழிச்சொற்க‌ளைப் புதிய‌ ப‌திப்புக‌ளில் த‌மிழாக்கி வெளியிட்டார். த‌ம் உரையாட‌லில், மேடைப்பேச்சில், எழுத்தில் இல‌க்கிய‌ ம‌ண‌ங்க‌ம‌ழும் இல‌க்க‌ண‌ப் பிழைய‌ற்ற‌ தூய‌த்த‌மிழ் ந‌டையையே க‌டைப்பிடித்தார். த‌மிழ், வ‌ட‌மொழி, ஆங்கில‌ம் என‌ மும்மொழியில் புல‌மைபெற்றிருந்த‌ அடிக‌ளார், அம்மொழி இல‌க்கிய‌ங்க‌ளையும் ஆராய்ந்து த‌மிழின் த‌னித்த‌ன்மையை உல‌கிற்கு உண‌ர்த்தினார். ச‌ம‌ய‌ நெறிக‌ளை அறிவுநிலையில் ஆராய்ந்து வ‌ர‌லாற்று உண்மைக‌ளை எடுத்துரைத்தார்.

த‌மிழ்த் த‌ழைத்தோங்கி நிற்ப‌த‌ற்கு, அப்பெரும‌க‌னார் ஆற்றிய‌ தொண்டு, அள‌ப்ப‌ரிய‌து. த‌மிழோடு இணைந்துவாழும் பெருவாழ்வே அவ‌ர் வாழ்வு. அவ‌ர் க‌ண்ட‌ த‌னித்த‌மிழ் இய‌க்க‌த்தைப் போற்றி, அவ‌ரைப் பின்ப‌ற்றிய‌வ‌ர் எண்ணில‌ட‌ங்கார்.

-க‌ம்பார் க‌னிமொழி-

த‌க‌வ‌ல் : ஞாயிறு ந‌ண்ப‌ன் (4.5.2008)

Read more...

எகிப்தில் த‌மிழ் பிராமி எழுத்துக‌ள் க‌ண்டுபிடிப்பு..!

>> Saturday, April 26, 2008


சென்னை : த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.

இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் 'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.


இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு, க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.

தொல்லிய‌ல் நிபுண‌ரான‌ ஐராவ‌த‌ம் ம‌காதேவ‌ன், க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் த‌மிழ் பிராமி லிபி வ‌கையை சார்ந்த‌வை என‌ அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான‌ ஆதார‌ங்க‌ளை திர‌ட்டுவ‌தில் அவ‌ர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள‌ பிரென்சு க‌ல்வி க‌‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் மொழியிய‌ல் நிபுண‌ரான‌ பேராசிரிய‌ர் சுப்ப‌ராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள‌ ம‌த்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் கே.இராச‌ன், ம‌ற்றும் த‌ஞ்சாவூர் த‌மிழ்ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர் வீ.செல்வ‌குமார் போன்றோரின் நிபுண‌த்துவ‌ங்க‌ளை உத‌வியாக‌ப் பெற்றுள்ளார்.

அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துகள் 'பானை ஒரி' என‌ ஒலிப்ப‌தாக‌வும், 'ஒரி' எனும் சொல் த‌மிழில் 'உரி' (க‌யிற்றில் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை) என அழைக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், அது ம‌ருவி 'ஒரி' என‌ ப‌ர்சி எனும் ம‌த்திய‌ திராவிட‌ மொழியில் இன்று வ‌ழ‌க்கில் இருப்ப‌தாக‌வும் திரு.ம‌காதேவ‌ன் தெரிவித்தார். த‌ற்கால‌த்தில் க‌ன்ன‌ட‌ மொழியில் 'ஒட்டி' என‌ புழ‌ங்கிவ‌ரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் ம‌ருவ‌லாக‌ இருக்க‌க் கூடும் என‌ அவ‌ர் தெரிவித்தார்.

