சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை!
>> Monday, May 31, 2010
பினாங்குவாழ் எ.சு.பி.எம் / எ.சு.தி.பி.எம் முடித்த மற்றும் மெட்ரிகுலேசனில் பயிலும் மாணவ மாணவியரின் கவனத்திற்கு..
எ.சு.பி.எம் மற்றும் எசு.தி.பி.எம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மெட்ரிகுலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் அரசு உயர்கல்விக்கூடங்களில் பயின்றும் அரசு உபகாரச் சம்பளம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் உடனடியாக பினாங்கு மனித உரிமைகள் கட்சியினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த மே 29-ஆம் நாளன்று, மனித உரிமைகள் கட்சியின் தலைமையகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றிராத ஏழு இந்திய மாணவர்களை பேட்டி எடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக அம்னோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தனர்.
இதேப்போன்றதொரு நடவடிக்கையினை நாடு தழுவிய அளவில், மனித உரிமைகள் கட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பினாங்கு மாநிலத்தில் இனவாதக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு துணிந்து உரிமையைக் கேட்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களும் ஒன்று சேர்ந்தால், இந்த இனவாத அம்னோ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய முடியும்.
காலங்காலமாக தகுதிபெற்ற நம் ஏழை இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வித் துறைகளை தட்டிக்கழித்து நம் சமூகத்தை நடைப்பிணமாக்கிக் கொண்டு வரும் போக்கை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாது, இனியும் இக்கொடுமையான ஓரங்கட்டுதலைப் பார்த்து வாய்மூடி கிடக்காது துணிந்து உரிமையைக் கேட்க முன்வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :-
திரு.கணேசன் : 012-4803284
திரு.கலைச்செல்வம் : 012-5637614
திரு. கனகசுந்தரம் : 017-4155449
பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள ஆவண செய்வோம்.
போராட்டம் தொடரும்...