மகஜரை ஒப்படைக்க மேல் முறையீட்டு மனுத் தாக்கல்..

>> Thursday, November 29, 2007

இந்து உரிமைப் பணிப்படையினர் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு கொடுக்கவிருந்த மகஜரை அரசாங்கம் பல வழிகளில் தடுத்து வருவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அத்தடைகளை நீக்குமாறுக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாக்கினி படச்சுருள்



இதற்கிடையில் இந்து உரிமைப்படையினரின் பேரணியில் கலந்துக் கொண்ட ஒரு இந்திய சகோதரனை போலீஸ்காரர்கள் ஒரு விலங்கை எட்டி உதைப்பதைப்போல் உதைத்து அடித்து கைது செய்யும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு...



இந்த அராஜகக்காரர்களின் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது???


இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் 8 மணி நேரத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை Section 4(1)(b) of the Sedition Act சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தெரிய வருகிறது. நவம்பர் 17-இல் சிரம்பானில் உள்ள பெய் உவா சீன ஆரம்பப் பள்ளியில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உண்மையைக் கூறினால் இனவாதமா?

போராட்டம் தொடரும்...

Read more...

மீண்டும் 3 பேரணிகளுக்கு தயாராகின்றனர் மலேசியர்கள்...


மலேசிய மண்ணில் சுதந்திரம் என்பது எந்த அளவில் நாம் அனுபவிக்கின்றோம் என சிந்தித்துப் பார்த்தால் " கொடுத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள், அதிகம் கேட்காதே!! கொடுத்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பாதே!! " என்றுதான் இருக்கிறது.

ISA சட்டத்தைக்கூறி மக்களின் வாயை மூடுவதும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அடுத்த மாதம் இன்னும் மூன்று அமைதிப் பேரணிகள் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளன.




1. வருகின்ற டிசம்பர் 9-ஆம் திகதியன்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது வருடாந்திர மனித உரிமை நாளுக்கான பேரணியை நடத்தவுள்ளது. இப்பேரணியில் BERSIH அமைப்பும் கலந்துக் கொள்ள தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

2. இதனை அடுத்து டிசம்பர் 11-ஆம் திகதி அமைப்பு நாடாளுமன்றத்தின் முன்பு மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கான வயது வரம்புத் தொடர்பான கேள்வியை எழுப்பும் வகையில் பேரணி நடக்கவுள்ளது. இதற்கிடையில் இன்று மக்களவையில் தேர்தல் ஆணையத்தின் தலைவரான அப்துல் ரஷீட் அப்துல் ரகுமானை 1 வருடத்திற்கு மீண்டும் தலைவர் பொறுப்பில் அமர்த்த கருத்து கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் திகதியுடன் பதவி பொறுப்பிலிருந்து வேளியேறும் அவரை மீண்டும் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.

3. மூன்றாவது பேரணியானது, நாட்டின் எதிர்க்கட்சிகளும், மற்றும் சில தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அடுத்த வருடம் ஜனவரி ஒன்றாம் திகதி முதல் டோல் கட்டணம் உயர்வதை எதிர்த்து போராடவுள்ளனர். இப்பேரணி நடக்கவிருக்கும் திகதி இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Read more...

தான் ஆடாமல் போனாலும் தன் சதை ஆடும்...


இன்றுக் காலையில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கணபதி ராவ் ஷா ஆலாமில் உள்ள அவர் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை சிரம்பான் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரம்பானில் இந்தியர்களின் உரிமைத் தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். காலை மணி 7.15 அளவில் கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் உடனடியாக சிரம்பான் காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தியதால் அவரின் மீது Sedition Act என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என நம்பப்படுகிறது. மற்ற வழக்கறிஞர்களும் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல நம் வழக்கறிஞர்கள்.



இதற்கிடையில் சென்ற வார அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்டு கைதானவர்கள் 114 ஜாமீனில் வெளியாவதற்கு ஆளுக்கு ரிங்கிட் 3000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே இந்து உரிமைப் பணிப்படையினர் நம் இந்திய மக்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், உங்களால் முடிந்த தொகையை இந்து உரிமைப் பணிப்படையினரின் சேமிப்பு வங்கியில் கொடுத்து அந்த வீர இளைஞர்களை உங்கள் சகோதரர்களாக எண்ணி உதவி புரிந்து விடுதலைப் பெறச் செய்யலாம்.

இதோ இந்து உரிமைப் பணிப்படையின் சேமிப்பு வங்கியின் விவரங்கள் கீழே :

HINDRAF ENTERPRISE

RHB ACC NUMBER : 21409900063168

மேலும் தகவல்களுக்கு :-

திரு.வசந்த் : 03-2825241 அல்லது 019-3718451

திரு. கணபதி ராவ் : 012-2861776

உங்கள் உதவி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, நம் சகோதரர்களை காப்பாற்றுவோம் வாரீர்!!

மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளச் செய்தி. சாமிவேலு பிதற்றல்..




போராட்டம் தொடரும்...

Read more...

மகஜர் சமர்ப்பிக்கப்படவில்லை...

>> Wednesday, November 28, 2007




விடுவிக்கப்பட்ட நம் வழக்கறிஞர்களுக்கு முதலில் நாம் சபாஷ் சொல்லிக்கொள்வோம்.

இந்து உரிமைப் பணிப்படை 200,000 கையொப்பம் இடப்பட்ட மகஜரை தொலை நகல் வழி பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அனுப்பிவிட்டதாக வெளியான செய்தி ஒரு வதந்தியென வழக்கறிஞர் உதயக்குமார் அவர்கள் தெரிவித்தார். போலீஸ் படைத் தலைவர் மூசா, பத்திரிக்கையாளர்களிடம் பேட்டிக் கொடுக்கும்பொழுது மகஜர் தொலை நகல் வழி அனுப்பப்பட்டுவிட்டதாக வதந்தியை கிளப்பிவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பேசுகையில், பணிப்படையினரே உண்மை விஷயங்களை வெளியிடுவதற்கு முன்பு மூசா தேவையில்லாமல் பொய்களைக் கூறியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.அதோடு மகஜரை ஜனவரி மத்தியில் 10 பேர் அடங்கியக் குழு இங்கிலாந்திற்குச் சென்று நேரடியாக பிரிட்டிஷ் அரசியாரிடமே கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸில் உள்ள சிறீ பாண்டி உணவகத்தில் இந்து உரிமைப் பணிப்படைடினரின் உறுப்பினர்கள் கலாட்டா செய்ததாகவும், உணவக ஊழியர்களைத் தாக்கியதாகவும், உண்ட உணவிற்கு பணம் செலுத்த மறுத்தனர் எனவும் TV1,TV2,TV3,TV7,BERNAMA,MALAY MAIL போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அவ்வுணவகத்திற்கு தொடர்புக் கொண்டு பேசும் பொழுது, அவ்வுணவக உரிமையாளர் தாம் அப்படிக் கூறவில்லை எனக் கூறினார். இதிலிருந்தே நம் பேரணிக்கு இழுக்கு கொண்டுவர வேண்டும் என அம்னோ அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தகவல் ஊடகங்கள் திட்டம் போட்டு வதந்தியை பரப்புகின்றன, எனத் தெரிய வருகின்றது.
தகவல் ஊடகங்கள் உண்மைகளை ஆராய்வதில் நடுநிலைமை வகிக்க வேண்டியது அதன் கடமை, அதனை மீறி செயல்படுகின்றன அம்னோ அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தகவல் ஊடகங்கள்.

Al-Jazeera செய்தி



போராட்டம் தொடரும்...

Read more...

நாடாளுமன்றத்தில் தேசிய முன்னனியின் பொறுப்பற்றப் பேச்சு!!

>> Tuesday, November 27, 2007


நாடாளுமன்றத்தில் தேசிய முன்னனிக் கட்சி நடந்துக் கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமாக அமைந்துள்ளது. இவர்கள் ஏதுக் கூறினாலும் நாம் வாயை மூடிக்கொண்டுக் கேட்க வேண்டும் என்று இந்த ஜனநாயக நாட்டில் எதிர்ப்பார்க்கிறார்கள். முட்டாளைவிட கேவலமாக இருக்கிறது தேசிய முன்னனியின் பதில்கள். ம.இ.காவின் கேமரன் மலை நாடாளுமன்ற பிரதிநிதி அரசாங்கம் இந்தியர்களுக்கு உதவுவதில் தோல்வியைக் கண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் துறையின் அமைச்சர் முகமது நஸ்ரி, "அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் நீர் ம.இ.காவிலுருந்து விலகிவிடு" என ஒரு நாடளுமன்ற பிரதிநிதி எனப் பாராமல் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளது நம்மை யோசிக்க வைத்துள்ளது.
அதோடு தேவமணி அவர்கள் ம.இ.காவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுவதற்காக பேசியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எது எப்படியாயினும் இந்திய மக்கள் யோசித்துச் செயல்படவேண்டியது அவசியம்.

இதோ அதன் படக்காட்சிக் கீழே :



CHANNEL NEWS ASIA-வின் செய்திகள்


Read more...

பத்துமலையில் நம் மக்களுக்கு நேர்ந்த கதி..