க‌சீர் அல் க‌டீமில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌மிழ் பிராமி எழுத்துக்க‌ளை 'ஒர்ரி' என‌வும் வாசிக்க‌லாம், ஆனால் பெரும்பாலும் த‌மிழ் பிராமி லிபியை பொறுத்த‌ம‌ட்டில் ஒரே வித‌மான‌ ஒலிக‌ளை இர‌ட்டிப்புப் செய்யாது என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இதேப் போன்ற அக‌ழ்வாராய்ச்சியொன்று க‌சீர் அல் க‌டீமில் 30 ஆண்டுக‌ளுக்கு முன்பு ந‌ட‌த்த‌ப்பெற்று, த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ கி.பி முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌ இர‌ண்டு சாடிக‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இதேப் போன்ற‌ த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ சாடிக‌ள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்க‌ட‌ல் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ பெரேனிக்கே எனும் ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் குடியிருப்புப் ப‌குதியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ திரு.ம‌காதேவ‌ன் கூறினார்.

மேற்கத்திய‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும், த‌மிழ் ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ ரோமானிய‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் செங்க‌ட‌ல் வ‌ழி வ‌ணிக‌த் தொட‌ர்பான‌து நூற்றாண்டின் ஆர‌ம்ப‌க் கால‌க்க‌ட்ட‌த்திலேயே கொடிக்க‌ட்டி ப‌ற‌ந்த‌தை இத்த‌கு க‌ண்டுபிடிப்புக‌ள் ஆதார‌ப்பூர்வ‌மாக‌ நிரூபித்துள்ள‌ன‌.

'திரைக‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு' என்று சும்மாக‌வா கூறினார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாம‌ல் அம‌ர்ந்துக் கொண்டு கூறிய‌ ப‌ழ‌மொழிய‌ல்ல‌ இது. அனுப‌வ‌ப்பூர்வ‌மாக‌வே சாதித்துக் காட்டியிருக்கிறார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ‌ர்.. வ‌ள‌ர்க‌ அவ‌ர்த‌ம் மாண்பு..!



* தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. இது அசோகனின் பிராமி எழுத்து முறையில் இருந்து உருவானது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின

த‌க‌வ‌ல் : த‌மிழ் வீக்கிப்பீடியா

Read more...

சாசனம்....

>> Friday, April 18, 2008

கதவைத் தட்டினேன், சிறிது நேரம் கழித்து ஒரு சிவத்த மனிதர் கதவைத் திறந்தார்.

"வணக்கம் சார்!"..

பதிலுக்கு அவரும்,

"வணக்கம், என்ன வேண்டும்..?"

"சார், கவிதை புத்தகம் விக்கிறதா கேள்விப்பட்டேன்... அதான் வாங்க வந்தேன்.."

முகத்தில் புன்னகையுடன்

"ஓ, நண்பன்லே பாத்தீங்களா.."

நானும் தலையாட்டினேன்.

"இருங்க கொண்டு வரேன்.. உள்ள வரீங்கலா..?"

'பரவால சார், நான் இங்கையே நிக்கிறேன், நீங்க கொண்டு வாங்க.."

சற்று நேரம் கழித்து சாசனம் என் கையில் வந்தது. ஆம், அதுதான் கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் இயற்றிய கவிதை தொகுப்பு நூல். குறிப்பாக இந்நூலை நான் வாங்கியதற்குக் காரணம், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் மலேசிய இந்தியர்கள் தற்காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிப்பதாக இருக்கின்றன.




சாசனத்தை கையில் பெற்றுக் கொண்டப் பிறகு கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் 'மக்கள் சக்தி' எனும் இன்னொரு புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். இரு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.

"இந்த ரெண்டு புத்தகங்களையும் என் அன்பளிப்பா வெச்சிகுங்க.."

என்று 'கரை கடந்த கனவு' மற்றும் 'ஊசிப்போன உறவுகள்' எனும் இரு கவிதை நூல்களை அன்போடு கொடுத்தார். மகிழ்ச்சியில் பெற்றுக் கொண்டேன்.



