பினாங்கு வாடகை வண்டி ஓட்டுநர் எதிர்நோக்கும் சவால்கள்.
>> Saturday, February 23, 2013
தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்கும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம்!
>> Friday, February 15, 2013
கடந்தாண்டு கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025, தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்ககூடியது என தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் திரு.க.ஆறுமுகம் அண்மையில் மக்கள் நிருபர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதோ அப்பேட்டியின் காணொளி :
Read more...வீதியில் படுத்துறங்கும் தூதர்
>> Thursday, February 7, 2013
பினாங்கு மாநிலத்தை பொருத்தமட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு பினாங்கை அறிமுகப்படுத்தும் தூதர்களாக இந்த முச்சக்கர சைக்கிளை ஓட்டிவருபவர்கள் திகழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு ஒதுங்குவதற்க்குக் கூட ஒரு கூரை இல்லாதது மனதிற்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாகும். திரு.முனியாண்டி (வயது 64) கடந்த 42 வருடங்களாக முச்சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார். அவர் மக்கள் நிருபருக்கு அளித்த பேட்டி இதோ..
Read more...பழமைகளை விரும்பும் ஜோடி
>> Monday, June 4, 2012
’ஒருவரின் குப்பை மற்றொருவருக்கு புதையலாகிறது’ என்பது எவ்வளவு உண்மை என்பதனை பிரகாஷ், புனிதா தம்பதியரைக் கண்டவுடன் தெரிந்து கொண்டேன். கடந்த ஜூன் 2-ல் பினாங்கு டத்தோ கிராமாட் எனும் இடத்தில் இவ்விருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பலமுறை அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாளிகைகளிலும் பார்த்திருந்தபோதிலும் நேரில் சந்தித்து அவ்விருவரும் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சியினை காணும்பொழுது ஒரு பிரமிப்பு எனக்குள் ஏற்பட்டது. தமிழர்கள் மற்றும் பெரானாக்கான் இனத்தவர் பயன்படுத்திய பழமையான பொருட்களை சேகரித்துவரும் இவர்கள் இதுவரை 1,400 வகையான பழம்பொருட்களை தங்களுடைய அடுக்குமாடி வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாத்து வருகின்றனர். 200 ஆண்டுகால மலேசியத் தமிழர்களின் வரலாற்றை பரைச்சாற்றும் கண்காட்சியகம் ஒன்றினை பினாங்கில் திறக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்கால ஆசை. இவர்களின் கனவை மெய்யாக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியத் தமிழர்களின் கடமையல்லவா? இதோ அவர்களை நான் பேட்டிக் கண்ட காணொளி உங்களின் பார்வைக்காக...
இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012
>> Tuesday, May 29, 2012
கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பினாங்கு மாநில அளவிலான 2012-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் படிக்க : http://cj.my/post/65809/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/
Read more...இந்திய மலேசியர்களின் எழுச்சி நாள்
>> Friday, November 25, 2011
இன்றோடு இந்திய மலேசியர்களின் அறப்போராட்டமானதும் எழுச்சி நாளுமான 25 நவம்பர் மாபெரும் இண்ட்ராஃப் பேரணி நடைப்பெற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இத்தினத்தையொட்டி மாநில இண்ட்ராஃப் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்நாளை நினைவுகூரும் வகையில் நாடுதழுவிய நிலையில் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் நடக்கவிருக்கின்றன. பொதுமக்கள் தவறாமல் வழிபாட்டில் கல்ந்து கொள்ளவும். மேலும் தகவல்கள் இங்கே : இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஏற்பாடு
போராட்டம் தொடரும்... Read more...
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்
>> Thursday, January 6, 2011
இண்ட்ராஃப் தலைவருடன் ஒரு நேர்காணல்
>> Saturday, October 23, 2010
போராட்டம் தொடரும்... Read more...
சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!
>> Wednesday, March 17, 2010
அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.
பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-
பாகம் 2
போராட்டம் தொடரும்... Read more...
புவா பாலா மக்களே! கொடுக்கறத வாங்கிட்டு போங்க..!
>> Thursday, August 13, 2009
சில நாட்களுக்குமுன், நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மின் தூக்கியில் நுழைந்த சமயம் என் அண்டை வீட்டுக்காரைப் பார்க்க நேர்ந்தது.
நான் கைகளில் தமிழ் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.
"என்னையா இது அநியாயமா இருக்கு!"
அவர் எதைப்பற்றி கூறுகிறார் என்பதனை யூகித்தவனாய், ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நாளிதழைப் புரட்டத் தொடங்கினேன்.
"சும்மா கொடுக்கறத வாங்கிட்டு போக வேண்டியதானே இவனுங்க..."
அவரை நிமிர்ந்துப் பார்த்தேன்.
சில நிமிடங்களில் மின் தூக்கி கீழ் மாடியை வந்தடைந்தது.
மின் தூக்கியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க என் அண்டை வீட்டுக்காரர் வெளியேறியக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாரே மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன்.
அவர் ஒருவேளை மனதில் நினைத்திருக்கக் கூடும்.
"இந்த சனியன் கிட்ட இப்படியொரு கேள்விய கேட்டு மாட்டிகிட்டோமே...!"
அவரிடம் அப்படி என்ன பேசினேன் என்று நான் கூற ஆரம்பித்தால் நிறைய தணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதனால், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பேட்டியைக் கேட்டு புரியாத சில விடயங்களை அறிந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கூடிய விரைவில் ஆங்கில மொழிப் பேட்டியும் வெளியிடப்படும்..
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( குறள் எண் : 423)
ராசீவ் காந்தி மரணத்தின் மர்மங்கள் !
>> Monday, December 22, 2008
இக்கொலை நடந்து 17 ஆண்டுகளாகிவிட்டன.. விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்ட பழி இன்னும் இந்திய, இலங்கை அரசியல் வட்டாரங்களில் பகடைக் காய்களாக உருண்டு கொண்டிருக்கின்றன..
உண்மையில் ரசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகளா?
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
Read more...
இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி...
>> Friday, October 24, 2008
திரு.வேதமூர்த்தி கூறியிருக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் சிந்திக்கப்பட வேண்டியவை. அம்னோ அரசாங்கதிற்கும் புல்லுருவிகளுக்கும் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்..! இக்கருத்துகள் அடிமட்ட மக்கள்வரையில் சென்று ஒலித்திட வேண்டும்!!
தலைவர் திரு.வேதமூர்த்தியின் நேர்க்காணல்..
>> Sunday, March 2, 2008
25 நவம்பர் பேரணிக்குப் பிறகு, இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி பல உலக நாடுகளுக்குச் சென்று மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை விளக்கினார். அப்பயணத்தின் ஒரு அங்கமாக திரு.வேதமூர்த்தி அவர்கள் ஆஸ்திரேலியா சென்று வந்தார். அங்குள்ள தமிழ் வானொலி நிலையமான தமிழ் நாதம் திரு.வேதமூர்த்தியைச் சந்தித்து அவருடனான ஒரு நேர்க்காணலை ஏற்பாடு செய்தது. அந்நேர்க்காணலில் திரு.வேதமூர்த்தியிடம் மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைப் பற்றி பல கேள்விகள் கேட்க அவர் இப்படி பதிலளிக்கிறார்...



