இந்திய சமூகத்தின் காலக் கண்ணாடி
>> Saturday, December 18, 2010
செய்தி : தமிழ் நேசன் 18-12-2010 Read more...
என் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..
கடந்த ஆகசுட்டு மாதம் 8-ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைப்பெற்ற இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தேசிய மாநாட்டினையடுத்து, மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநாடு எதிர்வரும் சனவரி மாதம் 30-ஆம் நாளன்று பினாங்கிலுள்ள செபராங் பிறை எனுமிடத்தில் நடத்தப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கெதிரான 53 ஆண்டுகால அரசாங்கத்தின் ஓரங்கட்டுதலை முடிவுக்கு கொண்டுவர எழுந்த போராட்டம் எந்தவொரு சதிவலைக்கும் பலியாகாமல் தொடரப்பட வேண்டும் எனும் நோக்கில் நாடு தளுவிய நிலையில் சிதறிக்கிடக்கும் அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் எண்ணமே இம்மாநாட்டின் குறிக்கோளாகும்.
மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் அரசியல் ரீதியில் மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுத்து பாதுகாக்கவும், அரசியலில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களை பங்குபெறச் செய்யவும் மனித உரிமைக் கட்சி எனும் அரசியல் களம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு ஆக்ககரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் நம் உரிமை எனும் ரீதியில் ’மலேசிய இந்தியர் அரசியல் தன்னாளுமை வியூகம்’ அமைக்கப்பெற்று மலேசிய இந்தியர்களுக்கான வலுவான குரல்கள் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நம்மை பிரதிநிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இண்ட்ராஃப் போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்ட ஆதரவாளர்களின் பேராதரவோடு இயக்கப்பெற்றுவரும் மனித உரிமைக் கட்சி மலேசிய அரசியலில் இந்திய சமூகத்திற்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பொதுமக்களின் பேராதரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பினாங்கு மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவாளர்களின் பங்கினை மிகவும் எதிர்ப்பார்க்கிறோம். தன்னலம் கருதாது சமுதாய விடியலுக்காக உழைத்துவரும் இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு அளித்துவரும் பொதுமக்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இம்மாநாட்டு நிகழ்வின் பேராளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் பெயரை முன்பதிவு செய்துகொள்ள அழைக்கிறோம். மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்கு கட்டணங்கள் இல்லை, இந்நிகழ்வு முற்றிலும் இலவசமே. நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.
பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் : திரு.கலைச்செல்வம் : 012-5637614
மேலும் இம்மாநாடு வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய நன்கொடைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், நேரடியாக மனித உரிமைக் கட்சியின் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு சந்தித்து கொடுக்கலாம். மறவாமல் ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது, கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலும் அன்பர்கள் நன்கொடைகளை அளித்து உதவலாம். வங்கியின் மூலம் நன்கொடை அளிக்கும் அன்பர்கள் உடனடியாக மாநில பொறுப்பாளரிடம் குறுஞ்செய்தியோ அல்லது நேரடியாக அழைத்தோ தகவல் கொடுத்துவிடவும். வங்கியின் ரசீதினையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
பினாங்கு மாநில பொறுப்பாளர் : திரு. ஜனார்தனன் துளசி
Blogger templates made by
AllBlogTools.com
Back to TOP