வீட்டிற்குச் சென்ற‌தும் புத்த‌க‌த்தை திற‌ந்தேன்.. முக‌வுரை தென்ப‌ட்ட‌து..
அதில் சாச‌ன‌த்திற்கு க‌விஞ‌ர் இப்ப‌டி இல‌க்க‌ண‌ம் க‌ற்பிக்கிறார்...

" தூக்கு மேடைக்கு த‌ந்திர‌மாக‌, செல்ல‌மாக‌ அழைத்துச் செல்ல‌ப்ப‌டுகிற‌து ஓரின‌ம், மூக்க‌ணாங்க‌யிறு மாட்ட‌ப்ப‌ட்ட‌ காளையாக‌ ச‌மூக‌ம், த‌ன‌து ச‌க்தியை, வ‌ல்ல‌மையை அறியாது சாதுவான‌ப் ப‌சுவாக‌த் த‌லையாட்டி நிற்கிற‌து, "ந‌ல்ல‌ உழைப்புப் பால் த‌ரும் ச‌மூக‌ம்" என‌ச் சிரித்துக் கொண்டே த‌ட்டிக் கொடுக்கிறார்க‌ள் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள்.

செல்வ‌ நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் ச‌ரிச‌ம‌மாக‌த் த‌ர‌ப்ப‌டும்; நாட்டின் வ‌ள‌ம் குடிம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் நியாய‌மான‌ வ‌ர‌மாகும் என்ற‌ வாக்குறுதிக‌ள் த‌ன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌.

ம‌ன்ன‌ராட்சி ம‌ணிம‌குட‌ம், ம‌லையேறிவிட்ட‌ பின்பு, ம‌க்க‌ளாட்சி சிம்மாச‌ன‌த்தில் அம‌ர்ந்து ம‌ணிம‌குட‌ம் சூடிய‌து. ம‌க்க‌ளாட்சி அர‌சிய‌ல் ம‌க்க‌ளை ம‌ந்தைக‌ளாக‌ ஓட்டி ந‌ட‌த்துவ‌தில் ம‌கிழ்ச்சி கொள்கிற‌து. சிந்திப்ப‌வ‌ர்க‌ளை, சிற‌ந்த‌ க‌ருத்து உரைப்ப‌வ‌ர்க‌ளைத் த‌னிமைச் சிறைக‌ளில் வாழ‌ குடியுரிமை த‌ருகிற‌து.

இன்றைய‌ நாட்டு அர‌சிய‌ல், குடிம‌க்க‌ளின் நியாய‌மான‌ உரிமைக‌ளுக்கு வில‌ங்கிட்டு அவ‌ர்க‌ள‌து சுத‌ந்திர‌ச் சிந்த‌னையைத் தேயிலை இலையென‌க் கிள்ளி சுடு சாத‌ன‌ங்க‌ளில் உல‌ர‌ வைக்கிற‌து.

ஏழைக‌ள் ப‌ர‌ம‌ ஏழைக‌ளாக‌ இழிப‌ட‌வும், ப‌ண‌க்கார‌ர்க‌ள் கொழுத்த‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌ எடுப‌ட‌வும் இங்கே ச‌ட்ட‌ங்க‌ள் அனும‌திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ப‌ண‌க்கார‌ர்க‌ளின் ச‌ட்டைப் பையில் அமைதியாக‌ உற‌க்க‌ம் கொண்டுள்ள‌து ச‌மூக‌ நீதி.

ப‌ண‌முத‌லை முத‌லாளிக‌ளுக்கு கைகக‌ட்டி சேவ‌க‌ம் செய்ய‌, முன்வ‌ந்து ப‌ணிந்து நிற்கிற‌து அர‌சிய‌ல் ச‌ட்ட‌ங்க‌ள்.

நாட்டில் அமைதி த‌வ‌ழ்கிற‌து; இண‌க்க‌ம் வ‌ள‌ர்கிற‌து; ப‌சிக்கு சோறு இருக்கிற‌து; பொருளாதார‌ம் பீடுந‌டை போடுகிற‌து. இருந்தென்ன‌? ம‌க்க‌ளின் ச‌ம‌த‌ர்ம‌ப் போராட்ட‌த் த‌லைக‌ள் கொய்யாப்ப‌ழ‌ங்க‌ளாக‌ கொய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.

