முகிதீன் யாசினின் மாற்றாந்தாய் போக்கினை இண்ட்ராஃப் சாடியது!
>> Wednesday, September 21, 2011
மூன்று பொதுத் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 17 செப்தெம்பர் அன்று நடந்தேறியது. அந்நிகழ்வில் துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதீன் யாசின் கலந்து அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். வழக்கம்போல் வெற்று வாக்குறுதிகளை அள்ளி இரைத்த அவரின் உரை பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மக்களை தொடர்ந்து வெற்று வாக்குறுதிகளால் அலைக்கழிக்காமல், பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்பு பணிகளை அரசாங்கம் தொடங்க வேண்டும் என இண்ட்ராஃபின் தேசிய ஆலோசகர் திரு.கணேசன் எச்சரித்தார்.
போராட்டம் தொடரும்... Read more...