சொந்த நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்கள் அமையாத தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’ அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 54 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப்பள்ளிகளை விடுவித்து உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு களமாக பள்ளி மேலாளர் வாரியம் விளங்கவிருக்கின்றது. பள்ளிகளின் நில மற்றும் மானிய விவகாரங்களை பொது மக்களின் துணைகொண்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் ஒரு குரலாக பள்ளி வாரியம் உருவாக்கம் காணவுள்ளது. இம்முயற்சியின் முதற்கட்டமாக பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுவதற்கு ஒரு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு இண்ட்ராஃப், தமிழியல் நடுவம் மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து நடத்தும் இவ்விளக்கக்கூட்டத்தில் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இத்தகவலை பொதுமக்களுக்கு கொண்டுச் சேர்ப்பிக்கும் வகையில் கீழ்காணும் அறிக்கைகளை நகலெடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Read more...