போராட்ட‌ம்தான் ம‌னித‌ உரிமையை காக்கும். ம‌னித‌ மாண்பை ம‌திக்கும், ச‌ம‌த‌ர்ம‌ அர‌சு கோலோச்ச‌, எதிர்ப்பின் உச்ச‌ம்தான் போராட்ட‌ம். இது ஒதுக்க‌ப்பாட்ட உல‌க‌ம் அறிந்த‌ ஒரே மொழி. ச‌ரித்திர‌ம் சொல்லும் ச‌ன்மார்க்க‌ மொழி.

போராட்ட‌ ச‌மூக‌த்தில்தான் மாற்ற‌ம்‍ம‌றும‌லர்ச்சி த‌ழைத்தோங்கும். ம‌னித‌ சாச‌ன‌ம் ம‌திக்க‌ப்ப‌ட‌, இன‌ங்க‌ளின் உரிமைக‌ள் காக்க‌ப்ப‌ட‌ த‌னி ம‌னித‌ உள்ள‌த்தில் எரிம‌லையாக‌க் கொதித்துக் கொண்டிருக்க‌ வேண்டும் போராட்ட‌ம்..."

என்றும் அன்புட‌ன்,

ஏ.எசஸ்.பிரான்சிஸ்


சாச‌ன‌ம்

செத்துக் கொண்டிருக்கும்
ச‌மூக‌ ஓல‌ம்!

காய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌த்தின்
இறுதிக் கால‌ம்!!

ந‌சுக்க‌ப்ப‌ட்ட‌ நீதியின்
தூக்குக் கோல‌ம்!!!

'சாசனம்', 'ம‌க்க‌ள் ச‌க்தி' க‌விதைக‌ளோடு உற‌வாட‌ நினைக்கும் வாச‌க‌ர்க‌ள், கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் க‌விஞ‌ர் ஏ.எஸ்.பிரான்சிஸ் அவ‌ர்க‌ளைத் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

ஏ.எஸ்.பிரான்சிஸ்,
க‌விஞ‌ர் & எழுத்தாள‌ர்,
60b, Punchak Bukit Mutiara Satu,
Pearl Hill Villa
11200, Tanjung Bunga, Penang

H/P : 016-4892496 / 04-8900293
E-mail : khileefrancis@yahoo.com

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

இன்றைய‌ ப‌திவிற‌க்க‌ம்..

>> Friday, April 11, 2008


ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள் புனைந்துள்ள‌ 'ச‌ரித்திர‌ க‌தைக‌ள்' எனும் மென்நூல் உங்க‌ள் ப‌திவிற‌க்க‌த்திற்காக‌.. ப‌திவிற‌க்க‌ம் செய்திட‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இணைய‌ இணைப்பைச் சுட்டுங்க‌ள் : ச‌ரித்திர‌ க‌தைக‌ள்

ச‌ரித்திர‌ க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌த‌ன்வ‌ழி வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ க‌ற்ப‌னா ச‌க்தியையும் மொழி வ‌ள‌த்தையும் பெருக்கிக் கொள்ள‌ வ‌ழிவ‌குக்கும். ப‌டித்து இன்புறுங்க‌ள்...

Read more...

மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்! (தொடர் 3)

>> Tuesday, March 25, 2008

மதியாரும் மாமனாரும்

வருங்கால மாமனார் என அப்போது எனக்குத் தெரியாததால், மதியார் வாசலை மிதியாதே என்பதுபோல் அவர் வீட்டுக்குப் போகாமல் பங்சார் ரோட்டை நோக்கி நடந்தேன். வெள்ளைக் கைக்குட்டையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டேன் சரண்டரின் சின்னமாக.
பங்சாரில் நடு ரோட்டில் சில மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் எரிக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருந்தன! போலீஸ் காடிகளின் ஓட்டமும் நின்று போய் இருந்தது. ஆன் சென் ரோட்டுப் பக்கமிருந்தும் ஆஜி டோலா கம்பத்துப் பகுதியிலிருந்தும் எதோ ஆரவாரமான சப்தங்களும் கூக்குரல்களும், இனங்காண முடியாத அலறல் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

இனிமேலும் சாலையில் நடப்பது சரியில்லை என முடிவுக்கு வந்த நான், சாலை ஓரமாக இருந்த இரயில்வே தொழிலாளர் குடியிருப்புகள் ஏதேனும் ஒன்றில் இரவைக் கழிக்கலாம் என்று எண்ணினேன். அப்போதுதான் ராதாமணியின் வீடு அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது.
அப்போது தமிழர் திருநாள் நாடகங்களில் எங்களுடன் நடித்துவந்தவர் ராதாமணி. பிற்காலத்தில் இவர் புகழ்பெற்ற வானொலி நடிகையானார். பிரபல எழுத்தாளர் பெரி நில பழனிவேலனை மணந்து கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றார். தமிழை மிக அழகாகப் பேசும் நம் நாட்டு நடிகையரில் முக்கியமானவர்.

இரயில்வே குவார்ட்டர்சில் இருந்த இவர்களது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன் தட்டினேன். திறக்கப்படவில்லை. வீட்டில் யாரும் இல்லையா? அல்லது பயந்துக்கொண்டு திறக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.
வேறுவழியில்லை! எப்படியோ நடந்துதான் சென்றாகவேண்டும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து லீவர் பிரதர்ஸ் பக்கம் வந்து பந்தாய் பகுதியை நோக்கி வேக நடைப்போட்டேன். திடீரென ஒரு கும்பல் கம்பத்துப் பக்கமிருந்து ஓடி வந்து கத்திக் கொண்டே யாரையோ விரட்டிக் கொண்டு பந்தாய் டாலாம் திசையை நோக்கி ஓடியது! இனியும் நடந்து செல்வது பெரும் ஆபத்து! அருகே இருந்தது பூங்கா ராயா ரெஸ்டாரண்டுக்கு ஓடிச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். மீண்டும் மீண்டும் தட்டிய பிறகு இலேசாகக் கதவைத் திறந்து மூக்கைமட்டும் வெளியே நீட்டிக் கொண்டு பார்த்தது ஓர் உருவம்.

விஷயத்தை விளக்கி, இன்று இரவு மட்டும் தங்க இடம் தரும்படி கெஞ்சினேன். மலையாளமும் தமிழும் கலந்து "அடபயம் வாணாம். இப்படியே சி.இ.பி. குள்ளே பூந்து போ நம்ம ஆள்களை ஒண்ணும் செய்யாது!? என்று கூறிவிட்டுக் கதவைப் பட்டென மூடிக்கொண்டார் அந்த மனிதர்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நகர் முழுமைக்கும் மின்சாரம் விநியோகிக்கும் சி.இ.பி. பவர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்! நகர மின்சார விநியோகத்தைக் கீழறுப்புச் செய்ய எவனோ புகுந்து விட்டான் என என்னைப் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா? புத்திசாலித்தனமாக சி.இ.பி பவர் ஸ்டேஷனுக்கு நுழையவில்லை நான்.
அடுத்த கட்டடத்தின் நுழைவாசலில் கம்பி கேட் இல்லை. உள்ளே சென்றேன். கும்மிருட்டு! கரப்பான் பூச்சி நாற்றம். உலகிலேயே எனக்கு இரண்டே இரண்டிற்குத்தான் அதிகப் பயம்! ஒன்று, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நாசக்காரர்கள், மற்றொன்று கரப்பான் பூச்சி! வேறு என்ன செய்வது.

'நாயர் பிடிச்ச புலிவாலு!' என்பதுபோல், திரும்பி பிரிக்பீல்ட்ஸை நோக்கிப் போவதும் முடியாது தொடர்ந்து கம்போங் குறிஞ்சியை நோக்கிச் செல்லவும் முடியாது! கலவரத்தில் சிக்குவதைவிட, கரப்பான் பூச்சிகளிடையே உட்கார்ந்திருப்பது உசிதம் எனப்பட்டது.
கட்டடத்திற்குள் நுழைந்தேன். மாடிப்படிகளுக்குக் கீழே படுத்துக்கொள்ளத் தக்க இடம் இருந்தது. விடியும் வரை அங்கேயே ஒளிந்திருக்கலாம் காலையில் பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்தேன்.

நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. சாலையில் யார்யாரோ இங்கும் அங்கும் ஓடுவதும் யாரோ யாரையோ விரட்டிச் செல்வதுமாக அப்போதைக்கப்போது சப்தம். 'நிமிடம் வருடமாக நகர்ந்தது' எனக் கதைகளில் படிக்கிறோம். அதை அப்போதுதான் உணர்ந்தேன். வெளியே கலகக்காரர்கள் நடமாட்டம். உள்ளே கரப்பான் பூச்சிகளின் தாக்குதல். கட்டடத்திற்கு வெளியே வாசல் ஓரமாக நாலைந்து பேரின் நடமாட்ட அரவம். ஏதோ தகரடின்களை திறப்பது போன்ற சப்தம், வந்து எட்டிப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

கட்டடத்தைப் பற்றவைத்துவிடுவார்களோ! இந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதி. இங்கிருந்து வெளியாகிவிட வேண்டும். காத்திருந்தேன். கட்டடத்தின் ஓரமாகக் கேட்ட சப்தம் நின்றதும் மெதுவாக வந்து எட்டிப் பார்த்தேன்.
ஒருவரும் இல்லை. வெளியே வந்து திகைத்து நின்றேன். என்ன செய்வது? எங்கே செல்வது? ஒன்றும் புரியவில்லை. இந்தக் கோலாலம்பூரில் நடுவீதியில் நிற்கும் நிலை எனக்கு ஏற்படும் என எண்ணிக்கூடப் பார்த்தது இல்லை நான்!
"குடை நிழல் ஏறிக் குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்தோர் நாள் நண்ணினும் நண்ணுவர்! எனத் தெரியாமலா சொன்னார்கள்!

கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் எல்லாம் சொகுசாக பாதுகாப்பாக வீட்டுக்குள் குடும்பத்துடன் குதூகலமாக இருக்கிறார்கள்! அப்பாவிகளான நாம் அல்லல்பட்டு நடுவீதியில் நிற்கிறோம். கட்டத்திற்கு வெளியே கிடந்த தகர டின்னும் எண்ணெய் நாற்றமும் தீமூட்டும் முயற்சி நடந்திருக்கிறது என்பதைக் காட்டியது. தீவைப்பு முயற்சியை மேற்கொண்டவர்கள் போலீஸ் காடியின் சப்தம் கேட்டு ஓடி ஒளிந்திருக்கலாம் அல்லது அது காங்கிரீட் கட்டடமானதால் தீவைக்கும் முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். கட்டடத்தின் முதல் மாடி ஜன்னல் திறக்கப்பட்டு விளக்கு எரிந்தது. ஆள் நடமாட்டம் தெரிந்தது. உதவி கேட்டு பலமாகக் குரல் கொடுத்தேன். மேலே இருந்து ஓர் உருவம் தலையை நீட்டி என்னை உற்றுபார்த்து விட்டு " சார் நீங்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? " எனக் குரல் கொடுத்தது.

எனக்கு அது யார் என்று உடனடியாகத் தெரியாவிட்டாலும் யாரோ அறிமுகமானவர்கள் என அறிந்ததும் போன உயிர் திரும்பி வந்தது.

" ஆமா... ஆமா... இராத்திரிதர்களும்... அதுதான் என்று கத்தினேன்.

கதவைத் திறந்து கொண்டு வந்து அன்று என்னைக் காப்பாற்றியது ரமணி.

தமிழர் கதை தொடரும்...

-பாவலர் சங்கு சண்முகம்

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP