நாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!

>> Tuesday, September 7, 2010போராட்டம் தொடரும்...

Read more...

’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை

>> Sunday, September 5, 2010


இன்று (ஞாயிற்றுக்கிழமை 05-09-2010 ) பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் அலுவலகத்தில் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையின்றி குடியுரிமையற்றவர்களாக வாழும் இந்தியர்களுக்காக உதவும் வகையில் ‘மக்கள் சேவை தினம்’ எனும் நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வில் பிறை, புக்கிட் மெர்தாஜாம், பாகன் செராய், பெர்மாத்தாங் பாவோ மற்றும் பினாங்குத் தீவு ஆகிய இடங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடற்ற இந்திய குடும்பங்கள் வருகை புரிந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல குடும்பங்களை மனித உரிமைக் கட்சியினர் ம.உ.க செயலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர்.


மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகர் திரு.நா.கணேசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முதல் அங்கமாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. 1,50 000 நாடற்ற மலேசிய இந்தியர்களின் தொடர்பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக களைவதற்கு ஆவண செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் திரு.நா.கணேசன் வலியுறுத்தினார். இந்நாட்டில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ரசீது கிடைக்கும். ஒரு வளர்ப்புப் பிராணியை வாங்குவதென்றாலும் அதற்கென்று உரிமம், சான்றிதழ் பெற்றாகவேண்டும். ஆனால், இந்நாட்டில் பிறந்த 1,50 000 இந்திய குடிமக்களுக்கு சான்றாக பிறப்புப் பத்திரம் இல்லாத அவல நிலை இன்றுவரை தொடர்ந்துவருவது வேதனைக்குறிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.


மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14(1)(b)-யின் படி இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய பிறப்புரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாட்டுச் சபையின் உலகலாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். நாடற்ற மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கிவருகின்றனர். ஏழ்மை நிலை, திருமணத் தடை, பாதுகாப்பற்ற மற்றும் அடிமைத் தொழில், சுகாதார மற்றும் மருத்துவச் சேவை புறக்கணிப்பு, ஆரம், இடைநிலை மற்றும் உயர்க்கல்வி நிராகரிப்பு, மலிவு விலை வீடு, அர்சாங்க வாடகை வீடு, அரசாங்க உதவிகள் நிராகரிப்பு, வங்கியில் கடனுதவி மறுப்பு, குடியுரிமையற்ற குழந்தைகள், காவல்த்துறையினரிடம் பிடிபடுதல், வாகனம், வியாபார உரிமம் மறுப்பு, காப்புறுதி, பங்குகளை வாங்க நிராகரிப்பு, சமய உரிமை புறக்கணிக்கப்பட்ட நிலை என பலவகையில் கள்ளக்குடியேறிகளைவிட மோசமாக வாழ்ந்து வரும் மலேசிய இந்திய மண்ணின் மைந்தர்களின் குடியுரிமைப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.மூன்றே வாரங்களில் ஓர் இந்திய குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கட்சியின் தலையீட்டால் பதிவிலாகா பிறப்புப் பத்திரங்களைக் கொடுக்கும்போது, ஏன் 1,50000 மலேசிய இந்தியர்களுக்கு கொடுக்க்க்கூடாது என திரு.நா.கணேசன் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்நிகழ்விற்கு வந்திருந்த சுமார் 15 குழந்தைகள் பிறப்புப் பத்திரம் இல்லாததனால் பள்ளிக்குச் செல்லாமல் உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, கனரக வாகன உதவியாளராக வேலை செய்வது, கோழிப் பண்ணையில் எச்சங்களை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வருவதை உருக்கமாக கூறியபோது வந்திருந்தோரை கவலையில் ஆழ்த்தியது. அதனையடுத்து 80 இந்திய குடும்பங்களுடன் இணைந்து மனித உரிமைக் கட்சியினர் பதாகையேந்தி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அனைவரும் ஹிண்ட்ராஃப் வாழ்க! மனித உரிமை வாழ்க! என கோஷமிட்டனர்.

மதியம் 12.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மதிய உணவிற்குப்பின் மனித உரிமைக் கட்சியினர் 80 குடும்பங்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கவனித்து உதவி செய்தனர். எதிர்வரும் 26-ஆம் திகதியன்று இவ்விந்திய குடும்பங்கள் மீண்டும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் ஒன்றுகூடவிருக்கின்றனர். பினாங்கு மாநில பதிவிலாகா அதிகாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் பரிசீலித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைக் கட்சி ஆவண செய்யும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியினரைத் தொடர்பு கொள்ளுமாறு திரு.நா.கணேசன் கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : திரு.நா.கணேசன் 0124803284 திரு.கலைச்செல்வம் 0125637614 திரு.அண்ணாதுரை 0174107244

போராட்டம் தொடரும்...

Read more...

இண்ட்ராஃபின் மனு வீசியெறியப்பட்டது ! உதயகுமாரை குத்துவதற்கு கையோங்கிய காவல்த்துறை அதிகாரி!

>> Wednesday, September 1, 2010போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP