அன்புடையீர்,
பினாங்கில் கர்நாடக இசை பற்றிய கருத்தரங்கொன்று எதிர்வரும் 29 -ம் திகதி மே மாதம் , நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வானது, கர்நாடக இசையின் வரலாறு மற்றும் நம் உடலுக்கு ராகங்கள் மற்றும் தாளங்களினால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது ஆய்வின் வழி , அயல் நாடுகளில் சமர்பித்த கட்டுரைகளை கொடுக்கவுள்ளார்.
கர்நாடக இசையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள மேலும் அதில் உள்ள உன்னதமான அம்சங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இக்கருத்தரங்கு அமையவிருப்பதாகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நினைவாற்றல் திறமையினை பெறவும் இசை வழிகாட்டுவதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.
இப்பயன்மிகு கருத்தரங்கில் கலந்து பயன்பெற மாணவர்களையும் பெற்றோர்களையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழைக்கிறார்.
இடம் : அருள்மிகு கருமாரியம்மன் கோயில், ஜாலான் தோடாக், செபராங் ஜெயா, 13700 பிறை, பினாங்கு.
திகதி : 29/05/2011 (ஞாயிறு)
நேரம் : காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை
Read more...