>> Monday, November 26, 2007


அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்வதற்கு ஒரு நாள் முன்பே இந்துக்கள் பத்துமலை முருகன் திருத்தலத்தில் கார்த்திகை விசேஷ பூஜைகளைச் செய்து அங்கேயே தங்கியிருக்கின்றனர். அதற்குள் யாரொ தெரியவில்லை, பொறுப்பற்றச் சிலர் பத்துமலை வளாகத்தின் இரும்புக் கதவுகளை மூடிவிட்டிருந்தனர்.





இதனை அறிந்த இந்துக்கள் பல முறை கதவைத் திறக்கச் சொல்லி கேட்டிருக்கின்றனர். அதற்குள் கலகத் தடுப்புக்காரர்கள் அங்கு வந்துவிட கதவு திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. பொறுமை இழந்த இளைஞர்கள் கதவுகளை உடைத்து வெளிவர வேண்டியதாயிற்று. இதற்கிடையில் கலகத்தடுப்புக்காரர்களும் மலாய்க்கார குண்டர் கும்பலில் சேர்ந்தவர்களும் இந்தியர்களுடன் கடும் மோதலில் ஈடுப்பட்டதாக தெரிய வருகிறது.



பலப்பேர் இதன்வழி கைது செய்யப்பட்டனர்.



ஸ்டார் நாளிதழில் IGP மூசா பத்துமலையில் அமில நீரும், கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசார் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார், எனினும் இங்குள்ள படங்கள் அதற்கு எதிர்மாறாக நிலைமையை சித்தரிகின்றன.










முக்கியக் குறிப்பு : இதற்கிடையில் நம்முடைய மூன்று வழக்கறிஞர்கள் விடுதலை அடைந்துள்ளனர்.

வாழ்க இந்திய சமுதாயம் !!

போராட்டம் தொடரும்...

Read more...

மலேசியா கினி படச்சுருள்கள்























Read more...

அமைதிப் பேரணித் தொடர்பான முக்கியச் செய்திகள்




1. துன் ராசாக் சாலையில் 4 ஆடவர்கள் FRU வேன்களில் ஏற்றப்பட்டு அடிக்கப்பட்டுள்ளனர்.

2. ஜொகூரில் இருந்து வந்த செல்வகுமரன், ரவி, மகேந்திரன், இராஜசேகரன், கிருஷ்ணமூர்த்தி, பாலா மற்றும் சிவா என்பவர்கள் கோலாலம்பூர் தங்கும் விடுதியில் காலை 7.30 மணிபோல் கலகத்தடுப்புக்காரர்களால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

3. நிறைய இந்தியர்கள் KLCC முன்பு அமிலம் கலந்த நீரினால் தாக்கப்பட்டுள்ளனர்.

4. பத்து மலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு IPK KL-லில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5. ஜாலான் ஈப்போவில் 3 பேருந்துகள், ஜாலான் புவில் 2 பேருந்துகள், கூலீமிலிருந்து வந்த 5 பேருந்துகள் கோலாலம்பூரில் தடுக்கப்பட்ட வேளை அனைவரும் KLCC-க்கு நடந்தே சென்றுள்ளனர்.

6. காலை 8.37 மணியளவில் அருகே பரமசிவன் பிள்ளை என்பவர் கலகத் தடுப்புக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

7. பந்திங் சாலைப் பேருந்துகள் தடுக்கப்பட்டன.

8. ரவாங்கிலிருந்து 9 பேருந்துகள் போலீசாரால் தடுக்கப்பட்டன. ஜாலான் டூத்தாவில் 5 பேருந்துகள் தடுக்கப்பட்டுள்ளன. ஜாலன் டிஞ்ஜாயில் 20 இந்தியர்கள் கைதுச் செய்யப்பட்டதோடு கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு 100ப் பேர்கள் காயமடைந்துள்ளனர்.

9. பத்து மலையில் 1 பேருந்து எரிக்கப்பட்டும், 20 மோட்டார் சைக்கிள்கள் போலீசாராலும் , மலாய் குண்டர் கும்பல்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 100ப் பேர்கள் கலகத்தடுப்புக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

10. காலை 8.15 மணியளவில் ஜாலான் டூத்தாவில் 3 வாகனங்கள் போலிசாரால் தடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதோடு 8ப் பேர்கள் கடுமையாக போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர்.

11. காலை மணி 9.45 மணியளவில் பழைய கிள்ளான் சாலையில் 5 பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. 100 பெரிய மோட்டார் சைக்கிள்கள் வழி இந்தியர்கள் KLCC-க்குப் படையெடுத்தனர்.

12. பினாங்கு ஜுருவில் 4 பேருந்துகளும், சுங்கை பட்டாணியில் 2 பேருந்துகளும் போலீசாரல் தடுக்கப்பட்டனர். பழைய கிள்ளான் சாலையில் பொதுப்பேருந்தான METRO BUS இந்தியப் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளது.

13. பத்து மலையில் 400 இந்தியர்கள் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டு IPK KL-க்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அதில் 19 பேர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருகிறார்கள்.

14. தைப்பிங்கிலிருந்து 3 பேருந்துகள் தடுக்கப்பட்டன. 100ப் பேர்கள் IPK KL-க்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

மூலம் : http://www.policewatchmalaysia.com/

என் நிழற்படக்கருவியில் பதிந்தக் காட்சி

Read more...

FRU தான் உண்மையான சீருடை அணிந்த ரௌடிகள் - திடுக்கிடும் உண்மைகள்

>> Sunday, November 25, 2007

ஒரு ஓட்டுநர் இல்லாத வாடகைக்காரை கலகத் தடுப்புக்காரர்கள் லாரியை வைத்துச் சேதப்படுத்தி, பிறகு அதனை தன் கைத்தொலைப்பேசியில் படம் பிடித்தல்..

படக்காட்சி





இதுபோன்ற சீருடை அணிந்து ஈனச் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் யாரிடமாவது இருந்தால் உடனடியாக நம் வழக்கறிஞர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்...
012-3207066, 012-3005005, 019-3154307 அல்லது pr_im@hotmail.com & uth@tm.net.my. Bilik gerakan Hindraf 03-22825241.

மேலும் செய்திகள் வரவுள்ளன...

வாழ்க இந்தியச் சமுதாயம்...!!!

போராட்டம் தொடரும்...

Read more...

அசத்திடாங்கய்யா நம்ம பசங்க...

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நம் அஞ்சாத சிங்கங்கள் நடத்திய போராட்டங்களை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் முழுக்கச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். எத்தனை தடங்கல்கள், எச்சரிக்கைகள், மிரட்டல்கள் வந்தாலும் இதற்கெல்லாம் பயப்படாமல் கலந்துக் கொண்ட இந்தியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் முக்கியமாக சில ஆண்களே இந்த அமைதிப் பேரணிக்கு வருவதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது, கொஞ்சம்கூட பயமே இல்லாமல் களத்தில் இறங்கிய நம் வீர இந்தியப் பெண்மணிகளுக்கு சிறந்தாழ்ந்த வணக்கங்கள்.

சொன்னதுப்போலவே அமைதியாகத் தொடங்கியப் பேரணியை போர்க்களமாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் கலகத் தடுப்புக்காரர்களே!! கண்ணீர் குண்டுகள், அமிலம் கலந்த நீர்களைப் பாய்ச்சி நம்மைக் களைக்க முயன்ற கலகத் தடுப்புக்காரர்களுக்கு தோல்வியே நேர்ந்தது. சற்றும் சளைக்காத நம் இந்தியர்கள் காரியம் முடியும்வரை நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை.

இங்கு நான் எடுத்தப் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அதோடு ஒரு ஓட்டுனர் இல்லாத வாடகைக் காரை கலகத் தடுப்புக்காரர்கள் எப்படி அடித்து நொறுகினார்கள் என்றப் படக்காட்சியையும் இங்குத் தருகிறேன். இத்தகைய ஈனச் செயலில் ஈடுப்பட்ட அவர்கள் தங்கள் கைத்தொலைப்பேசிகளால் அக்காரைப் படம் பிடித்தனர். இதனைச் செய்தவர்கள் நம் இந்தியர்கள்தான் என அவர்கள் அறிவிப்புச் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்தக் கேவலமான புத்தியுடையவர்கள் அப்படிச் செய்துவிடாமல் இருப்பதற்கு நாம் முன் நடவடிக்கை எடுத்துவிடுவது நல்லதல்லவா? இதில் கலகத் தடுப்புக்காரர்கள் எங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியது குறிப்பிடத் தக்கது. நல்லவேளை அவர்கள் புரிந்த அட்டூழியங்களை என் புகைப்படக்கருவியில் பதிவுச் செய்துவிட்டேன். இன்னும் மேலும் பல காட்சிகள் இதோ உங்களுக்காக....

முக்கியக் குறிப்பு :மதியம் 1.30 மணியளவில் மலேசிய பிரிட்டிஷ் தூதரகத்திற்கும், பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் அலுவலகத்திற்கும் தொலை நகல் மூலம் மகஜர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இது எந்த அளவில் உண்மை என வருங்காலங்களில் எதிர்ப்பார்ப்போம்..















ஓட்டுநர் இல்லாதக் காரைச் சேதப் படுத்திய கலகத் தடுப்புக்காரர்கள்


சேதப்படுத்தியக் காரை தன் கைத்தொலைப்பேசியின் மூலம் கலகத் தடுப்புக்காரர்கள் படம் எடுத்தல். அவர்களின் உள்நோக்கம் நம் மீது பழிபோடவேண்டும் என்பதற்காக...
























Al-Jazeera செய்திகள்



Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP